/* ]]> */
Jul 172011
 

மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து மாண்புமிகு ஹோம் மினிஸ்டர் ப.சிதம்பரம் அவர்களுக்கு ஒரு கடிதம்..

மும்பை குண்டு வெடிப்பு

மும்பை குண்டு வெடிப்பு

மிஸ்டர் சிதம்பரம்,

என் போன்ற சாமானியனிடம் பேசவோ அல்லது கருத்து கேட்கவோ அல்லது கடிதம் படிக்கவோ உங்களுக்கு நேரம் இல்லை என தெரிந்தும் ஏதாவது செய்தாக வேண்டுமே அன்ற ஆதங்கத்தில் எழுதப்படும் கடிதம் இது…

1. இரண்டு வாரங்கள் முன்பு மன்மோகன்சிங் தன் மந்திரி சபையை மாற்றி அமைப்பதாய் சொல்கிறார்..  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய நிதி மந்திரியாய் கையெழுத்துப் போட்ட உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது ஏ.ராசா, தயாநிதி மாறனை நீக்கியதைப் போல உங்களையும் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பிஜேபி கூறுகிறது… சில பத்திரிக்கைகளும் அதை வழிமொழிகின்றன…

2. இந்த பரபரப்பு நாட்களில் நாட்டின் ஹோம் மினிஸ்டராய் நீங்கள் ஒரு அறிவிப்பு கொடுக்கிறீர்கள்… : கடந்த ஓராண்டு காலமாய் இந்தியா மிகவும் அமைதியாய் இருக்கிறது !” … அதாவது நீங்கள் ஹோம் மினிஸ்டராய் ஆன பிறகு பல குண்டு வெடிப்புக்களைப் பார்த்த இந்தியா அமைதிப் பூங்காவாய் மாறி விட்டது என்று… ஏன் சொல்லுகிறீர்கள்? மறைமுகமாய் மன்மோகன் சிங்கிற்கும் சோனியாவிற்கும் “நான் எவ்வளவு திற்ம்பட வேலை செய்கிறேன் பார்! என்னை அமைச்சரவையிலிருந்து நீக்குவது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்புகிறீர்கள்… உங்கள் பதவியைக் காக்க அந்த அறிக்கை உங்களுக்கு உதவியது… ஆனால் அந்த அறிவிப்பை பார்த்த எங்களைப் போன்ற சிலருக்கு பக் கென்றிருந்தது…  இதை தீவிரவாதிகள் பார்த்தால் அதுவரை இந்தியாவை மறந்து ஆஃப்கானிஸ்தான் பக்கம் ஃபோகஸ் செய்து கொண்டிருந்தவர்களுக்கும் அது ஒரு மறைமுக அழைப்பாய் இருக்கும் இல்லையா என நினைத்தோம்…

3. உங்கள் அறிவிப்பு வந்த பத்து நாட்களுக்குள் மும்பையில் குண்டு வெடிக்கிறது… நீங்கள் அது இன்டெலிஜன்ஸ் ஃபெயிலியர் இல்லை என வாதிடுகிறீர்கள்… குண்டு வெடிப்பு பற்றி எந்த முன்னறிவிப்பு அறிகுறியும் இல்லை என்கிறீர்கள்.. முன் அறிவிப்பு செய்து புது வங்கி தொடங்க அவர்கள் உங்கள் ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி கீழ் வரும் பொது வங்கி மேலாளர்கள் இல்லை… அவர்கள் அகில உலக தீவிரவாதிகள் .. அவர்களுக்கு எங்கு வசதியோ அங்கு குண்டு வைப்பார்கள்.. உங்கள் அப்ரூவலுக்கு காத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.. மும்பை குண்டு வெடிப்பு இன்டெலிஜன்ஸ் ஃபெயிலிய்ரோ இல்லையோ … அது உங்கள் ஃபெயிலியர் மிஸ்டர் சிதமபரம்!

4. முன்னெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா… நீங்கள் நிதியமைச்சராய் இருக்கும்போது இந்திய வர்த்தக முதலைகளை விட்டு விட்டு நடுத்தர வர்க்கத்தை உங்கள் வரிகளால் வறுத்தெடுப்பார்கள்…. சர்வீஸ் டாக்ஸ் என்ற ஒன்று பிறந்ததே உங்களால் தானே… இப்போதும் உங்கள் பாலிசிக்களால் தடுமாறுவது நடுத்தர வர்க்கம் தான் மும்பையில் இறந்தது சாதாரண மனிதர்கள் தான் !

5. முன்பெல்லாம் நிதியமைச்சராய் இருந்த போது கல்விக்கு கடன் என்ற பேரில் வங்கி மேலாளர்களை உருட்டி எடுத்தீர்கள்.. அதை வைத்து கல்விக் கடனுக்கே நீங்கள் தான் கடவுள் என காட்டிக் கொண்டீர்கள்… இப்போது காவல்துறையை உருட்டி எடுக்கிறீர்கள்… இருந்தாலும் அங்கங்கே சறுக்குகையில் அந்தந்த மாநில அரசு மீது பழி போடுகிறீர்கள் ! ஆனால் எல்லாவற்றுக்குமே அடிப்படை நாட்டில் உங்கள் கட்சி வளர விட்ட ஊழல்தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களோ இல்லையோ புரியாத மாதிரியே வெளியில் காட்டிக் கொண்டீர்கள்…

6. நிதித்துறையிலும் காமர்ஸ் துறையிலும் உங்கள் அழகான ஆங்கிலம் உங்களை ஓரளவு காப்பாற்றியது.. ஆனால் இது ஹோம் மிஸ்டர் சிதம்பரம்… இங்கே வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் உங்கள் உளறல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.. அது அழகான ஆங்கிலமாய் இருந்தாலும் சரி !

7. நடுவில் ஓராண்டுகள் குண்டு வெடிக்காமல் போனதற்கு காரணம் பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஒசாமா பிரச்சினைகளில் மூழ்கி இருந்ததால்… சித்ம்பரம் என்னும் சிம்ம சொப்பனம் இங்கே ஹோம் மினிஸ்டராய் பதவியேற்றதால் அல்ல என்பதைக் கூட புரிந்து கொள்ள உங்கள் ஈகோ இடம் கொடுக்காமல் போகலாம்… ஆனால் இது நீங்கள் நினைத்தபடி வரி போட இது ஃபைனான்ஸ் அல்ல… பல திசைகளிலிருந்தும் வரும் ஆபத்துக்கள் சூழ்ந்த , உங்கள் பேச்சுக்கு முழுக்க முழுக்க கட்டுப்படாத ஹோம் மினிஸ்ட்ரி என்றாவது புரிந்து கொள்ளுங்கள்… நிதியமைச்சராய் இருந்து தப்புத்தப்பாய் பான் கார்டுகள் கொடுத்ததை மக்கள் பொறுத்துக் கொண்டார்கள்… காரணம் அவர்கள் எங்கள் நிதியமைச்சர் அறிவு ஜீவி என நம்பிக் கொண்டிருந்தார்கள்… ஆனால் ஹோம் மினிஸ்ட்ரியிலிருந்து தப்பாய் தீவிரவாதிகள் லிஸ்ட் அனுப்பினீர்களே.. அது எவ்வளவு கேலிக்கூத்தானது பார்த்தீர்களா? இனியாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்படுங்கள் மிஸ்டர் ஹோம்மினிஸ்டர்… எங்களுக்கு தேவை ஆங்கிலப் புலமை மிக்க அறிவு ஜீவி அல்ல … உண்மையை புரிந்து செயல்படுகிற ஒரு ஹோம் மினிஸ்டர்!

 உங்கள்

ஸ்பைடர்மேன்

 

Tags : A letter to home minister Mr. P.Chidambaram after the mumbai blasts

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>