காலை வணக்கம்
இன்றைய பாடல் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
படம் :ஹே ராம்
இசை :இளையராஜா
பாடியவர்கள் :ஆஷா போஸ்லே , ஹரிஹரன்
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஹைகூ ஒன்று நினைவுக்கு வரும் .
Night , and The moon
My neighbour , playing on his flute -
out of tune!
இரவும் நிலவும்
என் அண்டை வீட்டுக்காரர்
புல்லாங்குழல் -
அபஸ்வரத்தில்.
அதாவது -நிலவின் அழகை ரசிக்க வேண்டுபவன் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் . முழுக் கவனம் செலுத்தி பார்க்கப்பட வேண்டிய, ரசிக்கப்பட வேண்டிய அதிசய உத்சவம் பௌர்ணமியின் பவனி ..இல்லையா?
வெளிச்சம் தீவிரமாக வேண்டுமெனில் காதுகளை மூடவேண்டும் – இசை தீவிரமாக வேண்டுமெனில் கண்களை மூட வேண்டும் .
புல்லாங்குழலை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் – முழு நிலவை வசதி போல் வாசிக்க முடியுமா? (முகத்தில் தெளித்த சாரல்- இறையன்பு) .
அப்படிப்பட்ட ஒரு காம்போசிஷன் , படமாக்கம் ,வரிகள், இமோஷன் எல்லாமுமான பாடல் தான் இது. மிக அரிதாக நிகழ்ந்து விடும், வாய்த்து விடும் பௌர்ணமியின் பேரழகை ஒத்த ஒரு படைப்பு !
ம்ம்ம்ம்ம்..என்ற ஹம்மிங் தொடங்கும் போதே இமைகள் தாழ்த்திக்கொண்டு பாடலுக்குள் செல்லாதவர் யார் ? ஒரு சோகமும் சுகமுமான ராக வீதியில் ஆஷாவும் ஹரிஹரனும் மயிற்பீலி ஒன்றைப் பற்றிக் கொள்ளச் செய்து நம் ஆன்மாவை மிதந்து வரச்செய்யும் பாடல் .
கேட்கும் போதெல்லாம் ,ஒவ்வொரு முறையும் ஒரு டிவைன் ஃபீலிங் ..
என் உயிருக்கு மிக நெருக்கமான உணர்வு…நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனி மேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை
உயிரே வா…
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா ..
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (2)
நமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி (2)
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (2)
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (2)
உயிரே வா …
ஆங்கிலத்தில் பாடல் வரி :
Nee partha parvaikkoru nandri,
Namai saertha iravukkoru nandri,
Ayaraadha iLamai sollum nandri nandri,
Ahalaadha ninaivu sollum nandri nandri,
Naan endra sol ini vaendaam,
Nee aenbadhae ini naan dhaan,
Inimaelum varam kaetka thaevayillai,
Idhupol vaeraengum sorgamillai,
Uyirae vaa…
Naadagam mudindha pinnaalum,
Nadippinnum thodarvadhu enna,
Oranga vaedam ini podhum pennae,
Uyir pogum mattum un ninaivae kannae,
Uyirae va…
Nee partha parvaikkoru nandri,
Nee partha parvaikkoru nandri,
Namai saertha iravukkoru nandri,
Namai chaertha iravukkoru nandri,
Ayaraatha ilamai sollum nandri nandri,
Ayaraatha ilamai sollum nandri nandril
Ahalaadha ninaivu sollum nandri nandri
Aalaadha ninaivu sollum nandri nandri,
Uyirae vaa…
தொகுப்பு
..ஷஹி..
tags
kamal, ranimukerji, hey ram, Hey Ram, haiku, nee partha parvaikkoru nandri, nee partha parvaikkoru nandri song, nee partha parvaikkoru nandri song lyrics, video, sugaragam, kalaippaniyum konjam isaiyum, asha bonsle, hari haran, ilaiyaraja
கமல், ராணி முகர்ஜீ , ஹே ராம், ஹைகூ , நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் வரிகள் , சுகராகம் , காலைப்பனியும் கொஞ்சம இசையும், இளையராஜா , ஆஷா போஸ்லே , ஹரிஹரன்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments