/* ]]> */
Jul 152011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை – மகரம்

 

மகர ராசி

மகர ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு நாலாமிடத்திலிருந்த குரு உங்களுக்கு எல்லா நல்ல பலன்களையும் வழங்கி  வந்தார். நாலாமிடத்திலிருந்த குரு, அங்கிருந்து,உங்கள் ராசிக்கு எட்டாமிடம்,  பத்தாமிடம், பனிரண்டாமிடம்,ஆகிய ஸ்தானங்களை முறையே, ஐந்தாம் பார்வை, ஏழாம் பார்வை, ஒன்பதாம் பார்வையாகப் பார்ப்பது மிகவும் விஷேஷமானதால், உங்களுக்கு இருந்துவந்த சிக்கல்களும், குழப்பங்களும் மாறி,  மிக நல்ல பலன்களாக அனுபவித்து வந்தீர்கள். வசந்தக்காற்றை நீங்கள் அனுபவித்து வந்த வேளையில், வருகிற 15.8.11. முதல், 25.12.11.வரை உள்ள  காலத்தில்,  குரு மேஷத்தில், வக்கிர சஞ்சாரத்தில்  இருக்கப் போகிறார். இந்த சமயத்தில் எல்லா விஷயங்களிலும் சற்று மந்தமான போக்கே காணப்படும். எந்த ஒரு காரியமானாலும் இழுபறியாகவே இருக்கும். சட்டுப்புட்டுன்னு எதுவும் நடக்காது. மேலும் உடல்நலத்தில்கூட, சின்னசின்னத் தொந்தரவுகள் ,குறைபாடுகள் அடிக்கடி தலை காட்டும். வைத்தியச் செலவுகள் வந்து சேருவதற்கும் வாய்ப்பு காணப்படுது. படுத்தல்கள் பல ரூபத்தில் வந்து தொலையும். சொந்த தொழில்/ வியாபாரம்கூட இப்போது டல்லடிக்கும். மத்தபடி, இந்தக் காலக் கட்டத்தில், வருமானம் பாதுப்படைவதற்கும், வரவேண்டிய பணம் வசூலாவதில் தாமதம் ஏற்படுவதற்கும்,  வாய்ப்பு காணப்படும். மற்றும் இந்த சமயத்தில்,  மற்றும் இந்த சமயத்தில், தேவையில்லாத பிரச்சினைகள், அனாவசிய சிக்கல்கள், வீண்வம்புகள், தண்டச் செலவுகள் வீடு தேடிவந்து  உங்களை டென்ஷனாக்கும்.  மத்தபடி இந்தக் காலக் கட்டத்தில் நீங்க மிகுந்த எச்சரிக்கயாகவும்,  நிதானமாகவும்,  இருக்கவேண்டும். மேலும் இந்த சமயத்தில், எந்த ஒரு காரியமானலும், தாமதங்களும் தடங்கல்களும், தடைகளும் வந்து சேரத்தான் வாய்ப்பிருக்குது. புதிய முயற்சிகள் எதுவானாலும் இப்போது தள்ளிப்போடுவது சாலச் சிறந்தது. எந்த ஒரு சுப நிகழ்ச்சியானாலும் கிட்டத்தில் வந்து தட்டிப் போகும். இப்போது குடும்பத்தில் ஒரு குழப்பமான் ஒரு சூழ்நிலையே நிலவும். ஒரு சிலருக்கு கடன் அதிகமாக்குவதற்கு வாய்ப்பிருக்குது. மேலும் ஒரு சிலருக்கு அரசங்கத்தில் இருந்துகூட ஏதாச்சும், தொந்தரவுகள், கெடுபிடிகள், வந்து சேரும். பொதுவாக இக்காலத்தில், செய்யும் காரியங்களை யோசித்துச் செய்வது நல்லது. சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். உடன்பிறப்புகள், உங்களுக்கு எதிராகச் செயல்படுவர். நீண்ட தூரத்தில் இருந்துவரும், தொலைபேசிவழித் தகவல், உங்கள் நிம்மைதியைக் குறைக்கலாம். நிச்சயிக்கப்பட்ட சில செயல்களை மாற்றியமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. கொள்கைப் பிடிப்பையும்கூட கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவி உறவில் கருத்துவேறுபாடுகள் ஏற்படும். வழக்கு, வம்பு, வியாஜ்ஜியங்கள் என்று ஒன்றுக்கும் குறைவிருக்காது. கோர்ட் கேஸ்கள் நிலுவையில் இருந்தால், தீர்ப்பு பாதகமாகத்தான் வரும். மாணவர்களுக்கும் படிப்பில் நாட்டம் குறைவதோடு, கல்வித் தடைகூட ஏற்படலாம்.  எந்த காரியங்களும் வெற்றியை சுலபத்தில் பெற்றுத் தராது என்பதால், எல்லாவற்றிலும் நிதானம் தேவை.

பரிகாரம்:-

வியாழந்தோறும் குரு வழிபாட்டை மேற்கோள்ளவும். பூம்புஹார் அருகில் உள்ள திருவெண்காட்டுக்குச் சென்று, அங்குள்ள புதனையும் மேதா த்ட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால், ஆதரவுக்கரம் நீட்டுபவரின் எண்ணிக்கை அதிகமாக்கும். த்ட்சிணாமுர்த்திக்கு மஞ்சள்நிறமாலை அணிவித்து வழிபடுவது மிகமிக விஷேஷம். குரு பகவானுக்கும், வினாயகருக்கும் அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமைதோறும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள். துர்க்கை வழிபாடு, இடர்பாட்டை துடைக்கும். சிவகங்கை மாவட்டம், அரியக்குடி பெருமாள்,ஆலயம் சென்று சனிக்கிழமை வழிபாடு செய்யவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடவும். முடிந்தால், அன்னதானம் செய்யவும். வீட்டில் துளசி வழிபாட்டையும் செய்வது நல்லது.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi magaram rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>