Mar 062012
ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ?
எப்படி கொண்டாடுவது?
ஹோலி வசந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. வசந்ததை வரவேற்கும் ஹோலி பண்டிகை நாளை துவங்குகிறது. சோம்பலும், சுறுசுறுப்பின்றி இருக்கும் பனிகாலம் விடைபெற்று, வசந்தகாலத்தின் ஆரம்பமாக ஹோலியை சநதோஷமாக வரவேற்று, வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடபடுகிறது. வடமாநிலங்களில் ஹோலியை டோல்ஜாத்ரா என்ற வசந்தகாலத்திருவிழாவாக 16 நாட்கள் கொண்டாடுகின்றனர்
அரக்கர்களின் அரசன் இரண்யகசிபு, பிரம்மாவிடம் வரம் பெற்ற அகந்தையால் தன்னை யாராலும் அழிக்கமுடியாது என்ற மமதையில் தானே கடவுள் என்று அனைவரையும் தன் பெயரை நாமமாக சொல்லி, தன்னை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அவன் மகன் பிரகலாதனோ விஷ்ணுவை வணங்கி வழிபட்டான். அதனால் கடுங்கோபம் கொண்ட இரண்யகசிபு தன் மகனை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு தோற்றான். இறுதியில் தன் தங்கை ஹோலிகா மூலம் தீயில் எரித்து கொல்ல திட்டமிட்டான். அதில் ஹோலிகா அணிந்திருந்த சால்வை நழுவி,பிரகலாதனை சுற்றி அவனை காப்பாற்றியது. தீயில் ஹோலிகா கருகி சாம்பலானாள். இதை நினைவு கொள்ளும் தினமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
சிவபெருமான் தியானத்தில் இருந்த சமயத்தில், அவரின் தியானத்தை கலைத்து, பார்வதிதேவியின் பக்கம் சிவபெருமானின் பார்வை பட காமதேவன் சிவபெருமான் முன் நடனமாடினார். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் காமதேவனை எரித்தார். காமதேவனின் மனைவி ரதிதேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க காமதேவனை சிவன் மீண்டும் உயிர்பித்தார். இந்த நிகழ்வினை நினைவு கூறும் விதமாக ஹோலி கொண்டாடப்ப்டுகிறது.
ஹோலி கொண்டாட்டத்தின் ஆரம்ப காலங்களில் வண்ணம் தரும் பூக்களை பறித்து வந்து, அதை வெயிலில் உலர்த்தி சாயம் தயாரித்து அதையே ஹோலியில் பயன்படுத்தினர். கால நிலை மாற்றத்தினால் பல்வேறு நோய் தாக்கும். இயற்கையான வண்ணம் நிறைந்த பூக்கள் மற்றும் மூலிகையால் உருவான சாயப்பொடி தூவும் போது நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததாக நம்பபட்டது. பலாஷ் மலர்களை சுடு தண்ணீரில் ஊற வைத்து மஞ்சள் வண்ணத்தை தயாரிப்பர். காலபோக்கில் ஹோலி பண்டிகையில் ரசாயனம் புகுந்து விட்டது.
ஹோலி பண்டிகையின் முதல் நாள் தீ மூட்டி ஹோலி தெகனாக கொண்டாடுகின்றனர். ம்றுநாள் வெள்ளை உடை அணிந்து வண்ணபொடிகளை தூவி மகிழ்வர்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments