/* ]]> */
Jul 152011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை – துலாம்

 

துலாம் ராசி

துலாம் ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரித்து வரும் குருபகவான், உங்களுக்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்கி வந்தார். இப்படியாக பல வகையிலும், பலவித நல்ல பலன்களாக  நடந்து வந்துகொண்டிருக்கும் வேளையில் 15. 8.11 அன்று  மேஷ ராசியில் வக்கிரமடையும் குரு 25.12.11வரை வக்கிர கதியிலேயே சஞ்சரிப்பதால்,இந்த நாலு மாத காலங்கள் மட்டும் கொஞ்சம் டல்லாக இருக்கும். மீண்டும் படுத்தல்கள் தலைதூக்கும். எந்த ஒரு காரியமானாலும் அப்படியப்படியே நிற்கும். எந்த விஷயத்திலும்  சுறுசுறுப்பு இருக்காது.  மேலும் இப்போது உங்கள் உடல்நலத்துக்கும் சின்னசின்னத் தொந்தரவுகள் வரும். வைத்தியச் செலவுகள் ஏற்படும்.  மேலும் இப்போது சுபநிகழ்ச்சிகளில் தடை ஏற்படவும், பிரயணத் தடங்கல்கள், தடைகள், தாமதங்கள் இப்படியான சில சாதகமற்ற பலன்களாகவே நடைபெறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுது. நீங்க ரொம்ப உஷாரா இருக்கவேண்டிய நேரம். புதிய முயற்சிகள் எதுவானாலும் இந்த சமயத்தில் ஈடுபடாமல் சற்று தள்ளிப்போடுவ்து நல்லது. இந்தசமயத்தில் செலவுகள் கூடுதலாகவும், வருமானம் குறைவாகவும் இருக்கும். மற்றும் இந்த சமயத்தில் தேவையற்ற பிரச்சினைகள் அனாவசிய சிக்கல்கள், வீண்தொந்தரவுகள், வீண்வம்புகள் வீடு தேடிவந்து உங்களை டென்ஷனாக்கிடும். இந்த சமயத்தில் சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் வந்து மனநிலையை பாதிக்கும். எந்த ஒரு காரியமானாலும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போவும். மேலும் இந்த சமயத்தில் எந்த ஒரு விஷயமானாலும் சட்டு புட்டுன்னு முடியாம டென்ஷன்தான் ஜாஸ்தியாகும். செய்துவரும் தொழில்/ வியபாரம்கூட இப்போது நஷ்டத்தில்தான் போகும். வருமானம் குறைவதற்கும், வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு காணப்படுது. கொடுக்கல்- வாங்கலில் மந்தமான சூழ்நிலை காணப்படும்.  மேலும் இந்த சமயத்தில் பிரச்சினைகள் பலரூபத்தில் வந்து டென்ஷனாக்கிடும். முகத்தில் ஏதோ ஒரு சோகத்தின் சாயல் இருந்துகொண்டே இருக்கும். தேஜஸ் குறையும். உடலில் அசதி இருக்கும். மனதில் உற்சாகம் என்பது இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதிற்கு கவலையைக் கொடுக்கும். அவர்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிரிகளால்  தொல்லை துயரங்கள் ஏற்படும். சிலருக்கு நகை அடகு வைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த சமயத்தில் சிறிய பிரச்சினைகள் கூட உங்களுக்கு மலைபோலத் தெரியும். இதற்குக் காரணம் உங்கள் மனோதிடம் இந்த சமயத்தில் குறைந்துபோவதுதான். அலைச்சல்கள் அதிகமாகும். நிம்மதியான உணவுகூட நேரத்துக்கு கிடைக்காமல் போகும்.  மனதில் விரக்தி ஏற்படும். ஆசைகள் நிறைவேறாததால், மனதில் சஞ்சலம் அதிகமாகும். சிலருக்கு தொழில்-கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலருக்கு கூட்டுத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு கூட்டுத் தொழில் பாதிப்படையும். சிலருக்கு உங்களுடைய நடவடிக்கைகள் நூதனமாகவும் கேள்விக்குரியதாகவும் இருக்கும். அரசியல் வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலம் இது. தேவையற்ற வம்பு வழக்குகளுக்கும், கவலைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகவேண்டிய நிலை வரக்கூடும். தற்சமயம் முடிந்தவரை பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. ஏனென்றால் பயணங்களால், விரயச் செலவுகளும், தேவையற்ற பிரச்சினைகளும்தான் ஏற்படுமேயன்றி, ஆதாயம் ஏதும் உங்களுக்கு இருக்கப்போவது இல்லை. மேலும் இந்த சமயத்தில், உடல்நலத்திலும் உணவு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மொத்தத்தில் இந்த வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு நன்மையைத் தராது.

பரிகாரம்:-

ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் பிரச்சினையைத் தீர்த்து நீங்கள் முன்னேற வழிவகுக்கும்.  நவகிரகங்களில், சனி பகவானுக்கும், ராகு-கேது ஆகியோருக்கும், அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்ட பின்பு உண்ணுங்கள். ஞானிகளை சந்தித்து, காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வழிபடுங்கள். தஞ்சை மாவட்டம் ஆலங்குடி சென்று, குருவழிபாட்டையும், வாரந்தோறும்  வியாழக்கிழமை குரு வழிபாட்டையும், வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது. சதுரகிரிக்கு சென்று  ஸ்ரீ சுந்தர மஹாலிங்க சாமியை தரிசனம் செய்து வரவும். சிவபக்தருக்கு தான தருமம் செய்து வரவும். மீன்களுக்கு பொறி போடவும்.  யோகமுண்டாகும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi thulam rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>