/* ]]> */
Feb 272012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

படம் : நளதமயந்தி

பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம் , சின்மயி

பாடலாசிரியர் : நா . முத்துக்குமார்

பொம்முக்குட்டி அம்மா கீதுவா இது என்று ஆச்சர்யப்படவைக்கிறார் ஹீரோயின் , அழகான பாடல் , மயக்கும் வரிகளும் இசையும் ! லொகேஷனும் சூப்பர் .. சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்று நளதமயந்தி ..

 

 பாடல் வரிகள் :

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ

நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது –

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ

பூமி எதிர்பார்த்து மழை தூரல் விழுமோ

காதல் வரக் கால் நகங்கள் கோலமிடுமோ

கை நகத்தைப் பல் கடிக்க ஆசைப்படுமோ

எதுவுமே –எதுவுமே– எதுமே–

எதுவுமே நடக்கலாம் இறகின்றி இளமனம் பறக்கலாம்

விடுகதை இனிவரும் கதை ஒரு தொடர்கதை

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது –

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்

சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்

கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது

கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

இனி வரும்– இனி வரும் இரவெல்லாம்

சீனத்தின் சுவரைப் போல் நீளலாம்

உனக்கு நான் பிறந்தவள்

மனமெனும் கதவைத் தான் திறந்தவள்

காதல் பிறந்தால் காவல் கடக்கும்

பூட்டி வைத்த கூட்டுக்குள்ளே காதல் என்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ

நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ என்ன இது

 ஆங்கிலத்தில்:

Enna idhu enna idhu enna kolvadhu
ennavendru kaetpavaRku enna solvadhu (2)

puthithaaga aetho nigazhginRadho
puriyaamal nenjam negizhginRadho
naadi engum moodi oru koadi miNNal koalamidutho

(enna idhu…)

yaaridathil yaarukkoru kaadhal varumo
boomi edhir paarthu mazhai thooral vizhumo
kaadhal vara kaal viralgal koalam idumo
kai nagathai pal kadikka aasai padumo
edhuvumae… edhuvumae… edhuvumae…
edhuvumae… nadakkalaam iRagindrii
iLamanam paRakkalaam idhuvarai…
vidu kadhai inivarum kadhai oru thodar kadhai
vaendum vasantham vaasal varalaam
oomaikkoru vaarthai vandhu paadukindra vaeLai idhu
enna idhu enna idhu enna kolvadhu

kaatRadithu aNaivadhillai kaadhal agal dhaan
saatchi ena niRkiRadhu taj mahal dhaan
kallaraiyil urangum andha kaadhal enbadhu
kaN urakkam neengi ingu kan vizhithadhu
ini varum……………………………………………..
ini varum iravellaam cheenathin suvarai poal
neeLalaam unakku naan…. pirandhaval
manamennum kadhavai thaan thirandhavaL
kaadhal pirandhaal kaaval kadakkum
pootti vaitha koottukkullae kadhal endrum
nindradhillai

(enna idhu…)

தொகுப்பு

..ஷஹி..

 

tags

madhavan, geethu mohan, naladamayanthi, nalathamayanthi, enna ithu enna ithu , n. muthukumar, na. muthukumar, chinmayi,

மாதாவன், கீது மோஹன், நளதமயந்தி, என்ன இது என்ன இது , நா. முத்துக்குமார், சின்மயி, சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>