/* ]]> */
Jul 142011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல் 25.12.11

வரை – ரிஷபம்

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி

குருவின் வக்கிர காலமான 15. 8. 2011 முதல் 25.12.2011வரை  உங்களுக்கு யோகமான காலம்தான். இதுவரை ஒண்ணு போனா ஒண்ணுன்னு புற்றீசல் மாதிரி  சிக்கல்கள் கிளம்பிக்கிட்டே இருந்தன. இந்த குருவின் வக்கிர காலமான 4 மாதங்கள், உங்களுக்கு மிகமிக நல்லாவே இருக்கும்.  உங்களது நிலவரம் தலைகீழா மாறிடும். படு சூப்பரான காலக்கட்டமா இது மாறிடும்.  இதுவரை நீங்க அனுபவிச்சுட்டு வந்த கெடுபலன்களுக்கெல்லாமிப்போது விமோசனம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள், சிக்கல்கள் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியும். இந்த சமயத்தில் உங்கள் உடல்நலத்தில் எந்தக் குறைபாடும் இல்லாமல், ஆரோக்கியமாகவே காணப்படும். மேலும் வேலைதேடி அலுத்த்ப்போனவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். மற்றும் ஒரு சிலருக்கு சொந்த தொழில்/ வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கும் இப்போது வாய்ப்பு காணப்படுது. மேலும் ஏற்கனவே நடத்திக்கிட்டிருக்கிற தொழில்/ வியாபாரம் இப்ப சூடு பிடிச்சு நல்ல லாபம் ஈட்டித்தரும். இப்போது வருமானம் இரண்டு மடங்காகும். மேலும் வரவேண்டிய பழைய  பாக்கிகள் இப்போது வசூலாகும்.  மற்ரும் இந்த சமயத்தில் உங்க கையில் பணநடமாட்டம் ஜாஸ்தியாவே இருக்கும்.
ஒரு சிலருக்கு வேலையில் உத்தியோகத்தில் பிரமோஷன் முதலிய உயர்வுகள் வந்துசேரும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணச்  சேர்க்கை கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு வந்திருந்த  சுபநிகழ்ச்சிகள், இப்போது உடனுக்குடன் நடந்து முடியும். மற்றும் நீண்ட நாளைய முயற்சிகளுக்கு இந்த சமயத்தில் பலன் காணலாம். சிலர் திடீர்ப் பயணமாய், வெளிநாடு சென்றுவரவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து சேரும்.  இப்போது நீங்க தொட்டது துலங்குறதுக்கும், நினச்சது நினச்சபடி நடந்தேறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள்  தேடிவந்து சேரும்.  இந்த காலக்கட்டத்தில் அரசாங்கத்திலிருந்து  ஆகவேண்டிய காரியங்கள் எதுவானாலும் உடனுக்குடன் நடந்துமுடிந்து மனசுக்கு மகிழ்ச்சி தரக்கூடும். ஒரு சிலர் வெளிநாட்டுத் தொடர்பு மூலம் கூட்டுத் தொழில் ஏற்பட்டு  விருத்தியடைவதற்கான வாய்ப்பு காணப்படுது. மேலும் இந்த நேரத்தில் ஒரு சிலருக்கு அரசாங்க சலுகைகள், தடையின்றிக் கிடைக்கும். உங்க கௌரவம், அந்தஸ்து, புகழ் செல்வாக்கு  அத்தனையும் கூடும்.  சிலர், நிலம்,வீடு, தோட்டம், வண்டி, வாகனமிப்படி ஏதாவது சொத்து பத்து வாங்கிப்போடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.  இப்படியாக எல்லாவிதத்திலும் நல்லதாகவே நடந்துகொண்டிக்கும்.
குரு உங்கள்  ராசியைப் பொறுத்தவரை  குரு 8,12ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குவதால், வக்ர காலத்தில் சில நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பார். அஷ்டமாதிபதியான குரு வக்கிரம் பெறும்போது, ஆச்சரியப்படத்தக்க வகையில், நல்ல பலன்களை நீங்கள் சந்திக்க நேரிடும். வங்கிக் கடன் எதிர்பார்த்தவிதத்தில் கிடைக்கும். கடன் கிடைக்கிறது என்பதற்காக கடனுக்குமேல் கடன் வாங்குவது, ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது என்று கடன் தொல்லையிலும் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரும். இதனால் நிம்மதி குறையலாம். பதினோராமிடத்து அதிபதியான குரு சில கடல் பயணங்களைக் கொடுக்கலாம். கடைசி நேரத்தில் அவை தட்டிப் போகவும் கூடும். மூத்த சகோதரத்தை அனுசரித்துச் செல்வதன்மூலம் உங்கள் முன்னேற்றத்துக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகளைத் தடுக்கலாம்.

பரிகாரம்:-

உங்கள் ராசிநாதனைப் பலப்படுத்த வெள்ளிதோறும் சாந்த ரூப அம்பிகையை வழிபடுவது நல்லது. குறிப்பாக யோக பலம் பெற்ற நாளில், வைரவன்பட்டியில் உள்ள இசைபாடும் கற்றூண்களுக்கு நடுவில் இருந்து அருள் வழங்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், திரவிய லாபம் கிட்டும். திருமால், வாமன அவதாரத்தில் காட்சியளிக்கும் படத்தையோ விக்ரகத்தையோ வணங்கி வருவது நல்லது. ஆலங்குடி, திருச்செந்தூர், குருவித்துறை போன்ற ஏதாவது ஒரு குருத் தலத்துக்கு சென்று வாருங்கள். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi rishabam rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>