காலை வணக்கம்
இன்றைய பாடல்: பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
படம்: இன்று நீ நாளை நான்
இசை: இளையராஜா
பாடியது: ஜானகி
எழுதியது: வைரமுத்து
அவஸ்தையாய் காதல் செய்யும் சிவகுமாரும், அத்தனை ஒன்றும் இளமையான தோற்றம் இல்லாத லக்ஷ்மியும் பார்க்க ரொம்பவும் அழகாக இல்லையென்றாலும்…ஜானகியம்மாவின் காதலும் விரகமும் போட்டியிடும் குரலும், வெகு சிறப்பான இசையமைப்பும், பாடல் வரிகளும் செவிகளுக்கு பக்கா ட்ரீட்..
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்(2)
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம்
மழைப் பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு (2)
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா(2)
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன் வானம் …
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டுப் பொங்கொடி படர இடம் தேடுமோ
மலர் கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ(2)
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா (2)
மழை காமன் காட்டினில் பெய்ய்யும் காலமம்ம்மா
பொன் வானம்…
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments