காலை வணக்கம்
இன்றைய பாடல்: எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
படம்: குரு(1980)
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை :இளையராஜா
பாடியவர், நடித்தவர், இசையமைத்தவர் என்று அத்தனை பேரின் எக்ஸ்பெர்டீஸ் பற்றியும் பேச வைக்கும் பாடல். குழந்தை முகமும், அழகிய உடல் வாகும், பிரமாதமான நடிப்புத்திறனும் .. ஸ்ரீதேவிக்கு நிகரான இன்னொரு நடிகை இனி பிறந்து தான் வர வேண்டும். காட்சிக்கு எத்தனை தேவையோ அத்தனை அழகு, நளினம், நடிப்பு க்ரேட். ஆமாம் தண்ணீரில் விழுந்து விட்டால் தண்ணி அடித்த போதை மங்கி விடும் என்பார்களே அப்படி ஒன்றும் தெரியவில்லை!
ஜானகி! அம்மாடீ— போதையேறி விட்ட குரலில் நம்மை கிறங்க அடிக்கிறாரே ! எத்தனை கொஞ்சல் எத்தனை ஸ்வாதீனம்? வாராய் கண்ணா வா..என்பது தான் எப்படியான அழைப்பு? நீ …வா என்று கொஞ்சும் இவரை எல்லாருக்கும் பிடிக்குமே.பா ..பபப பா பா..எனும் போது டேக் ஆஃப் ஆகும் பாடல் லேண்ட் ஆகும் வரை ஒரே மிதப்பு தான்.
இளையராஜாவின் இசை மேதமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு..அட்டகாசமான காம்போசிஷன்..ராகத்திலும் போதை இருக்கிறதே..ம்ம்ம்ம்..
பப பா பா பா பா பாப பாபாபா பா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா(2)
நான் இங்கு நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை
ப ப ப..எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா..
ரோஜா மலர்ந்தது துவண்டது ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே (2)
இங்கே இவள் சொர்க்கம் எது இன்பம் தரும் சங்கம் எது- நீ
எந்தன் கண்ணில்..
வானம் விழுந்தது வளைந்தது நமக்கென்ன பாவம் போகட்டுமே (2)
சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ரகமோ இது- வா
எந்தன் கண்ணில் ..
paapaapababapa………
endhan kannil ezhulagangaL vaarai kanna vaa
endhan kannil ezhulagangaL vaarai kanna vaa
naan indru naanum illai
en nenjil naanam illai
pabapa….. endhan kannil ezhulagangaL vaarai kanna vaa
rojaaaa malarndhadhu thuvandadhu
rajavin kaigaL aendhattume
rojaaaa malarndhadhu thuvandadhu
rajavin kaigaL aendhattume
ingae ivaL sorgam edhu ?
inbam tharum sangam edhu ? – neeeeeeeee
endhan kannil ezhulagangaL vaarai kanna vaa
naan indru naanum illai
en nenjil naanam illai
vaanam vizhundhadhu vaLaindhadhu
namakenna paavam pogattume
vaanam vizhundhadhu vaLaindhadhu
namakenna paavam pogattume
sugame enna sugamo idhu ?
thallaadidum ragamo idhu ? – vaaaaaaaaaa
endhan kannil ezhulagangaL vaarai kanna vaa
endhan kannil lalalalala vaarai kanna vaa
naan indru naanum illai
en nenjil naanam illai
papapapabapabapa……..
தொகுப்பு
..ஷஹி..
குரு, கமல்,ஸ்ரீதேவி, எஸ்.ஜானகி, இளையராஜா, சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், வைரமுத்து, காதல் பாடல்கள், பாடல் வரிகள், விடியோ
guru, kamal, sridevi, s.janaki, ilaiyaraja,sugaragam, kaaliapaniyum konjam isaiyum, vairamuthu, love songs, song lyrics, tamil song lyrics, video
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments