/* ]]> */
Jul 152011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை – மீனம்

 

மீனம் ராசி

மீனம் ராசி

 

உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நற்லன்களாகவே கொடுத்து வருகிறார். உங்களுடைய ஆசைகள் எதுவானாலும் நிறைவேறிக்கொண்டிருக்கும் நேரமிது. அப்படிப்பட்ட வேளையில், 15. 8.11 முதல், குருபகவான் மேஷ ராசியில் வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார்.  இந்த வக்கிர சஞ்சாரம், 25.12.11வரை நீடிக்கும். இந்த நாலு மாதங்கள் உங்களுக்கு கொஞ்சம் படுத்தல்கள் இருக்கும். எல்லாவகையிலும் மந்தமாகவும், டல்லாகவும் இருக்கும்.  உங்க முயற்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். உடல்நலத்தில் சின்னசின்னத் தொந்தரவுகள் வரக்கூடும். வைத்தியச் செலவுகளையும் தடுக்க முடியாது. இப்போது வருமானம் பாதிப்படையுறதுக்கும், வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.  மேலும் இப்போது நீங்க எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும், ஜவ்வு மாதிரி இழுத்துண்டே போறதுக்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும், சிலருக்கு அரசாங்கத்தால், தொந்தரவுகள் ,கெடுபிடிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்போது உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள், வீண்வம்புகள், வழக்குகள்,அனாவசிய சிக்கல்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. இவை ஒண்ணுமாத்தி ஒண்ணு வீடு தேடிவந்து உங்களை டென்ஷனாக்கிடும். மற்றபடி, இந்த சமயத்தில் சுபநிகழ்ச்சிகள் கிட்டத்தில் வந்து தடைப்பட்டு , காலம் தள்ளிப்போறதுக்கும் வாய்ப்பிருக்கிறது., எந்த ஒரு காரியமும் உருப்படியா நடந்து முடியாது. மேலும் எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் இழுபறியாவேதான் இருக்குது. இந்த சமயத்தில், எல்லா விதத்திலும் ஜாக்கிரதையாகவும், நிதானமாகவும்,கவனமாகவும், எச்சரிக்கையகவும் இருக்கவேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் இப்போது தலைதூக்கும். அவை உங்களுக்கு மனச் சோர்வையும், கவலையையும் ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக விரயச் செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு இளைய சகோதரர்களால், வில்லங்கம், பிரச்சினைகள் ஏற்படலாம்.  குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படலாம். கையில் பணப்புழக்கத்தில் கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை நிலவும். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் தொய்வு ஏற்படும். சில நேரங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். எனவே இந்த சமயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காமல், இருப்பது நல்லது.  தொழில்/ வியபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை நிலவும். எடுக்கும் , முயற்சிகளில், காரியங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.  முகத்தில் பொலிவு குறையும். ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் மனதுக்குள் இருந்துகொண்டிருக்கும்.  அலைச்சல்கள் அதிகமாகும். அதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம். தெய்வீக காரியங்களிலும், புத்திர- புதிரிகளின் கல்வி,மற்றும் சுப நிகழ்ச்சிகளிலும், தாமதம் ஏற்படலாம். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொளாதார முடக்கம் ஏற்படும். அத்தியாவசியமான காரியங்களுக்குக்கூட பணம் இல்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண்வாக்குவாதங்கள் ஏற்பட்டு ,குடும்பத்தில் பற்று குறையும். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் திடீரென்று பாதிப்படையும். சிலர் தங்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் வரும். மொத்தத்தில், கஷ்டங்கள் தலைதூக்கும் என்பதால், எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்:-

வியழக்கிழமைதோறும் தட்சிணாமுர்த்தியை வழிபடுவதோடு, மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவில் வழிபாட்டினையும், அங்குள்ள சிவன், உமாதேவி, நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்யவும். சனி, ராகுவை வழிபடுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.  திருநாகேஸ்வரம், காளஹஸ்தி சென்று வாருங்கள். புற்றுப் பாம்புக்கு பால் ஊற்றுங்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைத்தேரில், அருணநோடு சூரிய பகவான் வலம் வரும். அதையும், ஒரே கல்லிலான நவகிரகத்தையும் வழிபடவும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi meenam rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>