/* ]]> */
Aug 212011
 

பாக்யராஜ்

1. நடிகை குஷ்பு, வடிவேலு ஆகியோருக்குத் தரப்பட்ட மரியாதையில் சிறு அளவுகூட பாக்கியராஜுக்குத் தரவில்லை என்ற ஆதங்கம் பாக்கியராஜ் ரசிகர்களுக்கு இருக்கிறது. ” இதில் ஃபீல் பண்ணவேண்டிய அவசியம் இல்லை.  நான் எதையும் எதிர்பார்த்து எதுவும் செய்வதில்லை. தேவைப்படும்போது கூப்பிடுவார்கள். நானும் போய் பேசிவிட்டு வருவேன் ” என்கிறார்  பாக்கியராஜ். . இன்னும் சொல்கிறார். ” கருணாநிதியின் தலைமை இடத்திற்கு எல்லோரும் ஏற்றுக்கொண்டது ஸ்டாலினைத்தான். கட்சியிலும் ஒப்புக்கொண்டிருக்காங்க. இதற்கு அழகிரியும் எதிர்ப்பு தெரிவிக்கலை. ….விஜயகாந்த்துக்கும் வடிவேலுவுக்கும் பர்சனல் பிரச்சினை. இதில் வேடிக்கை என்னன்னா … அவர் எம்.ஜி.ஆர். பாடல்களை அதிகமா பாடி ஓட்டு கேட்டதைப் பார்த்து, இவர் அ.தி.மு.க.வுக்குத்தான் ஓட்டுக் கேட்கிறார் என்று நினைத்து இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுவிட்டார்கள். இவ்வளவு தெள்ளத் தெளிவா பாடியவர் ஜெயலலிதாவைப் பத்திப் பேசலை. நானே பிரச்சாரத்துக்குப் போகும்போது  சில இடங்களில் இரட்டை விரலைக் காட்டுவார்கள். என்னடா நம்ம ஆள் இப்படிப் போயிட்டாரே என்ற ஆதங்கம் அவர்களுக்கு . அவர்களின் கையைக் குலுக்கிவிட்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லிடுவேன். ” என்கிறார். மேலும் ரஜினி பற்றிக் குறிப்பிடுகையில்,  “… ரஜினிக்கு கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், அவர் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாம், ‘ மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்’ என்று தேர்தல் அன்றுதான் சொல்லவேண்டுமா, என்ன? ” என்றவர் மேலும் கூறுகையில் ” அவர் சொன்னதால், எதுவும் நடந்துவிடவில்லை. இதைப் போன்ற பல தோல்விகளைச் சந்தித்து வளர்ந்திருக்கும் மிகப் பெரிய இயக்கம் தி.மு.க.. சொன்னதைச் செய்வார் கலைஞர் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால், கடைசி எட்டு மாதங்களில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மனதை மாற்றிவிட்டது. ” என்று மனம் திறக்கிறார், பாக்கியராஜ்.
2. பா.ம.க.வில் உட்கட்சிப் பூசல் வந்துள்ளதன் காரணம் என்ன என்ற  கேள்வி எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை. தலைமை மீது கோபப்பட்டு பலர் பேட்டி கொடுத்தனர். காரணம் தங்கள் சொத்தைக் காப்பாற்றிக்கொள்ளத்தானாம். கொஞ்சம் வசதியான பிரமுகர்களிடம் கட்சியின் வளர்ச்சிக்காக சொத்தை எழுதி வாங்கும் காரியத்தை சிலர் பார்க்கத் தொடங்கினார்களாம். ‘ தேர்தல்லயும் தோத்து சொத்தையும் இழக்கணுமா? ‘ என்ற கொந்தளிப்பில்தான் பலரும் கட்சியைவிட்டுக் கம்பி நீட்டுகிறார்களாம்.
3. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை அடைய ஞானதேசிகன், கடலூர் அழகிரி, வசந்தகுமார் ஆகியோர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், தங்கபாலு ராஜினாமாவுக்குப் பிறகு யாரையும் இன்னும் நியமிக்கவில்லை. இல்லாத கட்சிக்கு எதற்கு தலைவர் என்றுகூட டெல்லித் தலைமை நினைக்கலாம், இல்லையா?.
4. துவண்டுபோயிருக்கும் தி.மு.க. தொண்டர்களை சரிப்படுத்தும்  வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார், தி. மு.க.வின் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் , நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்றது.   அதில் கலந்துகொண்ட பலரும், தி.மு.க.வின் தோல்விக்கு சில காரணங்களைக் கூறினார்கள். இறுதியாகப் பேசிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் பேசும்போது ‘ நாம் வெற்றி பெற்றிருந்தால்,  மக்களுக்கு இன்னும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியிருப்போம். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் , வீட்டுவசதித் திட்டம் , சமச்சீர் கல்வித் திட்டம் இவைகள்  வீணடிக்கப்பட்டிருக்காது. நீங்கள் குறிப்பிட்டதுபோல தேர்தல் தோல்விக்கு குடும்ப அரசியலும்,ஸ்பெக்ட்ரம்  விவகாரமும்தான் காரணம்.’ என்று ஆதங்கப்பட்டார்.
5. அமைச்சர்களைக் கண்காணிக்க ஒரு குழு எல்லா இடங்களிலும் போடப்பட்டுள்ளதாம். அதனால்தான், கல்த்தாக்களும் இலாக்கா மாற்றங்களும் நடந்தனவாம்

8. ராமநாதபுரம் மாவட்டம்  மன்டபம் ஒன்றிய  செயலாளராக இருந்த கனகராசனுக்கும் அழகிரி ஆதரவாளராக இருக்கும் எம்.ஏ ஷேக் என்பவருக்கும் விரோதமாம். இதனால். இவரைப் பற்றி ஷேக்  அழகிரியிடம் ‘ பி.ஜே.பி.சார்பில் போட்டியிட்ட துரைக்கண்ணன் என்பவர் கனகராசனின் உறவினர் என்பதால், அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார்’ என்று  போட்டுக் கொடுத்தார். இதனால் கோபமடைந்த அழகிரி தேர்தல் முடிந்த ஒரு வாரத்திலேயே கனகராசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்க  வைத்தார். இந்த நீக்கம் மாவட்டச் செயலாளரான சுப. தங்கவேலனுக்கே தெரியாதாம். நீக்கப்பட்ட பின்னர் இவரைக் கூப்பிட்டு தலைமை விசாரித்ததாம்.  அதோடு மாவட்ட  செயலாளர் சு. தங்கவேலன் தேர்தலில் கனகராசன் திறம்பட வேலை செய்ததை எடுத்துச் சொல்லி இருக்கிறார். இவர் பக்கம் நியாயம் இருந்ததால், இவரை எப்போதும்போல செயல்பட சொல்லிவிட்டதாம் தலைமை.. ‘அதனால், நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்’ என்கிறார், கனகராசன். அழகிரி நடவடிக்கை எடுத்து தி.மு.க.வில் ஒருவர் மீண்டும் பதவிக்கு வரமுடியுமா? ஆதிசயம்தான் இது!.
10. தி.மு.க.வின் தோல்விக்கு குடும்ப அரசியல் காரணம் என கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள் என வேதனைப்பட்டிருக்கிறார், அழகிரி. இவரைச் சுற்றியுள்ளவர்கள் எந்த விழாவுக்கும் அழகிரி குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்துவிடுவார்கள். ட்ராஃபிக்கை நிறுத்தி எக்கச்சக்க போலீஸ் பாதுகாப்புடன்  பந்தா  செய்துகொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் எரிச்சலடைந்து போனார்கள். ஆனால், இப்போதோ தோல்விக்கு குடும்ப அரசியல் காரணம் என்று கூசாமல் சொல்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அழகிரி, என்ன செய்யப்போகிறார் என்று தொண்டர்கள் உன்னிப்பாக  கவனிக்கிறார்கள். ” தன் குடும்பத்தினர் படத்தை இனிமேல் கட்சிக்காரர்கள் வீட்டு விஷேஷங்களுக்கோ, கட்சி மீட்டிங்குகளுக்கோ  போடக்கூடாது என்றும் சொல்லிவிட்டாராம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>