ஃபிப்ரவரி ராசி பலன் மாத பலன் | February matha palan rasi palan
2013 பிப்ரவரி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்?:
மேஷம்:
இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். நிதி நிலை சீராக இருக்கும். வியாபாரிகள் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. அப்போதுதான் ஏற்படும் சரிவிலிருந்து தப்பித்துக்கொள்வதோடு சமூக மதிப்பிலும் நிலைமை கீழிறங்காமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்க்கவேண்டும். பணி மாற்றம் இருக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனத்தோடு இருந்தால் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். மூட்டுவலி, சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் திறமையைக் காட்டி தேர்வில் நல்ல முறயில் தேர்ச்சியடைவார்கள். குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் அனாவசியமாக பிரச்சினைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதுபோல உறவினர்களிடமும் ஜாக்கிரதையாகப் பழகினால் மட்டுமே தொல்லைகளிலிருந்து தப்பிக்கலாம். நண்பர்கள் வட்டம் பெருகும். உங்கள் எதிரிகளின் சதியிலிருந்து தப்பிக்க நீங்கள் ஜாக்கிரதையோடிருக்கவேண்டும். பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உற்சாகம் இருக்கும். அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரித் தொகைகளை முறையாகச் செலுத்திவிடவும்.
ரிஷபம்:
உங்கள் திறமையைக் காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். பணவசதியைப் பொறுத்தவரை சீரான நிலை இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கீழே விழுந்து காயம் ஏற்படலாம். விஷக்கடி ஏற்படலாம். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள். குடும்பத்தில் பிரியமானவர்களை சிலருக்கு பிரிந்திருக்க நேரும். உங்கள் மனைவிக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். வீட்டுப் பெண்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிரிகளிடம் நேருக்குநேர் மோதுவதைத் தவிர்க்கவும். அவர்களிடமிருந்து விலகியே இருங்கள். பெண்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள். அதிகமாகப் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம்:
உங்கள் தொழிலில் நீங்கள் ஒரு உயர்நிலையை அடையக்கூடும். உங்கள் வருமானம் பெருகும். ஆனால், நீங்கள் உங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. எனினும் , உணவுக்கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் ஆதரவை நாடுவார்கள். வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு மிளிரும். மாணவர்கள் படிப்பில் தங்கள் கடின உழைப்பை தளர்த்திக்கொள்ளக்கூடாது. அப்போதுதான் கல்வியில் முன்னேற்றம் காண முடியும். எதிரிகள் உங்களைவிட்டு விலகி ஓடுவார்கள். உங்கள் நண்பர்கள் வட்டாரம் சுருங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம். நீங்கள் அதிக தொலைவுப் பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
கடகம்:
சிம்மம்:
கன்னி:
வெளிநாட்டு வேலைக்கு முயல்கிறீர்களா? இப்போது கிடைக்கலாம். பணியிடத்தில் பதவி உயர்வும், புதிய பொறுப்பும் கிடைக்கும். உங்கள் அதிகாரியை மதித்து நற்பெயரைப் பெறுவீர்கள். வேண்டிய இடமாற்றமும் பெற முடியும். நல்ல ஆரோக்கியம் மிகுந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். உங்களுடைய போட்டியில் மோதுபவர்களைத் தோற்கடிப்பீர்கள். உங்கள் நண்பர் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். உறவினர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்கலுக்கு திருமணம் நிச்சயமாகும். விதவிதமான ஆபரணச் சேர்க்கையால், பெண்கள் மகிழ்வடைவார்கள். பிரயாணங்கள் மகிழ்வைத் தராது. வீட்டுத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் வீட்டில் நிறைந்திருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். இடமாற்றம் இருக்கும். பணவரவு நிறவாகவும் சீராகவும் இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் காண முடியும்.
துலாம்:
பணியிடத்தில் அதிகாரப் பதவி கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலைக்குப் பாராட்டு கிடைக்கும். தகுந்த வெகுமதிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமை வருமானம் ஈட்டித் தரும். வியாபாரிகளுக்கு ந்ல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் பாடங்களை நன்கு கிரகித்துக்கொண்டு, தேர்வுகளை ஊதித் தள்ளுவார்கள். நன்கு வாதாடுவதிலும் வல்லவராக விளங்குவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துளையுடன் நல்லுறவு சிறக்கும். உங்கள் எதிரிகள் உங்களை வீழ்த்த சமயத்தை எதிர்நோக்கியிருப்பார்கள். ஒரு பெரிய மனிதரின் நட்பு கிடைக்கும். உறவினர்களுடன் நல்லுறவு இருக்கும். பெண்களுக்கு திருமணம் ,புத்திரபாக்கியம் போன்ற பேறுகள் கிடைக்கும். புதிய நகைகள் வாங்கி மகிழ்வுறுவார்கள். ஒரு நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரலாம். இடமாற்றம் ஏற்படலாம். வி.ஐ.பி. ஒருவரை சந்திக்க நேரும். ஏமாற்றுக்காரர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். சுடுசொற்களை தவிர்த்திடவும்.
விருச்சிகம்:
தனுசு:
சில்ருக்கு மிக உயர்ந்த அதிகார பதவி கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கும் முயற்சியை சற்று தள்ளிப் போடலாம். வருமானத்துக்கு குறைவிருக்காது.ஆனால், செலவுகளுக்கும் குறைவிருக்காது என்பதால், கேளிக்கை, பொழுதுபோக்கு விஷயங்களுக்கான செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது நலல்து. கடின வேலைக்குப் பின் சற்று ஓய்வெடுப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தைச் சிதற விடாமல் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் வாழ்க்கைதுணையுடன் இணக்கமான நல்லுறவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு மிரட்டல் விடுத்தவண்ணம் இருப்பார்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால், அவர்களுடன் ஏற்படும் பிணக்கைத். பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். அவர்கள் பணியிடத்தில் வேலைகளை தாமதமாகத்தான் செய்யும்படி இருக்கும். பெண்கள் தங்கள் விலைஉயர்ந்த புடவைகள் சிலவற்றை திருட்டின் மூலம் பறிகொடுக்க நேரலாம். மிக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். அவை உங்களை மிகவும் களைப்படையச் செய்யும். இடமாற்றம் ஏற்படலாம். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.
மகரம்:
கும்பம்:
சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமை இரு மடங்காகும். அதற்கு உரிய அங்கீகாரம் அளிப்பதோடு, நிர்வாகம் உங்களுக்கு பதவி உயர்வும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கும். பலவழிகளிலிருந்தும் உங்களுக்கு வருமானம் வரும். அசையும் சொத்து அசையாச் சொத்து, வியாபாரம், கால்நடைகள் என்று பல வழிகளிலிருந்தும் பணம் வரும். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். வண்டி வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறக்கும். வியாதிகளிலிருந்து குணமடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஜொலிப்பது மட்டுமின்றி, பிற கலைகளைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடும். புத்திர பாக்கியம் ஏற்படவும் வாய்ப்புண்டு. உங்கள் உறவினர்களும் உங்களிடம் பிரியம் காட்டுவார்கள். ஒரு பிரபலமான மனிதருடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படும். உங்கள் எதிரிகள் அழிந்து போவார்கள். பிரயாணங்கள் உங்களுக்கு மகிழ்வளிக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வீர்கள். பெண்கள் மகிழ்ச்சியடைவீர்கள். திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் ஆடை அணிகலன்கள் என்று சந்தோஷங்கள். பெருகும்.
மீனம்:
ஒரு கடினமான வேலையைச் செய்து முடித்து அதற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் உங்கள் மேலதிகாரியிடமிருந்து பெறுவீர்கள். ஒரு சொத்து வாங்கும் முயற்சி வெற்றியளிக்கும். அதன் மூலம் மகிழ்ச்சியின் எல்லைக்குச் செல்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. அதுபோல ஆயுதங்களை உபயோகிக்கும்போதும் மிகுந்த எச்சரிக்கை அவசியம். கடின உழைப்புக்குப் பின் கட்டாயம் ஓய்வெடுங்கள். இல்லையெனில் சோர்ந்துபோக நேரும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் காட்டுவார்கள், தங்கள் கல்வியைத் தொடரும் முயற்சிகளை ஒன்றுவிடாமல் மேற்கொள்வார்கள். உங்கள் உறவினர்களிடம் கருத்துவேறுபாடுகளை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் அவர்களிடமிருந்து பிரிவடைவீர்கள். ஒரு பிரபலமான மனிதருடன் உங்களுக்கு பழக்கம் உண்டாகும். குறிக்கோளில்லாத பயணங்களை மேற்கொண்டு சலிப்படைவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பெண்களுக்கு திருமணத்துக்கு சாதகமான சந்தர்ப்பம் இப்போது வாய்க்கும். குழந்தையில்லாமல் இருக்கும் பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
Sorry, the comment form is closed at this time.