/* ]]> */
Jan 132013
 

டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம் , டீச்சிங் ஃபாகல்ட்டி (Teaching Faculty ) சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ,சென்னை) 5 வருடங்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார் .2010 ஆகஸ்ட்டில் இருந்து திருச்சி GVN புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தஞ்சாவூர் துளுக்கம்பட்டியின் தஞ்சாவூர் கான்சர் சென்டரை திறம்பட நிர்வகித்து மிகச்சிறப்பாக புற்றுநோய் சிகிச்சை அளித்து வருகிறார் .

 

புற்றுநோய் பற்றின கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தொடர் ஒன்றை மூன்றாம்கோணத்துக்கு அளிக்க ஒப்புதல் அளித்திருக்கிறார் . வாசகர்கள் புற்றுநோய் குறித்த தம் சந்தேகங்களை moonramkonam@gmail.com முக்கு அனுப்பலாம்.

சிறுநீரகப் புற்றுநோய்

சிறுநீரகத்தில் உள்ள சாதாரண செல்கள் அசாதாரண செல்களாக மாறி குறிப்பிட்ட அளவுக்கு மீறி வளரும்போது சிறுநீரக புற்றுநோயாக மாறுகிறது. மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன, அவை முதுகின் மத்தியில் ஒவ்வொன்றாக இரு பக்கங்களிலும் உள்ளன. உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிப்பதும், கழிவை அகற்றுவதும், அதிகப்படியாக உள்ள உப்பு மற்றும் நீரை அகற்றுவதும் சிறுநீரகத்தின் வேலையாகும். சிறுநீரானது இந்த கலவையால் ஆனது.

சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் :

சிறுநீரக புற்றுநோய் ஆரம்பநிலையில் இருக்கும் போது அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை.

• சிறுநீரில் இரத்தம்
• உடலின் பின்புறத்தின் அடிப்பகுதியில் மற்றும் முன்புறம் அல்லது அடிவயிற்றில் வலி.
• வயிற்றில் அல்லது பின்புறத்தில் கட்டி.
• காரணம் இன்றி எடையிழப்பு.

இந்த அறிகுறிகள் பொதுவாக புற்றுநோய் காரணமாக ஏற்படுவது இல்லை. ஆனால் இந்த அறிகுறி உள்ளவர்கள் , உடனடியாக மருத்துவர் அல்லது செவிலியால் சோதனை செய்யப்பட வேண்டும்.

சிறுநீரக புற்றுநோயை கண்டறியும் சோதனைகள்:

மருத்துவர் உங்களுடைய சிறுநீரகத்தை சோதனை செய்து கட்டிகளையோ அல்லது அசாதாரண வளர்ச்சியையோ கண்டறியலாம்.

அச்சோதனைகள் பின்வருமாறு,

• அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகளை பயன்படுத்தி படம் எடுத்தல்)
• CTஸ்கேன் (ஒரு வகையான எக்ஸ் – ரே)
• MRI (காந்தந்தின் மூலமாக படம் எடுத்தல்)

சிறுநீரக புற்றுநோயின் நிலைகள் :

புற்றுநோய் எந்த அளவு உடலில் பரவி இருக்கிறதோ அதைபொறுத்து அதன் நிலையை மருத்துவர்கள் கண்டறிவார்கள்.

சிறுநீரகபுற்றுநோயின்சிகிச்சைபின்வருமாறு :

சிறுநீரக புற்றுநோய் உள்ளவர்களுக்கு கீழே உள்ள ஓன்று அல்லது இரண்டு சிகிச்சைகளுமே தரப்படும்.

அறுவைசிகிச்சை:

அறுவை சிகிச்சையின் மூலமாக பாதிக்கப்பட்ட சிறுநீரகம் நீக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட சிறுநீரகத்தின் பகுதியோ அல்லது முழுசிறுநீரகமோ நீக்கப்படலாம். எந்த அளவு பாதிக்கப்பட்ட சிறுநீரகம் நீக்கப்பட வேண்டும் என்ற முடிவானது பல விதங்களைசார்ந்தது, முக்கியமாக மற்றொரு சிறுநீரகம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பொறுத்தது.

புற்றுநோய் அல்லாத சிறுநீரகம் ஆரோக்யமாக இருந்தால், அது இரண்டு சிறுநீரகங்களின் வேலையையும் செய்ய முடியும். இந்த விஷயத்தில் அறுவைசிகிச்சை நிபுணர் பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுநீரகத்தை நீக்கிவிடலாம். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்படாத சிறுநீரகம் ஆரோக்கியம் இன்றி இருந்து (உதாரணமாக அந்த சிறுநீரகமானது நீரிழிவு நோயினால் பாதிப்பு அடைந்து இருக்கலாம்) அது மற்ற சிறுநீரகத்தின் வேலையையும் செய்ய முடியவில்லை எனில், இந்த நிலையில் நிபுணர் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தின் பகுதியை மட்டும் நீக்க வேண்டிவரும்.

மருந்துகள் :

பலவகையான மருந்துகள் சிறுநீரகபுற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். மருத்துவர்கள் இந்த மருந்துகளை அறுவைசிகிச்சையுடனோ அல்லது அதற்குப் பதிலாகவோ பரிந்துரைக்கலாம். இம்மருந்துகள், உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அளிக்க உதவிசெய்து, புற்றுநோய் அணுக்களுடன் சண்டையிட்டு புற்றுநோயின் வளர்ச்சியை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ செய்கின்றன.

சிகிச்சைக்கு பிறகு:

நோயுற்றவர் மீண்டும் புற்றுநோய் வந்துவிட்டதா என அடிக்கடி பரிசோதிக்கப்படுவர். பின் தொடர் சோதனைகள், ஆய்வக சோதனையாகவோ அல்லது எக்ஸ் – ரே சோதனையாகவோ இருக்கலாம். புற்றுநோய் மீண்டும் வந்தால் அல்லது பரவினால் – அதற்கு அறுவை சிகிச்சையோ அல்லது மருந்துகளோ அளிக்கப்படலாம்.

என்ன நாம் பின்பற்ற வேண்டியவை என்ன? மருத்துவரின் அனைத்து வழி முறைகளையும், சோதனை முறைகளையும், அடுத்து வந்து பார்க்க வேண்டிய நேரங்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மருத்துவரிடம் சிகிச்சை முறையையும் மற்றும் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் அல்லது செவிலியருக்கு நீங்கள் சிகிச்சையை எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை எப்போதும் தெரியப்படுத்துங்கள்.

மருத்துவரிடம் நீங்கள் சிகிச்சைக்கு அணுகும் போது கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கலாம்.

• சிகிச்சையின் பலன்கள் என்ன?

• இந்த சிகிச்சையின் மூலம் நான் நீண்டநாட்கள் உயிர்வாழ முடியுமா?

• இவை நோயின் அறிகுறிகளை குறைக்குமா அல்லது தடுக்குமா?

• சிகிச்சையின் பாதகங்கள் என்ன?

• இந்த சிகிச்சை தவிர வேறு ஏதாவது சிகிச்சை முறை உண்டா?

• இந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை எனில் எனக்கு என்ன நேரும்?

ஆசிரியர்

DR. S. அருண்சேஷாசலம்.M.D, DNB, MNAMS, DM

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>