குருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | குரு பெயர்ச்சி பலன் 2012
| Guru Peyarchi Palan 2012
குரு பெயர்ச்சி பலன்கள் 2012 Guru Peyarchi Palan 2012
நடக்கும் நந்தன ஆண்டு வைகாசி 4-ம் தேதியன்று, அதாவது, வருகிற மே மாதம் 17-ம் தேதி காலை 09.34 மணியளவில், குரு பகவான் மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயர்ச்சியாகிறார். கோட்சார விதியின்படி குருவின் பலன் எப்படி இருக்கும் என்று பார்த்தோமானால், நீங்கள் எந்த ராசியோ அந்த ராசியிலிருந்து 2,5,7,9,11ஆகிய இடங்களில் குரு சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதும்,
ஜென்ம ராசியான 1 மற்றும் ஜென்ம ராசியிலிருந்து 3,4,6,8,10 &12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிப்பது கெடு பலன்களைக் கொடுக்கும் என்பதும் பொதுவான கோட்சார விதியாகும். சுப கிரகங்கள் பாப கிரகங்கள் என்ற இரண்டு பிரிவுகளில்முழு சுப கிரகம் என்ற தகுதியைப் பெற்று முன்னணியில் இருப்பவர் குரு பகவான்தான்!. குரு பகவான் தான் இருக்கும் ஸ்தான நிலையைப் பொறுத்து பலன்களைத் தருவதுபோல, தன் பார்வை பலத்தாலும் அருள் பாலிக்கிறார். அவர் தான் இருந்த இடத்திலிருந்து 5,7,9 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறாரே, அந்த அருள் பார்வைகளுக்கு அமோகமான சுப சக்திகள் இருக்கின்றன. “ குரு பார்க்க கோடி நன்மை” என்னும் சொல் ஒரு உண்மையான கூற்றாகும். வேலை கிடைக்குமா?, பணம் வருமா?; பதவி உயருமா?; கல்யாணம் கைகூடுமா?; குழந்தைப்பேறு உண்டாகுமா? வீடு கட்ட முடியுமா?; வாகனம் வாங்க இயலுமா? இவ்வளவு கேள்விகளுக்கும் கோட்சார முறையில் பலன் அறிவதற்கும் இந்த குருப் பெயர்ச்சியைத்தான் நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
மே மாதம் வரப்போகும் குருப் பெயர்ச்சியால்,
குரு 2-ம் இடத்துக்கு வருவதனால்- மேஷ ராசிக்காரர்களுக்கும்,
குரு 5-ம் இடத்துக்கு வருவதனால் மகர ராசிக்காரர்களுக்கும்,
குரு 7-ம் இடத்துக்கு வருவதனால், விருச்சிக ராசிக்காரர்களுக்கும்,
குரு 9-ம் இடத்துக்கு வருவதனால் கன்னி ராசிக்காரர்களுக்கும்,
குரு 11-ம் இடத்துக்கு வருவதனால் கடக ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நிகழும்.
இவற்றிற்கு மாறாக –
குரு ஜென்ம ராசிக்கு வருவதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கும்,
குரு 3-ம் இடத்துக்கு வருவதனால், மீன ராசிக்காரரகளுக்கும்
குரு 4-ம் இடத்துக்கு வருவதனால் கும்ப ராசிக்காரர்களுக்கும்,
குரு 6-ம் இடத்துக்கு வருவதனால் தனுசு ராசிக்காரர்களுக்கும்
குரு 8-ம் இடத்துக்கு வருவதனால் துலா ராசிக்காரர்களுக்கும்,
குரு 10-ம் இடத்துக்கு வருவதனால், சிம்ம ராசிக்காரர்களுக்கும்,
குரு 12-ம் இடத்துக்கு வருவதனால், மிதுன ராசிக்காரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும் ,
என்பதும் ஜோதிட விதி.
நடைமுறையில் பலன்கள் வேறுபட்டு நிகழவும் வாய்ப்புகள் உள்ளன . எப்படியென்றால் இதுவரை கூறப்பட்ட இந்த பொதுவான விதியானது ஒருவரது தனிப்பட்ட ஜாதக அமைப்பில் உள்ள கிரக அமைப்பின்படி, பலம் கூடுவதோ குறைவதோ அல்லது முற்றிலும் மாறுபடுவதும்கூட உண்டு.
குரு சாதமான இடங்களில் சஞ்சரிக்கும்போது நல்ல பலன்கள் குறைவாக நடப்பதற்கும் குரு பாதகமான இடங்களில் நடமாடும்போது கெட்ட பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகமாக நிகழ்வதற்கும் காரணம் இதுவே.
எந்த ஒரு ராசிக்கும் குரு கிரகம் அடிப்படையாக நல்லவரா, கெட்டவரா என்பதை வைத்தே அவருடைய குணம் வெளிப்படும். அதாவது ஒருவருடைய ஜென்ம ராசியிலிருந்து 3,6,8,12ஆகிய தீமை தரும் ராசிகளுக்கு குரு சொந்தக்காரரானால், அவர் கெடுதல் செய்யக்கூடியவர் என்றும், 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களுக்கு சொந்தக்காரரானால், அவர் ‘கேந்திராதித்ய தோஷம்’ உள்ளவரென்றும், 2,5,9.11 ஆகிய நன்மை தரும் ராசிகளுக்கு உரிமையாளர் என்றால், அவர் இயல்பாக நல்ல பலன் தரக்கூடியவர் என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட அமைப்பின்படி,
1. குரு அடிப்படையாக நல்ல ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, கோட்சாரத்திலும் நன்மை தரும் இடங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகளை மிகவும் அதிகரித்துத் தருவார்.
2. ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களுக்கு அதிபதியானாலும் , தீமை தரும் இடங்களில் இயங்கும்போது கிரகத்தின் நன்மைகள் கட்டுப்படவோ, குறையவோ கூடும்.
3. பிறந்த ஜாதகத்தில் குரு கெடுதலான ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, நல்ல இடங்களில் சஞ்சரித்தால், கெட்ட சுபாவங்களைக் குறைத்து நன்மைகளைக் கலந்து கொடுப்பார்.
4. ஜாதகத்தில் தீமை தரும் ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, குரு கெட்ட இடங்களில் உலாவும்போது சில ராசிகளில் தன்னுடைய கெட்ட குணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வதும் உண்டு. சில ராசிகளில் கெட்ட சுபாவங்களை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவதும் உண்டு. அந்தந்த ராசிகளைப் படிக்கும்போது நீங்கள் இதைப் புரிந்துகொள்ளலாம்.
குரு 14.110.12 முதல் 12.2.13 வரை குரு வக்கிர கதியில் சஞ்சரிப்பார்.
சுபகிரகம் வக்கிரமடைந்தால் கெடுபலன்மகளும், அசுப கிரகம் வக்கிரம் அடைந்தால் நல்ல பலன்களையும் செய்வார் என்பது ஜோதிடத்தின் பொது விதி. குரு வக்கிரம் அடையும் காலத்தில் எந்த காரியத்திலும் எச்சரிக்கை அவசியம்.
நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் நன்மை தீமைகள் நமது பூர்வ ஜென்ம வாழ்க்கையின் பிரதிபலிப்புதான். பூர்வ ஜென்மம் எப்படி இருந்தது, அதன் விளைவாக இப்போது என்ன நடக்கப்போகிறது என்பதெல்லாம் நமக்குப் புரியாத விஷயங்கள் என்பதால், இப்பிறவியில் நமது கடின குயற்சியும் உழைப்பும் பலன் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது. நமது விதி நமது கையில் இல்லை. ஆனால், நமது உழைப்பு நம் கையில்தானே இருக்கிறது? அடிப்படையாக அமைந்த நன்மைகளும்கூட அவரவர்களுடைய முயற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்ற அளவில் அதிகரிக்கும். வதியைப் பற்றிய கவலைகளை அகற்றிவிட்டு நமது உழைப்பை முற்றும் நம்பி ஊக்கத்தை உற்ற துணையாகக் கொள்வோம்.
இனி விரைவில் வெளிவர இருக்கும் குருப் பெயர்ச்சி பலன்களைப் பார்க்கலாம்.
குருவின் சஞ்சாரத்தால் தீய பலன்கள் ஏற்படும் என எண்ணி அஞ்ச வேண்டாம். கீழ்க்ண்ட பரிகாரங்களைச் செய்து தீய பலன்களிலிருந்து விடுபடலாம்.
- திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்குவதால், கோர்ட் வழக்குகளில் வெற்றி , பங்காளிச்சண்டைகள் ஒரு முடிவுக்கு வருதல் , வேலை வாய்ப்பு, சொந்த வீடு, திருமண யோகம், குழந்தை பாக்கியம் , கணவன்-மனைவிக்குள் சண்டை விலகி இணக்கம் ஏற்படுதல் முதலியவை நடக்கும்.
- சிவகங்கை மாவட்டம் மதுரைவழி திருப்பத்தூர் அருகில் உள்ள பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில் ஒரு அட்டமா சித்து தலம். குழந்தைப் பேறின்மை, மனக் குழப்பம், அரசியல் வெற்றி என்னும் சாதிக்க முடியாத அத்தனை காரியங்களையும் சாதித்துக்கொடுக்கக்கூடிய அற்புதமான ஸ்தலம். இங்கு வியாழக்கிழமை மற்றும் அமாவாசை அன்று ஏதாவது ஒருநாளில் சென்று கொண்டக்கடலை மாலை அணிவித்து முல்லை மலர்களால் குரு பகவானை அர்ச்சனை செய்து வந்தால், வெற்றிமேல் வெற்றிதான்.
- இரண்டாவது குரு ஸ்தலமாக இருப்பது, கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி. குருபகவான் இங்கும் பக்தர்களின் குறைகளைப் போக்க எழுந்தருளியுள்ளார். மேற்கூறப்பட்டதுபோல் வியாழக்கிழமையன்று வழிபாடு செய்துவந்தால் துன்பங்கள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
- மூன்றாவது குரு ஸ்தலமாக இருப்பது அதே கும்பகோணம் அருகில் உள்ள தென் திட்டைக்குடி . இதுவும் வலிமையான குரு ஸ்தலம். இங்கு வழிபாட்டை மேற்கொண்டால் மனோபலமும் ஆத்ம பலமும் பெருகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குரு காயத்ரி மந்திரத்தைப் வியாழக்கிழமைகளில் காலை, மால வேளைகளில் ஒன்பது முறை பக்தியோடு உச்சரித்துப் பெற முடியும்.
ஓம் வ்ருஷய த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
ராசி வாரியாக குரு பெயர்ச்சி பலன்கள்
.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments