/* ]]> */
Oct 292011
 

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் விவேகானந்தர் பாறை அருகில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலையை அமைத்த பிரபல சிற்பி திரு.வை.கணபதி ஸ்தபதி.

 

 

இவர் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் உள்ள பிள்ளையார் பட்டியில் 1927 ம் ஆண்டு வைத்தியநாத ஸ்தபதிக்கும், வேலம்மாள் தம்பதியரின் முதல் மைந்தனாக பிறந்தார். இவரது துணைவியின் பெயர் தஷிணவதியாகும். பத்மபூஷன் உள்ளிட்ட அரசின் உயரிய விருதுகளை பெற்றவர்.

இவர் அழகப்ப செட்டியார் கல்லூரியில் கணிதபாடத்தில் பட்டம் பெற்றார்.1957 ம் ஆண்டு பழனி அருள் மிகு பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஸ்தபதியாக நியமிக்கப்பட்டார். 1960 ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். பிறகு மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டக்கலை ம்ற்றும் சிற்பக் கல்லூரியின் முதல்வராகவும் 27 ஆண்டு காலம் பணியாற்றினார்.

அமெரிக்கா,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை,கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவர்.தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை நிர்மாணித்த குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் பரம்பரையில் அவர் வந்ததாக அவரது குடும்பத்தார் கூறுவர். சோழ பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் இவர்களது மூதாதையர் சிவகங்கை மருது சகோதரர்களின் மேர்பார்வையில் இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளையார் கோயில் இவர்களது முப்பாட்டர்களான பெரியநாயகன் ஸ்தபதி மற்றும் பழம்பதி ஸ்தபதி ஆகியோரால் கட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் இவர்களது முன்னோர்கள் நகரத்தார் செட்டியார்களின் அரவணைப்பில் இருந்தனர்.

இவரது தந்தையார் பிள்ளையார் பட்டி பிள்ளையார் கோயிலின் ராஜகோபுரத்தையையும் கட்டியுள்ளார்.

தஞ்சாவூர் அருகில் உள்ள பூம்புகாரில் கல்லால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் கணபதி ஸ்தபதியால் கட்டப்பட்டது. அங்குள்ள காட்சியத்தில் உள்ள கண்ணகி மாதவி சிலைகள் இவரால் வடிக்கப்பட்டததாகும்.

சென்னையில் உள்ள சிவா-விஷ்ணு ஆலயத்தையும், மியாமி, செயிண்ட் லூயிஸ் மற்றும், வாஷிங்டன் ஆகிய இடங்களில் சிவா-விஷ்ணு ஆலயங்களை கட்டியுள்ளார்.

இவர் வேதங்கள், ஆகம சாஸ்திரங்கள், மாயாமத வாஸ்து, கஷியப சில்ப சாஸ்திரம், மயனின் ஐந்திரம், சைவ சித்தாந்தம் ஆகிவற்றில் புலமை பெற்றவர். இவர் ஸதபத்ய வேதம் எனும் நூலை எழுதியுள்ளார்.

பண்டையக் கட்டிடக்கலைக்கும் இன்றைய கட்டிடக்கலைக்குமிடையே பாலமாக விளங்கியவர் திரு கணபதி ஸ்தபதி என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பல கோயில்களை கட்டி முடித்த பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி தன் 83 ஆம் வயதில் கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் தேதி(6.9.11) அன்று பெருங்குடியில் இறைவன் திருவடியை அடைந்தார். அவரின் இழப்பு சிற்பி உலகுக்கே பெரும் இழப்பாகும்.

..மாதங்கி..

ganapthi sthapathi, architect, sirpi ganapathi sthapathi, thiruvalluvar statue, mathavi statue,

,kannagi kottam,சிற்பி கணபதி ஸ்தபதி, ஐய்யன் திருவள்ளுவர், கண்ணகிகோட்டம், கன்யாகுமரி, சிவாவிஷ்ணு,

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>