/* ]]> */
Nov 122011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: ஒரே நாள் உனை நான்

படம்: இளமை ஊஞ்சல் ஆடுகிறது(1978)

பாடியவர்கள்: வாணி ஜெயராம், எஸ். பி. பி

தமிழில் வந்த மோஸ்ட் ரொமான்டிக் சாங்ஸ் என்று டாப் டென் வரிசைப்பட்டியல் இட்டால் நிச்சயம் இடம் பிடிக்கும் பாடல்..காதலர்களின் தேசிய கீதம் என்றுமே கூட அறிவித்து விடலாம். லொகேஷன் கோல்டன் பீச் என்று நினைக்கிறேன். அப்போதைய காதலர்களுக்கு அது தானே ” மாயாஜால்”.

படமாக்கமும் சரி ஸ்ரீபிரியா, கமல் ஜோடியும் சரி, இசையும் சரி அத்தனை அழகு, இனிமை. “ஒரே.. நாள் …உனை… நான் “என்று வாணி கொஞ்சத் துவங்கும் போதே சொக்க வைக்கும் ஒரு போதையுணர்வு பரவத்துவங்கி விடுகிறது மனவெளியெங்கும். காலங்கள் கடந்து நிற்கும் காதல் கீதம்.

ஒரே நாள்  உனை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது (2)

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க (2)

சங்கமங்களில் இடம் பெறும்

சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள்…

நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் (2)

கற்பனைகளில் சுகம் சுகம்

கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ நிலம் நான் மயக்கமென்ன

ஒரே நாள்..

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீயிருக்க (2)

கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்

கையிரெண்டிலும் ஒரே லயம்

இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள்

உனை நான்

நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது

தொகுப்பு

..ஷஹி..

இளமை ஊஞ்சலாடுகிறது, கமல், ஸ்ரீப்ரியா, ஒரே நாள் உனை நான், எஸ். பி. பி, எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்,சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், காதல் கீதம், காதல் பாடல்

ilamai oonjal aadukirathu, kamal, sreepriya, ore naal unai naan, s. p. b, s. p. balasubramaniam, vani jeyaram, sugaragam, kaalaippaniyum konjam isaiyum, love song, tamil love song

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>