கிருஷ்ண உத்சவத்தின் ஆறாம் நாளான இன்று, பண்டிட் ஃபல்குனி மித்ராவின் ஆன்மீக கச்சேரி நடைபெற்றது.
இவர் துருபத் இசையில் வல்லமை பெற்றவர். துருபத் இசை என்பது வட இந்தியாவின் பாரம்பரிய இசையாகும் . துருவ-பாடா என்பதே துருபத் என்று மருவி உள்ளது . துருவ-பாடா என்றால் நிரந்தரக் கவிதை என்று பொருள்.
ஒரு பாடல் ஆரம்பிப்பதற்கு முன், அந்த பாடலின் கருத்தை விளக்கி பின் பாடியது செவிகளுக்கு இனிமை சேர்த்தது . ஸ்ரீசத்குரு ஞானானந்த சரஸ்வதி சுவாமிகளைப் பற்றி இவரே இயற்றி, பாடிய பாடல் மனதை கொள்ளை கொண்டது .
மதுவந்தி ராகத்தில் நந்தகோப என்று தொடங்கும் பாடலை தனக்கே உரிய பாணியில் பாடி சபையில் உள்ளோரை மயங்கச்செய்தார். இவர் துருபத் இசையை மட்டும் பாடாமல், பலவிதமான இசைகளின் சங்கமம் மற்றும் பலவிதமான கருத்துக்களைக் கொண்ட பாடல்களையும் பாடினார் .
ஷுர் தாளத்தில் ஒரு பாடலும் , ஹரிதாஸ் சுவாமி இயற்றிய ஒரு பாடலும், ரூபக தாளத்தில் ஒரு பாடலும், காபி ராகத்தில் ஒரு பாடலும், ஜெயதேவர் இயற்றிய அஷ்டபதி கல்யாண் ராகத்திலும், இதையே வங்க மொழியிலும் பாடி மனதை கவர்ந்தார்.இறுதியாக ஏழு ராகங்களின் கலவைகளாக ராகமாலிகாவில் ஒரு பஜன் பாடியது மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





மிக அருமையான விழா . நல்ல கட்டுரை!
thanx abi