/* ]]> */
Aug 082011
 

1. வன்முறையில்லாத , தமிழ்க் கலாச்சாரப் படங்களுக்கு மட்டுமே ‘ கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படுமென்று அரசு அறிவித்திருப்பது சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு  மகிழ்ச்சியளித்தாலும், அதே சமயம், சினிமாவில் யதார்த்தமான விஷயங்களைக் காட்ட முடியாதே என்ற கவலையும் இருக்கிறது. பொதுவாக, வரிவிலக்கிற்கு தகுதியான படங்களாகவே தங்கள் படம் இருக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்களாம்.  விரைவில் இது குறித்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்குமிடையே விவாதக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பெரிதும் காலியானது பலான படங்களை எடுத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தான். பிட்டு படங்கள் எல்லாம் இந்த வரிவிலக்கு ரத்தானதால் பெட்டிக்குள் முடங்கிவிட்டன.

2. வெண்ணிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ராஜபாட்டை ‘ படப்பிடிப்பு பிரம்மாண்ட செட் போட்டு தொடங்கப்பட்டது. ஆனால், ஆந்திர போலீஸாரால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர், போக்கிரி ரமேஷ்பாபு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஃபைனான்ஸ் பிரச்சினையால்,  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

3. சாலிகிராமம் வேதாசலம் தெருவில் குடி வந்திருக்கும் ‘ சுந்தரம் ட்ராவல்ஸ் ‘ ராதா  வீடுகட்டி குடியேறியிக்கிறார். ஆனால், ‘வண்டியை அங்க நிறுத்தக்கூடாது; இங்க நிறுத்தக்கூடாது என ஏரியாக்காரர்களைப் படுத்தி எடுக்கிறார்.

4. இந்தியில் ரீமேக்காகும் ‘ அருந்ததி ‘ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த , இந்தப்படத்தில் தெலுங்கில் நடித்த அனுஷ்காவையே பேசி முடித்திருந்தனர். ஆனால் ஒப்பந்தம் போடுகையில் அவர் முரண்டியதால், கரினா கபூரிடம் பேசியிருகிறார்கள்.

5. நடிகர் விஷால் , பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கும் ‘பிரபாகரன் ‘ என்ற படம் ‘ வெடி ‘ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம்.  ஆனால், படத்தில் விஷால் நடிக்கும் கேரக்டரின் பெயர் அப்படியே பிரபாகரன் என்றுதான் இருக்கிறதாம்.

6. இப்போது டைரக்டர் செல்வமணி ‘அகிலா ‘ என்ற படத்தை இயக்கி, அவரே நடிக்கவும் போகிறார் என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். டைரக்டர் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்ததால்தான் இதுவரை கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தாராம்.

7. குடும்பத் தலைவி வேடத்தில், கருங்காலி படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. இன்னொரு  படத்தில் ஐந்து வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டதற்கு மறுத்துவிட்டார்.  ‘ அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு என்னிடம் திறமை உள்ளது என்றாலும், இப்போதே அப்படி நடித்தால், இளமையான வேடங்கள் தரமாட்டார்கள்…’ என்றும் தான் மறுத்ததற்கு விளக்கம் கூறுகிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>