/* ]]> */
Jul 152011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை – தனுசு

தனுசு ராசி

தனுசு ராசி

ஐந்தாமிடத்து குருபகவான் உங்களுக்கு பலவித நற்பலன்களைக் கொடுத்துவரும்போது ,மிகவும் யோகமான இந்த காலகட்டத்தில், வருகிற 15.8.11. முதல், 25.12.11வரை  மேஷத்தில் குரு வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.  இந்த வக்கிர காலம் உங்களுக்குப் போதாத காலம். இந்த நேரம் டல்லாகவும் மந்தமாகவும் இருக்கும். இந்த சமயத்தில் உங்க முயற்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். இப்போது எதைத் தொட்டலும், தடங்கல்கள், தடைகள் வந்து எந்த ஒரு காரியமும் உருப்படியா நடக்காது. எந்தவிதமான சுப நிகழ்ச்சியானாலும், கிட்டத்தில் வந்து தட்டிப்போகும்.  மேலும் உடல்நலத்தில் பலவித பிரச்சினைகள்  வந்து வைத்திய செலவுகள் செய்யவேண்டியதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து சேரும். உங்களுடைய செலவுகள் இப்போது ரெட்டிப்பாகும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேராது.  இந்த சமயத்தில் புதிய முயற்சி எதிலும் இறங்கவேண்டாம். அனாவசிய பிரச்சினைகளும், வீண்தொந்தரவுகளும், வீண்வம்புகளும் , சிக்கல்களும், வீடு தேடிவந்து உங்களை டென்ஷனாக்கும். இந்த சமயத்தில் நீங்க தொட்டதெல்லாம் வில்லங்கத்தில்தான் போய் முடியும்.  எதைத் தொட்டாலும் ஜவ்வு மாதிரிதான் இழுத்துட்டுப் போவும். இப்படியாக எந்தப் பக்கம் பார்த்தாலும் இடிக்குது. மூத்த சகோதர சகோதரிகளுடன் கருத்து வேற்பாடு தோன்றக்கூடும். தொழில் / வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். அதன் காரணமாக கொடுக்கல்- வாங்கலில் திருப்தியில்லாத சூழ்நிலை நிலவும். உங்களுக்கு வரவேண்டிய பணம் நிறைய வெளியே நிற்கும். அது காலாகாலத்துக்கு கைக்கு வந்து சேராது. நீங்கள் உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் எதுவும் நடக்காவிட்டாலும், மனதில் ஏதோவொரு கவலை இருந்துகொண்டே இருக்கும். புத்திர- புத்திரிகளால் மனதில் கவலை சூழும். அவர்களுடைய சுபகாரியங்கள் தள்ளிப் போகும். பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகள் தோன்றும். குலதெய்வ காரியங்கள் தள்ளிப் போகும். உங்கள் செயல்பாடுகளில், தடுமாற்றம் உண்டாகி, அனைத்து செயல்களிலும்  காலதாமதமும் உண்டாகும். சிலருக்கு வாகனங்களாலும், வீடு, நிலங்களாலும்  விரயச் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கட்டுமானப் பணிகள் தடைப்பட வாய்ப்புண்டு.  வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. இருவருக்குள்ளும் கொஞ்சம் சசலப்பு தோன்ற வாய்ப்புள்ளது. சிலருக்கு தேவையில்லாத சில நண்பர்களும் அவர்களால் சில பழக்க வழக்கங்களும், சில தொல்லைகளும் ஏற்பட வாய்ப்புகளுண்டு. சிலர் ஸ்பெகுலேஷன் துறையில் ஆர்வத்துடன் இறங்கி, தோல்விகளையும், பண நஷ்டத்தையும் சந்திப்பார்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் வீணான இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு அமானுஷ்ய சக்திகளால், பாதிப்புகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது நல்லது. சிலர் பெரியோர்களின் கோபத்திற்கு ஆளாவார்கள். சிலருக்கு காதல் பிரச்சினையால் தோல்விகளும் அவப்பெயரும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனதில், ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தனிமையை நாடுவார்கள். இப்படி பலவிதமாக தொல்லைகளை சந்திக்க நேரும். எச்சரிக்கை மிக அவசியம்.

பரிகாரம்:-

வியாழன்தோறும் குருவை வழிபட்டு வருவதோடு, தேவகோட்டை அருகில் உள்ள திருவாடனை சென்று, அங்குள்ள ஆதிரத்தினேஸ்வரர், சிநேகவல்லியம்மன்.நலம் தரும் குரு,ஆகியோரை வழிபட்டு வாருங்கள். ராகு கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்திக்ல் நடைபெறும் பைரவர் வழிபாட்டில் கலந்துகொள்ளுங்கள். சனிக்கிழமைதோறும், சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். சிவகங்கை மாவட்டம் அரியகுடி பெருமாள் ஆலயம்சென்று சனிக்கிழமை வழிபாடு செய்யவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடவும். வீட்டில் துளசி வழிபாட்டையும் செய்வது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi thanusu rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>