/* ]]> */
Jul 142011
 

குரு வக்ர சஞ்சார பலன் – மேஷம் – 15.8.11 முதல் 25.12.11

வரை - மேஷம்

மேஷம் ராசி

மேஷம் ராசி

தற்போது மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 15.. 8. 2011. மாலை முதல், 25.12.2011. வரையில் , மேஷ ராசியிலேயே ( நான்கு மாத காலம்) வக்கிர கதியில் இயங்குகிறார். சுபகிரகம் கெட்ட பலன் தரக்கூடிய இடத்தில் வக்கிரமானால், அந்த கிரகத்தினுடைய கெடுதலான குணம் மாறும் என்ற விதிப்படி, கீழ்க்கண்டவாறு பலன் சொல்லப்படிருக்கிறது.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக வருவதால், வக்கிர காலத்தில், வளர்ச்சியும் தளர்ச்சியும் மாறி மாறி வந்துகொன்டிருக்கும். . பணம் தேவைப்படும் போதெல்லாம் வந்துகொண்டே இருக்கும். விலை உயர்ந்த  பொருட்கள்  வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் கதவோரத்தில் ஒதுங்கி நிற்கும். ஒன்பதாம் இடத்துக்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், தந்தை மற்றும் பங்காளி வழியில் கிடைக்கும்  நன்மைகள் குறைவாகவே இருக்கும். அன்பு காட்டுவதை அதிகம்  காட்டினால், இன்பங்களை மட்டுமே   நீங்கள் சந்திக்க நேரிடும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால்தான், நன்மைகள் பெருகிவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விரதங்களையும் ,வழிபாடுகளையும் முறையாக மேற்கொண்டால், விருப்பங்கள் நிறைவேறும்.

ஜென்ம குருவின் வக்கிர காலமான இந்த நாலு மாதங்களுக்கு பல வழியில் நல்ல நேரமா மாறிடும். இந்த காலம் உங்களுக்கு   சிறப்பான  காலகட்டமா இருக்கும்ங்குறதில எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த சமயத்தில்  உங்கள் நிலவரத்தில் நல்ல மாறுதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடல் நலத்தில் காணப்பட்டு வந்திருந்த குறைபாடுகள் முற்றிலுமாக நீங்கி  குணமாகி, நல்ல ஆரோக்கியமாகவே காணப்பட்டு வரும். மற்றும் இதுவரை குழப்பமா இருந்துவந்த நீங்க இப்போது தெளிவா இருப்பீங்க. இதுவரை தடைப்பட்டுவந்த சுபநிகழ்ச்சிகள்கூட இப்போது தடைகள் நீங்கி உடனுக்குடன் நடந்து முடியுறதுக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. மேலும் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகள், சிக்கல்கள் யாவும் இப்போது இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியும். மற்றும் இந்த சமயத்தில் மனசுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பல சம்பவங்கள் நடந்தேறும்.  வேலை தேடும் நபர்களுக்கு இப்போது உடனுக்குடன் வேலை கிடைகிறதுக்கும் ஒரு சிலர் சொந்தமா தொழில் செவதற்கும்,  வியாபாரம் ஆரம்பிக்கவும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும். மேலும் ஏற்கெனவே செய்துவரும் தொழில் , வியாபாரம்கூட இந்த சமயத்தில்  சூடு பிடிக்கத் தொடங்கி, மிகவும் நல்ல முறையில் நடந்து நல்ல லாபம் ஈட்டித் தரும். வருமானம் பிச்சி உதறும். வரவேண்டிய பாக்கிகள் உடனுக்குடன் வசூலாகிடும். இந்த சமயத்தில் எப்படியாவது உங்க கையில் பண நடமாட்டம் இருக்கும். ஏற்கெனவே பிரிந்திருந்த உறவினர்கள்  இப்போது ஒண்ணு சேர்ந்துடுவாங்கன்னுதான் சொல்லணும். மேலும் இந்த சமயத்தில் உங்க மனதுக்கு  மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகப்படியாகவே காணப்பட்டு வரும். இப்படி ஜாலியாகவே இந்த 4 மாதத்தை தள்ளிடலாம். மேலும் கடந்த காலத்தில் நீங்க உட்டதை இரன்டு மடங்கா இப்போது புடிச்சிடலாம். இந்த சமயத்தில் உங்க பெயர் , புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அனைத்தும் உயரும். இப்போது உங்க குடும்பத்தில்  மகிழ்ச்சி காணப்படுவதுடன் கணவன்-மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். மற்றும் தடைப்பட்டு வந்திருந்த அனைத்துவிதமான நல்ல காரியங்களும் சுபநிகழ்ச்சிகளும் இப்போது மளமளன்னு நடந்து முடிஞ்சுடும். மேலும் இந்த சமயத்தில் நீங்க தொட்டது துலங்கும்; நினச்சது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும். ஒரு சிலருக்கு இந்த காலகட்டத்தில், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இப்போது வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு கூட்டுத் தொழில் கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கும் சந்தர்ப்பம் வந்து சேரும். தற்சமயம் சிலர் தங்கள் பழைய வண்டி வாகனத்தை வித்துட்டு, புது வண்டி வாகனம் வாங்கவும் , பழைய வீட்டை வித்துட்டு ,புதுவீடு வாங்கவும் வாய்ப்பிருக்கு. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தேடி வந்து சேரவும் வாய்ப்பிருக்கு. சிலர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவரவும் வாய்ப்புண்டு. உங்களுடைய முயற்சிகள் எதுவானாலும் இப்போது வெற்றியடையும். புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறலாம். உங்களுடைய நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் இப்போது  நிறைவேறும். மேலும் ஒரு சில இளம் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். இப்படியாக பல வழியிலும் நற்பலன்களாகவே நடந்து வரும்.

பரிகார வழிபாடுகள்:-

வியாழக்கிழமைதோறும், தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, கடலை தானம் செய்து வரவும். திருச்செந்துர் சென்று வாருங்கள்.  மஞ்சள்நிற ஆடைகளை உடுத்திக்கொள்ளலாம். மஞ்சள்நிற ஆடைகளை பிறருக்கு தானம் செய்யலாம். ப்த்ரகாளியம்மன் வழிபாடு ராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் அமைந்துள்ள முத்துப்பட்டிணம் முத்துக் காமாட்சி அம்மனையும்  அதே சன்னிதானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகோர வீரபத்ரனையும், ஸ்ரீஉருமநாதரையும்   வழிபாடு செய்யவும். ஏழை விதவைப் பெண்களுக்கு உதவி செய்து வரவும்.

Tags : Guru Vakra sanchara palan guru peyarchi palan for the period 15.08.11 to 25.12.11 for the rashi mesham rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>