/* ]]> */
Jul 152011
 

குரு வக்ர சஞ்சார ராசி பலன் –  15.8.11 முதல்

25.12.11 வரை – கன்னி

கன்னி ராசி

கன்னி ராசி

உங்கள் ராசிக்கு இப்பொது நடந்துகொண்டிருக்கும் அஷ்டம குருவின் சஞ்சாரம் உங்களுக்குப் பலவித தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறது. பலவிதமான பிரச்சினைகள் உங்களை வீடு தேடிவந்து விசாரித்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கும் . இப்படிப்பட்ட ஒரு சோதனையான காலக்கட்டத்தில் நீங்கள்தான் எதற்குமே விட்டுக் கொடுத்துப் போகவேண்டியிருந்தது.  ஆனால், தற்போது குரு பகவான், மேஷ ராசியில் வக்கிரகதியில் சஞ்சரிப்பதால்,  15.8.11. முதல் 25.12.11. வரையிலான நான்கு மாதங்கள் உங்களுக்கு   கொஞ்சம் ஆறுதலான காலமாக விளங்கும். இந்த காலக்கட்டத்தில் மிகமிக நல்ல பலன்களாக நடந்துவரும். எந்தவிதமான மனக் குழப்பமும் இல்லாமல் தெளிவான போக்கே காணப்படும். தடைப்பட்டு வந்திருந்த சுபநிகழ்ச்சிகள் இப்போது மளமளன்னு நடந்து முடிஞ்சிடும். மனசுக்கு மகிழ்ச்சியையும்  சந்தோஷத்தையும் தரக்கூடும். இந்த சமயத்தில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில்/ உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இப்போது பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மேலும் இந்த சமயத்தில் சொந்த தொழில்/ வியாபாரம்கூட  மிகச் சிறப்பாக நடந்து, நல்லதொரு திருப்திகரமான வருமானத்தை எதிர்பார்க்கலாம். தடைப்பட்டுவந்த நல்ல நிகழ்ச்சிகள் இப்பொது தடைகள் நீங்கி வெகு விரைவில் நடந்து முடியுறதுக்கும் வாய்ப்பிருக்கிறது. உடல்நலத்தில் காணப்பட்டு வந்திருந்த தொந்தரவுகளின்போது முற்றிலுமாகக் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் காணப்படும். ஒரு சிலருக்கு இப்போது வெளிநாட்டுக்கு சென்றுவருவதற்குண்டான வாய்ப்புவந்து சேரும். இப்போது பழைய கடன்கள் அடைபட்டு, உங்கள்  கையில் நல்ல பண நடமாட்டம் இருக்கும். பாதியில் நின்றுபோயிருந்த கட்டட வேலைகள் இப்போது மளமளன்னு நடந்து முடியும். மேலும் இந்த காலக்கட்டத்தில், நீங்க தொட்டது துலங்குறதுக்கும், நினைத்தது நடப்பதற்கும், எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேருவதற்கும் வாய்ப்பிருக்குது.  மேலும் ஒரு சிலருக்கு இப்போது  வீடுகட்டி கிரகப் பிரவேசம் பண்ணக்கூடிய சூழ்நிலை வரும்.  மேலும், இந்தக் காலகட்டத்தில் நீங்க ஏதாவதொரு புதிய முயற்சியில்  இறங்கி வெற்றியடையவும் அதிகப்படியான  வாய்ப்பு காணப்படுது. இந்த அஷ்டம குருவின் வக்கிர காலம் உங்களுக்கு பெருமளவு நல்லதையேதான் செய்யும். இந்த சமயத்தில் குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சி காணப்படும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் எதுவும் கிட்டத்தில் அண்டாது. அரசாங்கத்திலிருந்து நடக்கவேண்டிய காரியங்கள் உடனுக்குடன் நடந்து முடியும்; மேலும் அரசங்கத்திலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது அரசியலில் உள்ளவங்களுக்கு பல வழிகளிலும் நல்லது நடக்கப்போவுது. உங்களது நீண்ட நாளைய ஆசைகள் ,கனவுகள் இப்போது நிறைவேறி நனவாகிடும். மற்றும் இதுநாள்வரை பிரிஞ்சிருந்தவங்க இந்தக் காலக் கட்டத்தில் உங்களைத் தேடிவந்து ஒண்ணு சேருவாங்க. மேலும் இப்போது நீங்க எல்லாவகையிலும்  நல்லதொரு  மாற்றத்தைக் காணலாம். உங்களது  நீண்ட நாளைய மனக்கவலைகள் மறைந்து இப்போது மகிழ்ச்சி காணப்பட்டு வரும். கணவன்-மனைவி உறவு  இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் அன்னியோன்னியமாக இருக்கும்.  இந்த சமயத்தில் ஒரு சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு கூட்டுத் தொழில் ஆரம்பிக்கிறதுக்கும் சந்தர்ப்பங்கள் வரும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும் . சகோதர சகோதரிகளுடன் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பங்கள் வரும்.  இளைய சகோதரர் மேன்மை அடைவர். மனோபலம் அதிகமாகும். புத்திர புத்திரிகள் மேன்மை அடைவார்கள். அவர்களுக்கு இதுவரை தடைப்பட்டுவந்த  சுப காரியங்கள் அமோகமாக  நடக்கும். அடகு நகைகளை மீட்பீர்கள் . புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இதுவரை படுத்திவந்த தேவையற்ற வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.  முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். அலைச்சல் குறையும் .வேலைப்பளு குறையும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் தரிசனமும் ஆசியும் கிடைக்கும். சிலருக்கு பிறருடைய பணத்தை  அனுபவிக்கும் யோகம் உண்டாகும். இப்படியாக பலவிதமான நன்மைகளும் யோகமுமாக  நாலு மாதங்களுக்கு அஷ்டமகுருவின் வக்கிர சஞ்சாரம்  உங்களுக்கு வெகு சந்தோஷமாக அமையப்போகிறது.

பரிகாரம்:-

சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ஹர்-ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்யவும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குருவால்,ஆதாயத்தை மட்டுமே நீங்கள் பெற, வியாழன்தோறும், குரு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டக்கடலை படைத்து, அர்ச்சனை செய்து வாருங்கள்.   குருவார விரதம் இருக்கும் தினங்களில் ராகவேந்திரர் வழிபாடு செய்வதும் விஷேஷமானது.இதனால் பலன் ரெட்டிப்பாகும். . மேலும், புதுக்கோட்டை அருகிலுள்ள திருவேங்கை வாசலுக்குச் சென்று வியாக்யாபுரீஸ்வரர், அறம்வளர்த்த நாயகியை வழிபட்டு, அருகில் உள்ள குரு தட்சிணாமுர்த்தியையும் வணங்கினால், குதூகலங்கள் கூடும்.  சனி மற்றும் கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சனேயரை வணங்கிவாருங்கள். மேலும் துர்க்கை வழிபாடும் நடத்துங்கள்.  நலம் சிறக்கும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi kanni rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>