( pic courtesy buy and sell art .com )
தொடரும்
இந்த உன்
அறிவிக்கப்படாத
கதவடைப்புகளுக்குப் பகரமாக …
வர்ணங்கள் சேர்த்த வாசலை
உன் முன் விரிக்கிறேன்
நீ காலணிகளைத் தட்டவிருக்கும் மிதிகளை
இப்படித் துப்புரவாக உதறுகிறேன்
உனக்கான தேநீரில் இனிப்புச் சேர்க்கவென
பனைவெல்லம் கரைத்து வடித்திருக்கிறேன்
தலை கோதும் ஆவலாதியுடன்
நகங்களை மழுக்கி
உன் படுக்கை விரிப்பின்
சுருக்கங்களை அவ்வப்போது நீவுகிறேன்
உன் காலுறைகளுக்கான
பிரத்யேக அத்தரை இன்னமும் தருவித்து சேகரிக்கிறேன்
உன் சவரத்துக்கான கத்தியை
என் விரல்களில் ஒன்றினாலே சோதிக்கிறேன்
உன் சிசுப்பருவத்தின் என் தாலாட்டுக் குரலுக்கு
சாதகத்தாலே உயிரூட்டுகிறேன்
இன்னமும்
தொடரும்
உன்
கதவடைப்புகளுக்கு முன்னதாக
உன்னிடமிருந்தான ஒரு
வருந்தற்குறிப்பின் மென்துவர்ப்பு மட்டும் போதும்
சிறிது சுவை சேர்க்க
என் இந்த பின்மாலையின் பானத்துக்கு
.. ஷஹி ..
tags
mom , mummy , mother , mother and child , mother and son , kids , mother hood
தாய்மை , அம்மா , கவிதை , குழந்தை , தாய் , தாய் மகன் , தமிழ் கவிதை
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





Please comment with your real name using good manners.