/* ]]> */
May 012011
 
gurupeyarchipalankal-12-rasis-300x277

gurupeyarchipalankal-12-rasis-300x277

நிகழும் ஸ்ரீ கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி, வருகிற 2011ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதியன்று பிற்பகல் 2.30 மணிக்கு, மீன ராசியிலிருந்து அசுவினி நட்சத்திரம் ஒண்ணாம் பாதத்துக்கு அதாவது மேஷ ராசிக்கு சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் ஒரு ராசி மண்டலத்தைக் கடக்க ஓராண்டு ஆகும். ஆக, இந்த குரு பகவான் மேஷ ராசியில் 15.5.2012வரை சஞ்சரிப்பார். அவர் மேஷ ராசியிலிருந்தபடி 2,5,7,9,11க்குரிய இடங்களைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இந்த குருப் பெயர்ச்சியால்,மிதுனம்,சிம்மம்,துலாம், தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கும் மிகமிக நல்ல பலன்களாகவும்,கடகம், மகரம், மேஷம் ஆகிய மூன்று ராசிகளுக்கு மத்திம பலன்களாகவும் மீதமுள்ள ரிஷபம்,கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளுக்கும் விஷேஷமில்லை என்ற நிலைமை நிலவுகிற்து.

வக்கிரகதி சஞ்சாரங்கள்:-

தற்போது சனி பகவான் கன்னியில், வக்கிரத்தில் இருப்பதும், பிறகு 6.6.2011அன்று ராகு- கேது பெயர்ச்சி அடைவதும் (அதாவது விருச்சிக ராகு, ரிஷப கேது) , பிறகு 26.6.2011அன்று சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடையறதும் , பிறகு 31.8.2011அன்று குரு பகவான் வக்கிரமடையுறதும், பிறகு 15.11.2011 அன்று சனி பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையுறதும் ,பிறகு 26.12.2011அன்று குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையிறதும், பிறகு 8.2.2012அன்று சனி பகவான் வக்கிரமடையுறதும், என்று பலவிதமான வக்கிர சஞ்சாரங்களும் வக்கிர நிவர்த்திகளும் ஏற்பட இருக்கின்றன. இவை அத்தனையும் மனதில் கொண்டு குரு பெயர்ச்சிப் பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசகர்களும் இந்த மாற்றங்கள மனதில் கொள்ள வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

ஜாதகமும் திசா, புத்தியும்:-

தனிப்பட்ட ஜாதக விஷேஷத்தையும், திசா, புத்திப் பலன்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, யோக ஜாதகம் உள்ளவர்களுக்கு கெடு பலன்களின் வீரியம் குறையும். பலவீனமான ஜாதகம் உள்ளவர்களுக்கு நற்பலன்கள் கூட குறைய வாய்ப்புண்டு.

பரிகாரம்:-

வாசகர்கள் எதற்கும் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை. அவ்வப்பபோது சிறு சிறு பரிகாரங்கள் செய்வதன் மூலம் நன்மை அடையவும் வாய்ப்பிருக்கிறது. தோஷம் நீங்க ,நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தியாகும். வியாழக்கிழமை தோறும் காலை ஒருவேளை மட்டும் அன்னபானம் எதுவும் அருந்தாமல் உபவாசம் இருந்து தட்சிணா மூர்த்தியை வணங்கி வர வேண்டும்.அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தலாம். கடலை படைத்து வணங்கலாம். கையில் புஷ்பராக மோதிரம் அணியலாம். இது தவிர நீடாமங்கலம் அருகில் உள்ள ஆலங்குடி என்ற திருத் தலத்தில் குடிகொண்டிருக்கும் குரு பகவானையும் ஒருமுறை வணங்கி வரலாம். குரு பகவானுக்குரிய சிறந்த ஷேத்திரமாக திருச்செந்தூரில் குரு பகவானுக்குரிய எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. செந்தூர் முருகன் தோஷம் நீங்க அருள் புரிவார். சிவன் கோவிலில் திரு விளக்கேற்றலாம். குருப் பெயர்ச்சிவரை காத்திருக்காமல், முன்னதாகவே குருபகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், நற்பலன்களை வாரி வழங்குவார்.

குருஸ்துதி:-

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவா,குரு மகேஸ்வரா, குரு ஸாஸ்தா, பரப் பிரம்மா, தத்மஸ்ரீ குருவே நமஹ.

எனும் மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் உச்சரித்து வரவும் . நன்மைகள் நடக்கும்.
*******

12 ராசிகளுக்கும் குருப்பெயர்ச்சி பலன்

( அந்தந்த ராசிக்கு அந்த ராசிக்கான படத்தை க்ளிக் செய்யவும்)

 

மேஷம் ராசி

மேஷம் ராசி

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி

மிதுன ராசி

மிதுன ராசி

கடகம் ராசி

கடகம் ராசி

சிம்மம் ராசி

சிம்மம் ராசி

கன்னி ராசி

கன்னி ராசி

துலாம் ராசி

துலாம் ராசி

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

தனுசு ராசி

தனுசு ராசி

மகர ராசி

மகர ராசி

கும்ப ராசி

கும்ப ராசி

மீனம் ராசி

மீனம் ராசி

2011 நவம்பர் மாதம் நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சனிப் பெயர்ச்சி பலன் 2011:

சனி பெயர்ச்சி பலன்

சனி பெயர்ச்சி பலன்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>