/* ]]> */
Jul 142011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை -மிதுனம்

மிதுன ராசி
மிதுன ராசி

இதுவரை நல்ல பலன்களாகவே நடந்துவந்த  உங்களுக்கு  குருவின் வக்கிர காலமான 15.8.11 முதல், 25.12.11 வரையிலுள்ள நாலு மாத காலங்கள்கொஞ்சம் மந்தமாகவும் டல்லாகவும் இருக்கும். இந்த  சமயயத்தில், எந்த ஒரு புது முயற்சியிலும் இறங்காமலிருப்பது நல்லது. மேலும் இந்த காலக் கட்டத்தில் தேவையில்லாத பிரச்சினைகள், அனாவசிய சிக்கல்கள், வீண்தொந்தரவுகள், வீண் வம்புகள் இப்படி ஏதாச்சும் வீடு தேடி வந்து உங்களை டென்ஷனாக்கிடும். நீங்க ரொம்பரொம்ப உஷாரா இருக்கவேண்டிய நேரம். இந்தக் காலக்கட்டத்தில் உங்க முயற்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். செய்துவரும் தொழில்/ வியாபாரம் மந்தமடையும். வருமானம் பாதிப்படையக்கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேருவதில் காலதாமதமாகும். உடல்நலத்தில் இப்போது சின்னசின்னத் தொந்தரவுகள் வரும். வைத்திய செலவுகளைத் தவிர்க்க முடியாது. இந்த சமயத்தில் குடும்பத்தில் குழப்பமான நிலைதான் காணப்படும். இந்த சமயத்தில் உறவினர்- நண்பர்கள் விரோதம் அடையிறதுக்கும் வாய்ப்பு காணப்படுது. எந்த ஒரு காரியமும் சட்டுப்புட்டுன்னு நடக்காம இழுத்துட்டுப் போறதுக்கும் வாய்ப்பிருக்கு. தண்டச் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு அரசாங்கத்திலிருந்துகூட ஏதாச்சும் தொந்தரவுகள், சிக்கல்கள், தொல்லைகள் தேடிவந்து சேருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எதையும் சிந்தித்து செயலாற்றும் திறன் குறையும். தங்களுடைய புத்திசாலித்தனம் செயல்படமுடியாமல்போக  வாய்ப்புண்டு. ஆனால், எதற்கும் ஒன்றுக்குப் பத்து தடவை யோசிச்சு  நிதானத்துடன் செயல்பட்டால் மட்டுமே   பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். குலதெய்வ வழிபாட்டில், தடைகள், ஏற்படும். புத்திர-புத்திரிகளின் கல்வி மற்றும் சுப காரியங்களில் தடை ஏற்படும். தேவையில்லாத வில்லங்கங்கள். விவகாரங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டுமானால்,  எல்லோரிடமும் எச்சரிக்கையுடன் பழகி, கவனத்துடன்  பேசினால் மட்டுமே, முடியும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல், ஒதுங்கியிருக்கவேண்டும். கவனத்துடன் பேசினால், கணவன்-மனைவி உறவில் கருத்து வேற்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தீய நண்பர்களின் சகவாசம் ஏற்படும். வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால், திடீர் நஷ்டங்கள் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் இருக்கும். அரசு,அரசு அதிகாரிகளால், சில தொல்லைகள் ஏற்படலாம். கொடுக்கல்-வாங்கலில் இழுபறி ஏற்படும். எனவே தொழில்/ வியாபாரம் முடங்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம்  ஏமாற்றம் ஏற்பலாம். இந்த நாலு மாத காலங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது ந்ல்லது.

பரிகாரம்:-

சனிக்கிழமைதோறும் பெருமாளை தரியுங்கள். நவகிரகங்களில், சனிபகவானுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். வியாழக்கிழமைதோறும்  விரதமிருந்து, குருவை வழிபடுவது நல்லது. சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் வீற்றிருந்து அருள் வழங்கும் திசை மாறிய தென்முகக் கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.

 Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi mithunam rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>