/* ]]> */
Jul 152011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை – கும்பம்

கும்ப ராசி

கும்ப ராசி

இப்போது உங்கள் ராசிக்கு மூணாமிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால், உங்களுக்கு  வந்த ஏகப்பட்ட தொல்லைகளை அனுபவித்தீர்கள்.  எல்லா விஷயங்களிலும் சச்சரவுகளும் , பார்த்துக்கொண்டிருக்கும் வேலையைக்கூட விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்பது போன்ற குழப்பங்களும் வந்து சேர்ந்தன.  இப்படியாகப் பலவகையிலும் பிரச்சினைகளாகவே வந்துகொண்டிருக்கும் வேளையில், 15.8. 11ல் ஏற்படப்போகும் குருவின் வக்கிர சஞ்சாரம், 25.12.11ல் முடிவடையும்வரை நற்பலன்களாகவே நடந்துவரும்.  இதுவரை காணப்பட்டு வந்திருந்த அனைத்து விதமான பிரச்சினைகளிலிருந்தும்,, தொந்தரவுகளிலிருந்தும் நிவர்த்தியாகலாம். முதலில் உங்கள், உடல்நலத்தில் காணப்பட்டுவந்த தொந்தரவுகள் முற்றிலுமாக நிவர்த்தியடைந்து,  பூரண குணமடைந்து, நல்ல ஆரோக்கியமாகக் காணப்படும். மேலும் இந்த சமயத்தில், மத்த கிரக நிலவரங்களும், சாதகமான இடங்களில், வீற்றிருப்பதால், மிகமிக சிறப்பாகவே காணப்பட்டு வரும். இப்போது நீங்கள் செய்துவரும் தொழில்/ வியாபாரம் நல்லபடியாக நடந்து , நல்ல லாபம் காணலாம். இந்த சமயத்தில், உங்களது வருமானம் கூடுதலாக வருவதற்கும், வரவேண்டிய பழைய பாக்கிகள் உடனுக்குடன் வசூலாகவும் வாய்ப்புகள் காணப்படும். ஒரு சிலருக்கு இந்த சமயத்தில், புதுசாக ஏதாவது தொழில்/ வியாபரம் ஆரம்பிக்கவும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும். மேலும், இந்த சமயத்தில் உங்க முயற்சிகள் எதுவானாலும், வெற்றியடைய வாய்ப்பிருக்கு.  மேலும் ,ஒரு சிலருக்கு வேலையில்/ உத்தியோகத்தில் காணப்பட்டு வந்திருந்த பிரச்சினைகள் இப்பொது நிவர்த்தியாகி, உயர்வுகள் தேடிவந்து சேரும். அனைத்துவிதமான தடங்கல்களும், தடைகளும், முட்டுக்கட்டைகளும் விலகி, எந்த ஒரு காரியமானாலும், இப்போது உடனுக்குடன் நடந்து முடிந்து மனதுக்கு மகிழ்ச்சி தரும். இதுவரை தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இப்போது உடனுக்குடன் நடந்து முடிஞ்சிடும்.  வேலை தேடிக்கிட்டிருக்கும் நபர்களுக்கு இப்போது உடனுக்குடன் வேலை கிடைச்சுடும். சிலருக்கு இந்த சமயத்தில் சொந்த வீடு அமையும். இப்போது நீங்க தொட்டது துலங்குறதுக்கும், நினச்சது நடக்குறதுக்கும், நிறைய வாய்ப்பிருக்கிறது. மேலும், நீங்க எதிர்பார்க்கிற இட்ங்களிலிருந்து நல்ல தகவல்களும், மகிழ்ச்சியான செய்திகளும்  உங்களைத் தேடிவந்து சேரும்.  அரசங்கத்திலிருந்து ஆகவேண்டிய காரியங்கள் எதுவானலும், உடனுக்குடன் நடந்து முடியும். மேலும், அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் எதுவானலும் உடனடியாக கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுது. இந்த சமயத்தில் குடும்ப மகிழ்ச்சியும் ஒற்றுமையும் மேலோங்கும். கலைஞர்களுக்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கும்,  இந்த காலக்கட்டம் அமோகமாக இருக்கும். புதிய பொருள்களும், விலை உயர்ந்த பொருள்களும் வீட்டை வந்தடையும். மற்றும் இப்போது உங்களுடைய நீண்ட நாளைய ஆசைகள், கனவுகள் எதுவாக இருந்தாலும், உடனடியா நிறைவேறிடும். பலவகைகளிலும் நற்பலன்களாகவே நடந்துகொண்டிருக்கும்.உடலநலம் குன்றிய தாயார் உடல்நலம் பெறுவார்.  புதிய வண்டி, வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். விலகிப்போன உறவுகள்
உங்களைத் தேடிவரும். எடுக்கும் செயல்கள், மற்றும் முயற்சிகள் அனைத்திலும், உங்கள் புத்திசாதிர்யமும், திறமையும் வெளிப்பட்டு வெற்றியடைவீர்கள். நல்ல உணவு, நல்ல உடை ,நல்ல ஓய்வு, நல்ல உறக்கம் இவைகளை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மேன்மை யடைவர். அவர்களால், உதவி கிடைக்கும். மனோபலம் மேலோங்கும். சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம், இவை  சிறக்கும்/ கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சி உடையதாக இருக்கும். புத்திர- புத்திரிகள் மேன்மையடைவர்கள். அவர்களுக்கு கல்வி, சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். பெற்றோர்களால், பல நன்மைகள் உண்டு. மனோபலம் அதிகரிக்கும் .

பரிகாரம்:-

வாரந்தோறும், வியாழக்கிழமை, குருவழிபாட்டை மேற்கொள்வதோடு, தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூரில், உள்ள முல்லைவன நாதர், கர்பகரட்சாம்பிகை திருக்கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும், குரு தட்சிணமூர்த்தியை  முல்லை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.  சிவன் கோவிலுக்குச் செல்வதும்,   சிவன் வழிபாடு செய்வதும் சிறந்தது.  பத்ரகாளியம்மனையும், சித்ரகுப்த நயனாரையும்  வணங்கலாம். புதுகை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள கோட்டை ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சனிக்கிழமை சென்று வரவும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கவும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi kumbam rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>