/* ]]> */
Oct 092011
 

உயர்திணை

 

 

feminist poem

feminist poem

 

இதழ்களுக்கு மேலும்

இடுப்புக்குக் கீழும்

துறுத்திக் கொண்டிருப்பதாலேயே

நீ என்னைவிட உயர்ந்தவனா?

 

உனக்கு சளைத்தவள்

அல்ல நான்!

உன் உதிரத்தை விடவும்

சூடாகும் எனது!

உன் தினவை விடவும்

தினவெடுக்கும் எனக்கும்!

ஆண்டாண்டு

பரீட்சை முடிவுகள்

பறை சாற்றும்

உன்னை விடவும்

என் அறிவின் நீட்சியை!

 

ஆனாலும்…

 

கற்பு என்பாய்!

காப்பு என்பாய்!

விவரம் கேட்டால்

விலா எலும்புக்

கதை சொல்வாய்!

 

உன்

போலி வியாக்கியானம்

நம்பி விழுந்தவள்

அல்ல நான்!

உன்

தாலிச் சட்டங்களில்

வெம்பி வீழந்தவள்

அல்ல நான் !

 

அன்பிற்கு இளகும்

இந்த இதயம் மட்டும்

இல்லையென்றால்

என்றோ பொசுக்கியிருப்பேன்

உன்

சித்தாந்த சாம்ராஜ்யததை !

 

- அபி

 

Tags : ஃபெமினிஸம் பெண் விடுதலை ஆண் பெண் பேதம் பற்றிய தமிழ் கவிதை | tamil poem on feminist supremacy | பெண் விடுதலை | ஆண் பெண் | தமிழ் கவிதைகள் | கவிதை | feminist tamil poem | feminist tamil| tamil poems| tamil poem | கவிதைகள்

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>