/* ]]> */
May 052012
 
மேஷம் ராசி
 • குரு பெயர்ச்சி பலன் மேஷ ராசி guru peyarchi palangal 2012 mesha rasi

  மேஷம் ராசி

  மேஷம் ராசி

  மேஷம்:

  அசுவனி; பரணி மற்றும் கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

  வருகிற மே மாதம் 17-ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு இரண்டாம் இடமான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும்  வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும்.  ரிஷபத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில்  1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள் 6-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் உங்களுடைய 8-ம் இடத்தையும் ,தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 10-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன்காரண்மாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.சனி பகவான்  இப்போது கெண்ட சனியாக சஞ்சரித்து , உங்களுக்கு சோதனைகளைக் கொடுத்தாலும்கூட குருபகவானால், சனி பகவானுடைய தீய பலன்கள் கட்டுப்பட்டு   கெடுபலன்களை ஏற்படுத்தாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.

  இரண்டாம் வீடு என்பது தன, குடும்ப, வாக்கு ஸ்தானம் ஆகும். பொதுவாக குரு பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமோக வெற்றி கிட்டும்என்றும்,வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியும் என்றும்,எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் அமோக வெற்றி கிட்டும் என்றும் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்றும் கூறலாம்.

  இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களெல்லாம் மாறிவிடும். குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரித்த காலத்தில் நீங்கள் எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டீர்களோ அதற்குச் சமமான யோக பலன்களை இப்போது அவர் உங்களுக்கு வழங்குவார். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். தடைகள், தானதங்கள், இடையூறுகள், இழுபறிகள் போன்றவை விலகி நிற்கும். உங்கள் பக்கமே வராது. எந்த வேலையைத் தொடங்கினாலும் முட்டுக்கட்டை ஏற்படாமல் எளிதாகச் செய்து முடிக்க முடியும். மனதில் தைரியமும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.

  இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.

  சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள

  இதுவரை வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிட்டும். சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு  இப்போது அதற்கான சூழ்நிலை உருவாகும். கலைஞர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவார்கள். எதையும் சிரமமின்றி செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.  உங்களுடைய பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் எப்போதும் தாராளமாகக் காணப்படும். ஆசைப்படும் பொருட்களை உடனுக்குடன் வாங்க முடியும். வராது என்று நினைத்து கைகழுவிவிட்ட பணம் கூட இப்போது வந்து சேரும். எதிர்பாராத பண வரவுகளு ஏற்படும்.

  அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

  உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

  இப்போது குரு பகவான் தன்னுடைய சுபாவத்தை வெளிப்படுத்தக்கூடிய இரண்டாம் இடத்துக்கு வருகை தந்து ‘குருபல’த்தையும் சுபத் தன்மையையும் ஏற்படுத்துவதால்,  இதுவரை தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் கூடி வரும். குருபகவானின் கருணையால திருமண சுப காரியமும் நல்லபடியாக முடியும். வாரிசுகளின் சுபகாரியங்களும் இனிதே நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வாட்டம் விலகி இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  பிள்ளைகளின் கலவி, வேலை வாய்ப்பு முதலியவை இனிது முடியும். ஏற்கெனவே அரைகுறையாக சம்பாதித்ததால் உங்களுக்கு உதவ முடியாமல் இருந்த  பிள்ளைகள்  இப்போது கைநிறைய சம்பாதித்து உங்களுக்கு போதுமான அளவு உதவலாம். கோபதாபம் என்று முறுக்கிக்கொண்டிருந்த வாரிசுகளெல்லாம் இப்போது மனம் மாறிஉங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டலாம்.

  மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.

  சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்கள், முக்கிய புள்ளிகள், பிரபலமானவர்கள், மேலிடத்துவாசிகள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், அதிகார பதவி வகிப்பவர்கள் ஆகியவர்களுடைய சந்திப்பு, சலுகை, ஆதரவு, பக்கபலம் என்றெல்லாம் கிடைக்கும்.

  இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.

  பொருளாதார மேம்பாடு ஏற்படுவது மட்டுமின்றி விரயச் செலவும் குறையும்.  மனம் மகிழும் செலவுகளான புதிய நகைகள் வாங்கும் நேரம் வரும். அடகு நகைகளை மீட்பீர்கள்.  புதிய ஆடைகளையும் வீட்டுக்குத் தேவையான நவீன பொருட்களையும்  வாங்குவீர்கள். புதுமையான கண்டுபிடிப்புகள், கலைநுட்பமான தயாரிப்புகள் என்று ஆசைக்கும் ரசனைக்கும் ஏற்ப அநேகப் பொருட்களும் வந்து சேர்ந்து,  உங்களுடைய வீட்டு சௌகரியங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.

  இனிமேல் நீங்கள் சிரமமான வாடகை வீட்டைக் காலி செய்யலாம்.  வேறு வசதியான வீட்டுக்குக் குடி போகலாம். வீடு அடமானத்தில் இருந்தால் மீட்கலாம். வில்லங்கத்தில் இருந்தால் சரிப்படுத்தலாம். சொந்தமாக மனை வாங்கலாம். ஏற்கெனவே வாங்கி திடலாக இருந்த இடத்தில் வீடு கட்டலாம். அரையும் குறையுமாக   நின்றுபோன கட்டுமான வேலைகளை தொடர்ந்துசெய்து முடிக்கலாம். கட்டியோ விலைக்கு வாங்கியோ சொந்த வீட்டுக்கு குடி போகலாம். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. ஆடு-மாடு, கால்நடைகளை விருத்தி செய்து கொள்ளலாம்.

  இதுவரை பணத்தை முன்னிட்டு இருந்த கடன்சுமை, கவலை, கஷ்டம் நாணய பாதிப்பு  நம்பிக்கை மோசம், இழப்பு, ஏமாற்றம் இடைஞ்சல், விவகாரம், வழக்கு, பிக்கல் பிடுங்கல்கள் இவை மாறிவிடும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.

  உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.

  சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.  இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்

  குபார்வை பலன்கள்

  குரு பகவானின் அருள் பார்வைகளில் ஒரு பார்வை பகை ரோக கடன் ஸ்தானத்தின் மீதும், மற்றொரு சுபப் பார்வை கஷ்ட ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தின் மீதும், பதிகின்றன. இதனால் இந்த கெட்ட இடங்கலின் தோஷங்கள் கட்டுப்படும். கடன் தொந்தரவுகள் கட்டுப்படும். வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். குறைக்கலாம்; சமாளிக்கலாம்; சரிப்படுத்தலாம். விவகாரங்கள், வழக்குகளாலும், பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாப்பு கிடைக்கலாம். பொதுவாக பகை, எதிர்ப்பு, வழக்கு, பிணிபீடைகள் கடன்கள், கஷ்டங்கள் விபத்துக்கள் ஆபத்துகள் ஆகியவற்றால், அல்லல் ஏற்படாதபடி , தற்காப்பு பாதுகாப்பு கவசம்போல இந்த குரு பார்வைகள் காப்பாற்றும். குருபகவானின் மற்றொரு மகத்தான பார்வை ஜீவன் காரிய ஸ்தானத்தின்மீது பதிவதுதான் மிகவும் பிரமாதம். இது உங்களை வலுப்படுத்த்க்கூடியது. உங்கள் ஜீவனத்தில் உண்டாகக்கூடிய கஷ்டங்களை அங்கு பதியும் குருவின் பார்வை  கட்டுப்படுத்தும். நஷ்டங்களை மாற்றி முன்னேற்றும். இது வேலை வாய்ப்புக்குத் தூண்டும். ஜீவனாதாரமான காரியம் எதிலும் பின்னடைவைப் போக்கி முன்னேற்றம் உண்டாக்கும். கடமைகளையெல்லாம் நடத்தி வைக்கும். உங்களுடைய தகுதியையும் மேம்படுத்தி உங்களை உன்னதமாக உயர்த்திக் காட்டும்.

  குரு கிரகம் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல், 3013 ஜனவர் மாதம் 29 -ம் தேதிவரை ( 3 மாதங்கள் 24 நாட்கள் )ரிஷப ராசியிலேயே வக்கிரகதியில் இயங்குகிறார்.  சுபக் கிரகம் நல்ல பலன்களைத் தரக்கூடிய இடத்தில் வக்கிரமானால், அந்தக் காலக் கட்டத்தில் சுப பலன்கள் குறையும். மாறும். எனவே செலவுகலும் நெருக்கடிகளும் காரியக் கஷ்டங்கலும், அசௌகரியப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய காலம் இது. கவனம் தேவை. இந்த நேரத்தில் எந்தப் புது முயற்சியும் தொடங்காமல் பொறுமைகாத்து இருப்பதும், நன்கு திட்டமிட்டபின் எதிலும் இறங்குவதும் கஷ்டங்களைக் குறைக்கும்.

  பரிகாரம்:

  வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள் நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும். பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று பகவானைத் தரிசித்து வரவும்.சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும்.

  வாழ்க வளமுடன்.

   

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.