குரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல்
25.12.11 வரை – சிம்மம்
இதுவரை யோகமான பலன்களாக நடந்து வந்திருக்கிறது. தற்போது 15. 8. 11. முதல், 25.12.11வரை குரு மேஷ ராசியில் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். இந்த நாலு மாத காலம் கொஞ்சம் டல்லாக இருக்கும். இந்த சமயத்தில் உங்க முயற்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கிட்டத்தில் வந்து தடைப்படும். நாலு மாதத்துக்குப் பிறகு தள்ளி நடைபெறக்கூடும். மேலும் இப்பொது தொட்ட காரியங்கள் எதுவானாலும், ஜவ்வு மாதிரி இழுத்துண்டேதான் போகும். மற்றும் இந்த சமயத்தில் உங்கள் உடல்நலத்தில் ஏதாவது தொந்தரவுகள் வந்து சேருவதற்கும் அடிக்கடி வைத்தியச் செலவுகள் வந்து சேருவதற்கும் வாய்ப்பிருக்கு. சிலருக்கு வேலையில் /உத்தியோகத்தில் சிறிதளவு பிரச்சினைகள் வந்து சேருவதற்கும், மற்றும் தேவையில்லாத பிரச்சினைகள், சிக்கல்கள் வீண்வம்புகள் இப்படி ஏதாச்சும் வீடுதேடி வரும். தொழில்/ வியாபாரம் டல்லடிக்கும். வருமானம் பாதிப்படையும். வரவேண்டிய பணம் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மற்றும் சிலருக்கு அரசாங்கத்திலிருந்து தொல்லைகள் வந்து சேரவும் வாய்ப்பிருக்கு. எந்த புது முயற்சியானாலும் நாலு மாதத்துக்கு தள்ளிப்பொடுவது நல்லது. இப்படியாக சில விரும்பத்தகாத பலன்களை இந்த குரு வக்கிர காலத்தில் சந்திக்க நேரும். சிலர் கௌரவத்திற்காகவும், வெளி உலகத்தினர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், விரயச் செலவுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலைச்சல்கள் அதிகமாகும். சரியான நேரத்தில் உண்ணவும் உறங்கவும் முடியாமல் போகும். தொழிலில் மந்தமும் ,கொடுக்கல்- வாங்கலில் தொய்வும், தாமதமும் ஏற்படும். புத்திர புத்திரிகளின் காரியங்களில் தாமதம் ஏற்படும். சுபகாரியங்களும் தடைப்படும். சிலருக்கு பூர்வீகச் சொத்தில் தற்காலிகமாக சில பிரச்சினைகள் ஏற்படலாம். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை குத்தகைக்கு விடவோ, வாடகைக்கு விடவோ, செய்வார்கள். இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் எதிரிகள் உங்களை சீண்டிப் பார்ப்பதற்கான வாய்ப்புண்டு. நியாயம், தர்மங்களைப் பின்பற்றி என்னத்தைக் கண்டோமென்று நடக்கும் செயல்களைப் பார்த்து மனதில் ஒரு வெறுப்பு உண்டாகும். பெரியோர்கள், ஞானிகள், சாதுக்கள், பெற்றோர்கள் இவர்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடிய அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகும். உங்களுடைய கல்வியும் தற்சமயம் உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும். எனவே இந்த குருவின் வக்கிர காலத்தில் கொஞ்சம் உஷாராக இருப்பது அவசியம்.
பரிகாரம்:
காரைக்குடி அருகில் உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரையும், பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள நலம் தரும் குருவையும்,மகிழ மரத்தடி முனீஸ்வரரையும் வழிபடவும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம்செல்லும் சாலையில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீரில் அமைந்துள்ள மன்னூர் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபடவும். ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யவும். துர்க்கையையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பத்ர காளியம்மனையும் வழிபடுங்கள்.
Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi simmam rasi
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments