/* ]]> */
May 042012
 
கும்ப ராசி

 குரு பெயர்ச்சி 2012 கும்ப ராசி பலன் | guru peyarchi 2012 kumba rasi

 

கும்ப ராசி

கும்ப ராசி

 

குருப் பெயர்ச்சி 2012 :

கும்பம்:

அவிட்டம்(3&4) ; சதயம் ; பூரட்டாதி (1,2 & 3 )

இந்த வருடம்  மே மாதம் 17-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், குரு ஜெங்கம குருபவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள்   னல் வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முங்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்கலுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்கலிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்கலாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடிதான் வரும்.

உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெர்ம் முயற்சி எடுஜ்க்க வேண்டியிர்க்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக முடியாமல் போகும்.

குருவின் சுபப் பார்வை பலன்கள்:

குருவின் மூன்று சுபப் பார்வைகளில் ஒரு பார்வை உங்கள் அஷ்டம ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் கடும் பிணி கஷ்ட நஷ்டங்கள் விபத்துக்கள், ஆபத்துக்கள்போன்ற 8-மிடத்தின் கெட்ட பலன்கள் தடுக்கப்பட்டுவிடும். குருவின் இன்னொரு பார்வை ஜீவன காரிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால், வேலை கிடைக்கும். செய்கிற தொழில் விருத்தியாகும். கடமைகளையும் காரியங்களையும் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டுவர முடியும். காரிய பலிதம் உண்டு. குருவின் மற்றொரு பார்வை விரய பயண ஸ்தானத்தின்மீது பதிவதால், செலவினங்கள் அதிகரிக்கும். செலவுகள் செய்யும் பொருளாதாரத் தகுதியும் கூடுதலாகும். தூரப் பயணங்களுக்கும் இந்தக் குருபார்வை தூண்டும். சுப சந்தோஷ செலவினங்களும் குறைவின்றி இருக்கும்.

குருவின் வக்கிர நிலை:

5.10..2012 முதல் 29.1..13 வ (3 மாதங்கள் ) வரை குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். சுபக் கிரகம் கெட்ட பலன் தரக்கூடிய இடத்திலே வக்கிரமானால், தீய பலன்கள் குறையும்; மாறும். எனவே, மேலே கூறப்பட்ட பொதுவான கெடுதலான பலன்கள் எல்லாம் மேற்கண்ட வக்கிரகதி காலத்தில் கட்டுப்பட்டு நன்மையான பலன்கள் நடைபெறும். உதவி, பண வரவு சமாளிப்பு வசதி சௌகரியங்கள் சுபகாரியங்கஎன்று கைகூடலாம்.

பரிகாரம்:

பிரதோஷ காலங்களில் சிவனாலயம் சென்று சிவனை வணங்கவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் மாலையும் சாத்தி வழிபடவும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>