/* ]]> */
Oct 052012
 
குரு பெயர்ச்சி பலன் - குரு பகவான்

குரு வக்ர பலன் – குரு பெயர்ச்சி 2013 – 12 ராசி பலன்

குரு பெயர்ச்சி பலன் - குரு பகவான்

குரு பெயர்ச்சி பலன் – குரு பகவான்

குரு பெயர்ச்சி 2013 பலங்கள் - குரு வக்ர பலன்கள்:

குரு பெயர்ச்சி 2013 பலன்கள் . சென்ற 2012 மே மாதம் 17-ம் தேதியன்று,  குருபகவான் ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.  திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, வருகிற 6.10.2012 முதல், 29.1.2013 வரை  குரு பகவான் வக்ர கதிக்கு செல்கிறார்.  குரு பகவான் நிற்கும் ரிஷபராசியிலிருந்து 5-ம் வீடான கன்னியில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு 9-ம் வீடான மகர ராசி வரை செய்யப்போகும் சஞ்சாரத்தினால், அந்த வெப்பத்தைத் தாங்க முடியாத குரு பகவான் கோபமடைந்து உக்ரமாகிறார். அதனால் குரு பகவான் வக்ரமாகி தனது சுபத்தன்மையை இழந்து விடுவதால், 12 ராசிகளுக்கும் பலன்களை மாற்றி வழங்குவார் என்பது ஜோதிட விதி. எனவே வாசகர்கள்  இந்த வக்ர நிலையைப் புரிந்துகொண்டு, தங்கள்  எதிர்பார்ப்புகளையும் செயல்முறைகளையும் மாற்றியமைத்துக்கொண்டால், நடக்கப் போகும் ஏமாற்றம், இழப்பு, மனவேதனை ஆகியவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளலாம்.  இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் பிறந்த ஜாதகத்தில், நிகழும் திசா-புத்திகளை ஆராய்ந்து பார்த்து, குருவின் வக்ர நிலையையும் சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டும். அதாவது, உங்களுக்கு நடந்துகொண்டிருக்கும் திசா-புத்திகள் உங்களுக்கு யோகமாக இருந்தால், குருவின் வக்ரத்தால் ஏற்படும் தீய பலன்கள் குறைவாகவே இருக்கும்.  இப்போது குரு பகவானின் வக்ர சஞ்சார பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.

மேஷம்:
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால், எல்லா வகையிலும் நல்ல மாற்றத்தையும் யோக பலன்களையும் கொடுத்து வருகிறார். தற்போது குரு வக்ர கதிக்கு ஆளாவதால், புதனும் வக்ரத்துக்கு செல்வதால், சுக்கிரனும் பலமிழந்து கன்னியில் நிற்க குரு பார்வை கன்னியில் நிற்கும் களத்திர சுக்கிரன்மேல் விழுவதால், களத்திர பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தேக ஆரோக்கியம் பாதிப்படையக்கூடும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். எனினும், புத்திர -புத்திரிகளால், பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் ஆறுதலைப் பெற்று நிம்மதியடையும். வருமானம் பெருகினாலும், செலவினங்களும் பெருகி அதைக் கரைக்கும். மனதில் புதிய தெளிவு பிறந்து புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். மன இறுக்கம் நீங்கி நம்பிக்கை துளிர்க்கிறது. நீண்ட நாள் நோய் வாட்டத்தில் அவதியுற்றவர்கள் குணமடைந்து மருத்துவ நிலையத்திலிருந்து வீடு திரும்புவார்கள். குடும்பத்திலிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, மனக்கசப்பு பகையுணர்வு அத்தனையும் விலகும். சுப நிகழ்ச்சிகள் துவங்கும். நீதிமன்றத்தில் இருந்து வந்த வழக்குகள் முடிவுக்கு வரும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வரும். களத்திரம் சம்பந்தமான வழக்குகளும் முடிவுக்கு வரும். வியாபாரம் வளர்ச்சியடையும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் முன்னேறுவர்.
பொதுவாக, இந்த வக்ர சஞ்சாரத்தில் எளிதாகக் கிடைக்க வேண்டிய எதுவும் கடின முயற்சிக்குப் பிறகே கிடைக்கும்.  திருமணம் செய்யவும் வீடு கட்ட ,மனை வாங்க எண்ணியிருப்பவர்களும்  அவற்றை 115 நாட்களுக்கு ஒத்திப்போடுவது நல்லது.  கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவது நல்லது.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தினருடன்  சிவன் கோவிலுக்கு சென்று 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவர கவலை மறைந்து நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்:
         கடந்த 2012 மே மாதம் 17-ம் தேதி முதல், உங்கள் ராசியில் குரு ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால், சொல்லொணா கஷ்டங்களை அனுபவித்து வருகிறீகள். சிலர் இடமாற்றம், பணி மாற்றம் ,கடன் தொலலை மற்றும் குடும்பத்தில் குழப்பம் என்று பலவித மனவேதனையுடன் வாழ்ந்து வருகிறீர்கள். இப்போது வக்ரத்துக்கு ஆளாகி குரு சஞ்சரிப்பதால்,  அதாவது குரு பின்னோக்கி செல்கிறது. இதனால், , பெரிய மாற்றங்கள், முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாது. தற்போது இருக்கும் பிரச்சினைகள் சிறிது குறையும். ஆனால், பெரிய மாறுதல்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு வீடு மாறுதல், பணிமாறுதல், பதவி மாற்றம் உண்டாகும். சிலர் திருமணமாகி வீடு மாறி செல்வார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். சிலரின் சகோதர சகோதரிகளுக்கு திருமணம்  நிச்சயம் ஆகும்.  குரு வக்ர சஞ்சாரத்தின்போது மனம் சந்தேக புத்தியில் தவித்து , எந்த முடிவுக்கும் வரமுடியாத குழப்பத்தில் இருந்துவரும். இதனால், தேவையின்றி குடும்ப உறவுகளிடையே பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது.
பரிகாரம்:
குடும்பத்தினருடன் சென்று  27 வியாழக்கிழமைகள் தட்சிணாமூர்த்தியை தரிசித்து நெய் தீபம் ஏற்றி வரவும்.

மிதுனம்:
இப்போது குரு உங்களுக்கு விரய குருவாக சஞ்சரித்து சுப விரயத்தைக் கொடுத்துக்கொண்டுள்ளார். இதனால், தள்ளிப்போன திருமணங்கள், வண்டி வாகனம வாங்கும் யோகம் எல்லாம் நடந்தேறியிருக்கும். வரும் 6.10.12 முதல் விரய குரு வக்கிர கதிக்கு ஆளாவதால், நீங்கள் தொடங்கிய செயல்களில் அடுத்த 4 மாத காலங்களுக்கு தாமதமும் சின்ன சின்னத் தடைகளும் வரும். வீடு, மனை வாங்க நினைத்தவர்களுக்கு காரணமே இல்லாமல், வங்கிக் கடன் கைக்கு வராமல் தாமதமாகும். கடனுக்காக வீடு, மனையை விற்க காத்திருப்போருக்கு நீங்கள்  எதிர்பார்த்த விலைக்கே வாங்க உங்களைத் தேடி வருவார்கள். புதிய வேலை கிடைக்கும் செய்து வரும் தொழிலுடன் வேறு தொழில் செய்யும் வாய்ப்பும் தேடி வரும். குரு வக்கிர நிலைக்கு செல்வதால், தொல்லைகள் குறையத் தொடங்கும். புதனின் வக்கிர சஞ்சாரமும் சுக்கிரன் கன்னிக்குச் சென்று நீச்ச பங்கமடைவதும்  சில தடைகளையும் நோயையும் கொடுத்தாலும், பகை மற்றும் நோயினால் ஏற்படும் வாட்டங்கள் தடுத்தாட்கொள்ளப்படுகின்றன.
பரிகாரம்:
புதன், சனிக்கிழமைகளில், எலுமிச்சை தீபம் ஏற்றி, நவ கிரகங்களை சுற்றி வருவது நலம்.

கடகம்:
    கடந்த  மே மாதம் 17-ம் தேதி முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ல் சஞ்சரித்து நற்பலன்களாக வழங்கி வந்தார். தொழிலிலும் ,குடும்பத்திலும் நல்ல மாற்றத்தைக் கண்டு வருகிறீர்கள்.  இந்நிலையில்,அக்டோபர் 6-ம் தேதி முதல், 115 நாட்களுக்கு குரு வக்கிர சஞ்சாரம் செய்யவிருப்பதால், குறைவான விதத்தில் பலன்களைக் கொடுக்கப் போகிறார். இதனால், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம், வியாபாரத்தில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வுகள் என்று  நற்பலன்கள் யாவும் தாமதமாகத்தான் வரும். வீடு, மனைகளை விற்று கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று நீங்கள் எடுத்துவரும் முயற்சிகள் எல்லாவற்றிலும் காரணமே இல்லாமல் தாமதம் இருந்து வரும். இந்த கிரக நிலைகளைப் புரிந்துகொண்டு இந்த குரு வக்கிர காலத்தை , பொறுமையாக கடந்துவிட்டால், உரிய நேரம் வரும்போது  அனைத்து செயல்களிலும் முன்னேற்றம் காணலாம்.
பரிகாரம்:
செவ்வாய், வியாழக்கிழமைகளில்,குடும்பத்தாருடன் வீட்டில் அதிகாலையில் பூஜை செய்து எலுமிச்சம் பழத்தில் 5 தீபங்கள் ஏற்றி கந்த சஷ்டிக் கவசம், ஷண்முக கவசம் படித்து வந்தால், நன்மைகள் நிகழும்.

சிம்மம்:
2012 மே மாதம் 17-ம் தேதி முதல், குருவின் 10மிட சஞ்சாரம் செய்துவந்த தொழிலில், வியாபாரத்தில், உத்தியோகத்தில் சிறிது குழப்பம் ஏற்பட்டு இருக்கும். ஏமாற்றத்திலும், நஷ்டத்திலும், கவலையிலும் சிலர் இருந்து வருகின்றனர். உடல் நோயும், உங்களுக்கு தொல்லை தரத் தயங்கவில்லை. இந்த நிலையில் குரு வக்கிர கதிக்குப் போகிற 115 நாட்களும் குரு பலம் குறைந்து விடுவதால், பலவகையிலும் நன்மையான பலன்களே நிகழப்போகின்றன. தொல்லை கொடுத்து வரும் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல டாக்டரை அடையாளம் கண்டுகொண்டு சரியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு உடல் நலம் பெறுவீர்கள். பதவி உயர்வில் இருந்த சிக்கல் அகலும். சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் பெருகி லாபம் அதிகரிக்கும். தொழில் பிரச்சினை, கடன் தொல்லை நீங்கும்.  திருமணத் தடைகள் விலகும். குழந்தைப் பாக்கியமும் உண்டாகும். கைவிட்டுப்போன பூர்வீகச் சொத்துக்கள் திரும்ப வந்து சேரும். திறமையிருந்தும் வசதி வாய்ப்புகளின்றி உரிய கல்வித் தகுதியைப் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் கிடைத்து, உயர் கல்வி,வெளிநாட்டுக் கல்வி என்று பல நன்மைகளைப் பெறுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்டை உருவாக்க முடியும். தன லாப பெருகும். கூட்டு வர்த்தகம் லாபம் தரும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். பகைவர் பின்வாங்குவர். எந்த வேலையிலும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். பயம் விலகும்.
பரிகாரம்:
புதன், வியாழன்,சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்தத்தில் பஞ்சதீப விளக்கேற்றி நவக்கிரக மந்திரங்களை 108 முறை மன ஈடுபாட்டோடு உச்சரித்து வந்தால், தொலைகள் அகலும்.

கன்னி:
தற்போது குரு உங்கள் ராக்கு 9-ல் சஞ்சரிப்பதால், சற்று ஆறுதல் கிடைத்திருக்கும். பழைய அஷ்டம குரு உங்களைப் பாடாய்ப் படுத்த்தி ஒரு ஆண்டு உங்களை பலவித சிக்கல்களில்  மாட்டி அலைக்கழித்திருப்பார். 9-ல் குரு வந்ததும், பழைய பிரச்சினைகளிலிருந்து  சிறிது சிறிதாக தப்பித்து வந்துகொண்டிருக்கிறீர்கள். முழுதும் விடுபட்டு விடுவோம் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு வந்து விட்டது. இந்த நிலையில் குரு வக்கிர கதிக்கு ஆளாகி பலம் குறைந்து பலவீனம் ஆகிவிடுவது, உங்களுக்கு அவ்வளவு நன்மையைக் கொடுத்துவிடாது. பல காரியங்களிலும் தாமதம் ஏறபடும். செயல்கள் தடைப்படும் என்பதனைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். செய்து வரும் தொழிலில் கடன் பிரச்சினை, வேலையாட்கள் நின்றுபோய் விடுவது ,முன்னேற்றத் தடை, குறைந்த லாபம் என்று பல கஷ்டங்களைச் சந்திக்க நேரும். புது முயற்சிகளை 4 மாதங்கள் தள்ளிப் போட்டால், நஷ்டங்களைச் சந்திக்காமல் தப்பிக்கலாம். சனி 2-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால், வக்கிர குருவால் வரப்போகும் தடைகள், தாமதங்களை உச்ச சனி தடுத்து, கஷ்டங்களைக் குறைப்பார். ஓரளவு வெற்றிக்கு வழி வகுப்பார். தாமதமாகிவரும் திருமணத்தை  நடத்தி வைப்பார். புதிய வேலை வாய்ப்பையும், வியாபார வளர்ச்சியையும் கொடுப்பார். சிலர் தொழிலுக்காக தூரப் பயணம் மேற்கொள்வர். இந்த குரு வக்கிர காலத்தில், கஷ்ட நஷ்டங்கள் தோன்றினாலும்,பாதிப்புகள் எதுவும் மிகப்படுத்தாது.தெய்வத் துணையுடன் பகைவென்று தடைகளைக் கடந்து உங்கள் பணிகள்முழுமூச்சில் நடைபெறும். வர்த்தக லாபங்கள் சொற்பமே எனினும், வீண் செலவுகளைக் குறைக்கும் வழியையும் மேற்கொள்வீர்கள் இதனால், நிதிப் பற்றாக்குறை அகலும். செவ்வாயின் பார்வை கேதுவின் மேல் விழுவதால், பிரச்சினைகள் அனைத்தும் நீர்க்குமிழிபோல் மறைந்துவிடும். மார்கழி மாத முடிவில், அதாவது கிட்டதட்ட குருவின் வக்கிரகால முடிவில், கஷ்ட நஷ்டங்கள் இழப்புகள் மற்றும் பிணிகள் வாட்டத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு சௌபக்கிய இனங்களை பூரணமாய் அடைகின்றனர். வியாபாரம் துளிர் விட்டு வளர்ச்சியை அடையும். செல்வம் பல வழிகளில் புரளும். கடன் தொலலை, மன வாட்டம் நீங்கப் பெறும். வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீட்டுக்கு இடம் பெயர்வீர்கள். உறவுகள் இனிமையாக இருக்கும்.  நீங்கள் தரும காரியங்களிலும் ஈடுபடுவதால்,  தெய்வ அருள் பூரணமாகக் கிடைக்கும்.
பரிகாரம்:
குடும்பத்துடன் 27 வெள்ளிக்கிழமைகள் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று பஞ்ச தீப விளக்கேற்றி கோவிலை 9 முறை சுற்றிவர பிரச்சினைகள் தீரும்.

துலாம்:
கடந்த 2012 மே மாதம் 17-ம் தேதி முதல், குருபகவான் உங்கள் ராசிக்கு ‘அஷ்டம குரு’ வாக சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 8-மிடத்தில் உலா வரும் குரு உங்களை கஷ்டப்படுத்தித்தான் பார்க்கிறார். குடும்பப் பிரச்சினை,கடன் தொல்லை மற்றும் ஆரோக்கியச் சீர்கேடு என்று பலவித கஷ்டங்களுக்கும் குறைவில்லை. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிட்டு நீங்கள்  பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டதால்,  உங்களை மறைத்துக்கொண்டு வாழவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேர்ந்தது. யாருடனும் கலகலப்பாக பேசுவதையே விட்டுவிட்டீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்சினை கோர்ட்டுக்குப் போய்விடுமோ என்ற சூழ்நிலை!. உங்கள் உடல்நலத்துக்காகவும் பெற்றோருக்காகவும் மருத்துவச் செலவை மேற்கொள்ள  நேர்ந்தது. சிலர் கடன் தொல்லை தாங்க முடியாமல்,வீடு மனை முதலிய சொத்துக்களை விற்கும் நிலையும் வந்தது.  இப்படிப் பலவிதமான தொல்லை துயரங்களுக்கு நடுவே வருகிற 6.10.2012 முதல் 115 நாட்களுக்கு குருபகவான் வக்கிரநிலைக்குப் போகிறார். இப்போது என்ன ஆகப் போகிறதோ என்ற கவலை வேண்டாம். எனென்றால், வக்கிர நிலையில் குரு பகவான் தனது சுய பலத்தை இழந்து விடுகிறார். இப்படி, பலவீனமடைந்த குரு உங்களுக்கு கெடுதல்களைச் செய்ய முடியாமல் போகிறார். இதுவரை உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தவரே இப்போது பலமிழந்துவிட்டதால் உங்கள் முன்னேற்றம் தடைப்படாது. கெடுதல்கள் நிகழாது. வியாபார வளர்ச்சி குன்றாது. எனவே இந்த 115 நாட்களும், அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் இணைந்து நல்லவைகள் நடக்கப்போகின்றது. உங்கள் முயற்சியும் உழைப்பும் கூடி பணிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் கரங்களை பலப்படுத்தி தொழில், வர்த்தக, வியாபாரம் மற்றும் சுய தொழில்களில் முன்னேற்றத்தை தொடர்ந்து அளிக்கும். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் பணிகளில் மட்டுமே உங்கள் கவனம் செயல்பாடு அமைந்திடும். இதனால், உங்கள் செல்வாக்கு  கீர்த்தி பெறும். தன லாபங்களை பாதிப்படையாமல் தக்க வைத்துக்கொள்வீர்கள். தேக ஆரோக்கிய பாதிப்பிலிருந்து விடுபட்டு புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். தேகப் பொலிவைப் பெற்று சுறுசுறுப்பையும் விறுவிறுப்பையும் பெறுவீர்கள். வீடு, மனை சொத்துக்கள் சேரும். எனவே குருவின் வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு யோகமாகவே அமையும்.
பரிகாரம்:
சர்ப்பத்துடன் அமைந்த அம்மனுக்கு 27 வெள்ளிக்கிழமைகள் 27 எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி மாலை அணிவித்தால், பிரச்சிகள் அகலும்.

விருச்சிகம்:
                       கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல், குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில்  சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் தாக்கம் தெரியாமல் தெம்பாக இருந்து வருகிறீர்கள். ஏழரைச் சனியால் வர இருந்த விரயம், இழப்பு, நஷ்டம், பிரச்சினைகள் அனைத்தும் குருவின் பார்வையால் சூரியனைக் கண்ட  பனி போல் விலகி ஓடிவிட்டது. இப்போது வருகிற அக்டோபர் 6-ம் தேதி முதல் 115 நாட்களுக்கு குரு வக்ரகதிக்கு ஆளாகிறார். இந்த நிலையில் வக்ர கதியினால், குரு தனது பலத்தை இழந்து பலவீனம் ஆகிவிடப்போகிறார். இதனால், ஏழரைச் சனியின் தாகக்ம் சிறிது வர வாய்ப்புள்ளது. சில பாதிப்புகள், இழப்புகள் விரயங்கள் நஷ்டங்கள் அவமானங்களை சனீஸ்வரர் கொடுத்தே தீருவார். அதனால், தற்போது செய்யும் தொழிலையும் உத்தியோகத்தையும், வீடு மனை வசதிகளையும் போற்றி நிலைக்கச் செய்வதன்மூலம்  தொல்லைகளிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம். எதிலும் புதிய முயற்சிகளைத் தவிர்த்து வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சுப காரியங்களையும் தள்ளிப்போடுவது நலல்து. இச்சமயத்தில் ஒரு ஆச்சரியமான விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். விருச்சிகத்துக்கு பெயர்ந்துள்ள புதன் வக்கிரகதிக்கு ஆளாகி வக்கிர குருவை நேருக்கு நேர் சந்தித்து நீசபங்கம் பெற்று இருவரும் சுபத் தன்மையடைகிறார்கள். எதிர்மறை விளைவாக நற்பலன்கள் ஒருங்கிணைந்து களத்திர இனங்கள் அனைத்தும் புதிய தெம்பைப் பெற்று தேக ஆரோக்கியம் மற்றும் பிரச்சினைகள் அனைத்தும் உடனுக்குடன் தீர்வு காண்பீர்கள். களத்திர வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் தோன்றும். பிரிந்தோர் இணைவர். அரசியலில் புதிய திருப்பங்கள் ஏறப்டும். பெண்கள் வாழ்க்கையில் இடுக்கண்களைத் விடுத்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை அடைவர். இப்படியாக இந்த ராசிக்காரர்கள் வக்ர சஞ்சாரத்திலும் கூட தப்பித்துக்கொள்ளும் வழி தெரிறது.
பரிகாரம்:
தொடர்ந்து 27 வியாழக்கிழமைகளில் சிவன், முருகன் ஆலயங்களுக்குச் சென்று , 5 நெய் விளக்குகள் ஏற்றி கோவிலை 18 முறை சுற்றிவர ,கவலைகள் குறையும்.

தனுசு:
      மே மாதம் 17-ம் தேதியிலிருந்து குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்துக்கு வந்ததிலிருந்து கடன் பெருகி, பகையும் வந்தது.நோயும் தொல்லை கொடுத்து வருகிறது. சுப பண விரயம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி, அவர்களுக்காக தொழில் அமைத்துக்கொடுத்தல், குடும்பத்தில் ஏறப்டும் திருமணச் செலவுகள், வீடு கட்டும் செலவுகள், வாகனம் வாங்குதல் என்று ஏற்படும் செலவுகள் அனைத்துமே மகிழ்ச்சி தரும் வண்ணம் அமையும்.உங்கள் நோய் தீர்க்கும் மருத்துவச் செலவுகளும் கடன் தீர்க்க உங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைத்தல் முதலிய செலவுகளையும் மேற்கொள்வீர்கள். இந்த நிலையில்தான், குரு 6.10.2012 அன்று வக்கிர கதிக்குப் போய் தன் பலத்தை இழக்கிறார். இச்சமயத்தில் நீங்கள் எந்தப் புது முயற்சியும் எடுக்க வேண்டாம். முயற்சிகள் வெற்றியடையாத நேரம் இது. எனவே வழக்கமாக செய்வதை மட்டும் செய்து வாருங்கள். ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் அதாவது லாப ஸ்தானத்தில், சனீஸ்வர பகவான் சஞ்சரிப்பதால், தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முதலில் தடை தாமதம் போல வந்தாலும், அவையெல்லாம் விலகி, மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும். மேலும், இப்போது ஆறாமிடத்திலிருக்கும் குரு, கேதுவின் கட்டுப்பாட்டில்  வருவதால், உங்களை தருமம் வழி நடத்துகிறது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு தடையில்லை. திருமணம், ஹோமங்கள், ஆலயத் திருப்பணிகள், குடும்பத்துடன் தீர்த்த யாத்திரை செல்லல், கூட்டு வர்த்தகத்தை மேம்படுத்துதல், வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கிடைத்தல் போன்ற அனுகூலங்கள் நிகழும். எனவே வக்கிர குருபவின் கெடு பலன்களில் முழுவதுமாக சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
பரிகாரம்:
இடைவிடாமல், 48 செவ்வாய்- வியாழக்கிழமைகளில் முருகனுக்கு தேங்காய்,பழம், படைத்து மலர் அர்ச்சனை செய்து கோவிலை 9 முறை சுற்றி வந்தால், தொல்லைகள் விலகும்.

மகரம்:
கடந்த மே மாதம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-மிடத்துக்கு வந்ததிலிருந்து எல்லாவகையிலும் சிறிது முன்னேற்றத்தைக் கண்டு வருகிறீர்கள். சம்பளம் உயர்ந்து, பதவி உயர்வும் கிடைத்து விட்டது. வியாபாரம் பெருகி மாத வருமானம் கூடிவிட்டது. தாமதமாகிவந்த திருமணம் முடிந்துவிட்டது என்ற நிலையும் ஏற்படும். ஒரு சிலருக்கு நிலைமை  முன்னைக்கு இப்போது  பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கிடையில் இப்போது குரு வருகிற 6.10.12 முதல்115 நாட்களுக்கு  வக்கிர நிலைக்கு ஆளாகி பலம் இழப்பதால், உங்கள் மனம் தேவையற்ற குழப்பத்துக்கு உள்ளாகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு இவைகள் தடைப்படும். கணவன்-மனைவி இடையே பிரச்சினைகளும், வீண் செலவுகளும் உண்டாகும்.  ஆனால், ஒரே மாதத்தில் சர்ப்பத் தளையிலிருந்து கிரகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விடுபடுவதால், இந்த கஷ்டங்கள் நீங்கி தேக பொலிவும், இனம் புரியாத சந்தோஷமும் உங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். மனத்தெளிவு உண்டாகி, உங்கள் பணிகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். தனம், செல்வாக்கு, கீர்த்தி பெருகும். குடும்ப ஒற்றுமை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு முன்னேற்றமான திட்டங்கள் என்று நிறைவேறும். குடும்பத்துடன் சுற்றுலா, தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். குரு வக்கிரத்தினால், ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் குறையும். புதிய முயற்சிகளை கொஞ்சம் நிறுத்தி வைத்தால் போதும்.
பரிகாரம்:
கருமாரி அம்மனை குடும்பத்துடன் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து, ‘ஓம் சக்தி’ என்று சொல்லியபடி கோவிலை 9 முறை வலம் வருவது பிரச்சினைக்ளைத் தீர்க்கும்.

கும்பம்:
கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல், குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-மிடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார்.  அவர் அர்த்தாஷ்டம குருவாக வந்தது முதல் ,உங்கள் கடன் தொல்லை குறைந்தது. வீடு மனை சம்பந்தமானவைகளிலிருந்து பிரச்சினைகள் குறைந்தன. சிலருக்கு திருமணம் முடிந்து குடும்பம் அமைந்தது. தொழில், வியாபாரம் அமைந்தது. வியாபாரம் மேலும் பெருகியது. வேலையும் கிடைத்து வாழ்க்கையில் மாறுதல்கள் வந்தன. 12.9.2012 முதல் உங்களுக்கு அஷ்டம சனி விலகிவிட்டது. அதுவும் உச்ச சனியானதாலும் உங்கள் ராசி அதிபதியே சனியானதாலும் உச்சம் ஆகும் நிலையை நோக்கி கிரகபலன் ஆரம்பிக்கும்.  இந்த நிலையில் குரு வக்கிரமாகி கோபமடைந்து, தன்னுடைய பலத்தை இழக்கிறார். அதனால் உங்கள் முன்னேற்றத்தில் சிறு சிறு தடைகள் வர ஆரம்பிக்கும். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் பிடிவாதமும் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சும் இருக்கும். நீங்கள் விட்டுக்கொடுத்துப் போவது நன்மை பயக்கும். குரு வக்கிரமடந்து விட்டாரே என்று நீங்கள் அதிகம் பயம் கொள்ளத் தேவையில்லை. சுக்கிரன் கன்னிராசிக்கு அஷ்டமத்தில் பெயர்ந்து நீசமாகி வக்கிர குருவின் பார்வையைப் பெறுவதால், சுக்கிரன், புதன் இருவரும் ராசி பரிவர்த்தனை ஆவதால், ஜீவன பாதிப்புகள் விலகிப்போகும். யோகங்கள் பலமாய் அமையும். குடும்பத்திலும், பணியிடத்திலும் வீண் குழப்பங்கள், மன பேதனங்கள் உடல் உபாதை மற்றும் பணத் தட்டுப்பாடு பண இழப்பு போன்றவைகள் நீங்கும். யோகங்கள் மலிந்து பாக்கியங்கள் பெருகும். புத்திரர்களின் திருமணம் மற்றும் புதிய வேலைவாய்ப்பினையும் பெறுவார்கள். புதல்வர்கள் தனகீர்த்தி அடைவார்கள். சகோதரர்களின் பிணி நீங்கி குணம் பெறுவார்கள். வேலைப்பளுவும் கூடும். வியாபாரம் பெருகும். வக்கிர காலத்தின் இறுதியில் புதனும் சுக்கிரனும் விருச்சிகத்துக்குப் பெயர்ந்து சூரியன் ராகுவுடன் கூடி நிற்பதால் அனைத்து கிரகங்களும் சர்ப்ப தோஷத்திற்கு ஆளாகி நிற்பதால்,  வர்த்தகத் தடை, பொது ஜன விரோதம் கூட ஏற்படலாம். பிரச்சினைகளுக்கு வழிகாணமுடியாமல் மனம் வேதனைப்படும்.இவ்வித பாதிப்புகள் அனைத்தும்  தற்காலிகமே. தொடர்ந்து வரும் மாதங்களில் சர்ப்ப தோஷங்களால் பாதிக்கப்பட்ட கிரகங்கள் வெளியேறிட , நன்மைகள் மிகுந்து நிற்கும். பாதிப்புகள் அனைத்திலிருந்தும் விடுபடுவீர்கள்.
பரிகாரம்:
26 சனிக்கிழமைகள் தொடர்ந்து காளி, கால பைரவர் அலல்து சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால், பெரிய அளவிலான பிரச்சினைகள் தீரும்.

மீனம்:
சென்ற மே மாதம் 17-ம் தேதி முதல்,குரு உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். சிலர் தொழில்மாற்றம், உத்தியோகத்தில் இடமாற்றம் மற்றும் சம்பள உயர்வுகளையும் பெற்று வந்தீர்கள். தாமதமாகிவந்த திருமணமும் கூடி வந்திருக்கும். சுப விரயங்களுக்காக ஏற்பட்ட கடனை அடைக்க எண்ணி பூர்வீக சொத்துக்களை விற்க எண்ணியவர்களுக்கு  வீடு மனை போன்றவற்றை நல்ல விலைக்கு விற்று, கடனை அடைத்து மனச்சுமையிருந்து விடுதலை பெற்று இருப்பீர்கள்.சிலர் இதற்கான முயற்சி எடுப்பீர்கள். குடும்பச் செலவை சமாளிக்கவும் வழி தேடுவீர்கள். சிலருக்கு நோய்களால் ஏற்படும் மருத்துவச் செலவும் சேர்ந்துகொண்டு வந்திருக்கும். இந்த நிலையில் குருபகவான் 6.10.2012 முதல் .115 நாட்களுக்கு வக்கிர நிலைக்கு செல்கிறார்.இதனால் மனதில் தேவையில்லாத குழப்பங்களும் வெறுப்பும் கோபமும் உங்களுக்கு அடிக்கடி வரும். உறவுகளிடத்திலும், செய்து வரும் தொழில், வியாபார இடங்களிலும் வாக்குவாதம் செய்து நிலைமையை பாழ்படுத்திக்கொள்வீர்கள். கடன், பகை நோய் போன்ற கஷ்டங்கள் இருக்கும். நவம்பர் மாதக் கடைசியில் சர்ப்பத் தளையிலிருந்து விடுபட்ட செவ்வாயின் உந்துதலால், குடும்பத்திலும் வர்த்தகத்திலும் உங்கள் குறைகளைக் களைந்து, ஆதாயங்களை அடைவீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டு கடன் சுமையைக் குறைப்பீர்கள். மனம் தளராமல் உங்கள் பெருமைகளை நிலை நிறுத்துவீர்கள். குருவின் விரய காலம் கொஞ்சம் சவாலாகவே இருந்தாலும் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்கு செவ்வாயின் அனுகிரகத்தால் கிடைக்கும்.
பரிகாரம்:
48 செவ்வாய்க் கிழமைகள் இடைவிடாமல், குடும்பத்துடன் முருகன் கோவிலுக்குச் சென்று 18 முறை சுற்றி, மூர்த்திக்கு அர்ச்சனை செய்தால், நல்வாழ்வு மலரும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>