/* ]]> */
Jul 142011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்

கடகம் ராசி

கடகம் ராசி

உங்களுடைய ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கும் குரு பலவித தொல்லைகளைக் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட சமயத்தில் குருபகவான் 15.8.11. முதல் 25.12.11 வரை வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். குருவின் இந்த வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு நன்மை பயக்கும். மிகமிக சிறப்பான பலன் கிட்டும். இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலுமே ஒரு சிறப்பான மாறுதலைக் காண்லாம். இதுவரை காணப்பட்டு வந்த அனைத்துவிதமான தொந்தரவுகளும், பிரச்சினைகளும், சிக்கல்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும். மற்றும் இப்பொது உடல்நலத்தில் இருந்த எல்லாவித குறைபாடுகளும் நீங்கி நல்ல ஆரோக்கியம் காணப்படும். மேலும் இந்த சமயத்தில் வேலை தேடும் நபர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு  இந்த சமயத்தில் பதவி உயர்வு, சம்பள உய்ர்வு கிடைக்கிற்துக்கும் வாய்ப்பிருக்கு. இந்த சமயத்தில் உங்க முயற்சிகள் எதுவானாலும் வெர்றியடைய வாய்ப்பு காணப்படுது. ஒரு சிலருக்கு புதுசா ஏதாவது தொழில் தொடங்குறதுக்கும், வருமானம் மிகச் சிறப்பாக உய்ர்வடைவதற்கும் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகவும் நிறைய வாய்ப்பு காணப்படுது. பழைய கடன்கள் இப்போது அடைபடும். இந்த காலகட்டத்தில் உங்க கையில் பண நடமாட்டம் சற்று ஜாஸ்தியாகவே காணப்படும். இதுவரை தடைப்பட்டுவந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது உடனுக்குடன் நடந்தேறவும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. உங்களுடைய நீண்ட நாளைய கனவுகள் ஆசைகள், நிறவேற வாய்ப்புண்டு. இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் மறைந்து நல்ல  தெளிவான சூழ்நிலை நிலவும்.  பிரிந்திருந்த குடும்பம் இந்த காலகட்டத்தில் ஒன்றுசேரும். கணவன்-மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். மற்றும் இந்த கால கட்டத்தில் அரசாங்கத்திலிருந்து நடந்து முடியவேண்டிய காரியங்கள் உடனுக்குடன் நடந்தேறும். இந்த சந்தர்ப்பத்தில் நீங்க தொட்டது துலங்கும். நினச்சது நினச்சபடி நடந்தேறுவதற்கும், எதிர்பார்த்த இடங்களிலிருந்து நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் தேடிவந்து சேருவதற்கும் அதிகப்படியான வாய்ப்பிருக்கும். சிலர் இந்தசமயத்தில் கடனோ உடனோ வாங்கி தொழில்/ வியபாரத்தை விருத்தி செய்துகொள்வர். சுபநிகழ்ச்சிகளுக்கும் சிலர் செலவழிப்பர். இப்போது மனசில் ஓரளவுக்கு நிம்மதி இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்க கௌரவம், புகழ், கீர்த்தி மேலோங்கும். அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வவீர்கள். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் ஆரம்பிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு அனாமத்தா பண வரவு இருக்கும். வெளியூர்/ வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.   உங்கள் ராசிக்கு 6க்கும் 9க்கும் அதிபதியாக விளங்கும்  குருவின் வக்கிரகாலம் பெரும்பாலும்  நற்பலன்களாக நிகழும்.  தந்தை வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். பங்காளிப்பகை தலை யெடுக்கும். வாகனங்களை மாற்றி புது வாகனங்கள் வாங்குவீர்கள்.  பழைய வீட்டை  புதுப்பிக்கவும், புது வீடு வாங்கவும் கூடும்.

பரிகாரம்:-

வியாழக்கிழமைதோறும் குருவை வழிபட்டு வரவும். வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரரையும், நிம்மதி தரும் தட்சிணாமூர்த்தியையும்  கொண்டக்கடலை படைத்து வழிபட்டால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ராகு காலத்தில் கால பைரவரை வணங்கவும். ஏழைகளுக்கு மஞ்சள்நிற ஆடை தானம் செய்யவும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi kadagam rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>