/* ]]> */
Apr 282012
 

பெஃப்சி ஸ்ட்ரைக் விஜய் அப்பா மேல்

போலீஸ் நடவடிக்கை

FEFSI strike SAC Vijay Father SA Chandrasekar

FEFSI strike SAC Vijay Father SA Chandrasekar

நடிகரும் எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் லேபர் மினிஸ்டரை சந்தித்து “சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட எஸ்.ஏ.சந்திரசேகரை அழைப்பதுதான் சரியானது” என்று சொன்னார். இதை மறுத்த சி.எம். சரத்குமாரிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் இருக்கும் அட்-ஹாக் கமிட்டி பேச்சு வார்த்தையில் பங்கெடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சொன்னாராம். இதையடுத்து லேபர் மினிஸ்டரே இப்ராஹிம் ராவுத்தரை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது ராவுத்தர் “பெப்ஸியோடு பேச்சு வார்த்தை நடத்தத் தயார். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையில் பெப்ஸி சார்பா டைரக்டர் அமீர் பங்கெடுக்கக் கூடாது” ன்னு சொல்ல அதனை ஒத்துக்கொண்டார். ராவுத்தர், ஆர்.கே.செல்வமணி ஹென்றி உட்பட ஒரு தயாரிப்பாளர் குழுவும் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் “ தயாரிப்பாளர் சங்கப் பதவியிலிருந்து என்னை நீக்கியது செல்லாது “ என அறிவித்த எஸ்.ஏ.சி. விஜய் ரசிகர் மன்ற ஆட்களுடன் கவுன்சில் அலுவலகத்துக்கு வந்தார். ‘எஸ்.ஏ.சி.யிடம் ஏதாவது கேட்டால் பிரச்சினையாகலாம்’ என்று மௌனமாக இருந்த எதிர் அணி, தேனாம்பேட்டை காவல் நிலயத்துக்கு தகவலைத் தட்டிவிட … போலீஸார் வந்து எஸ்.ஏ.சி. யையும் உடன் வந்தவர்களையும் வெளியேற வைத்தார்களாம். இப்போது ராவுத்தர் தலைமையிலான குழு பெப்ஸியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>