/* ]]> */
Jul 302011
 

திமுக வில் தொகுதிக்காக கட்டிய பணம் திரும்ப வருமா?

anna arivalayam

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி. மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் சுமார் 5000 பேருக்கு மேல் பணம் கட்டியிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில், ஒருவர் சி. கோபு என்பவர். இவர் தேர்தலில் போட்டியிட விழைந்து விருப்பமனு கொடுத்து ரூ. 5000 பணமும் கட்டியிருந்தார். இந்தத் தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.  இந்தக் கடிதம் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த சி.கோபு  கடந்த 1996 -ம் ஆண்டு  சேலம் மாவட்டம் அணைக்கட்டுத் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றவர். தி.மு.க.வின் தீவிர விசுவாசியான இவர், பின்னர் அணைக்கட்டு ஒன்றிய சேர்மனாகவும்  பதவி வகித்தவர். இந்த தேர்தலில் இவருடைய தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.  ” பழைய தேர்தல்களில் விருப்பத் தொகுதி கிடைக்கவில்லையென்றால், தேர்தல் முடிவதற்குள்ளாகவே  பணம் திரும்பக் கிடைத்துவிடும். ஆனால், இந்தமுறை இன்னும் பணம் திரும்பக் கிடைத்தபாடில்லை.  இதுபற்றி தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் அதற்கும் எந்தப் பதிலும் வரவில்லை. ஆகவே மீண்டும் கடிதம் எழுதினேன். இது எனக்கு பெரிய பணம் இல்லைதான்.  கழகத்துக்கு நிதி நிலைமை  சரியில்லையென்றால் சொல்லிவிடட்டும். அதற்கு மாற்றுவழியை நானே சொல்கிறேன். அமைச்சர்களும், நிர்வாகிகளும்  கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில்,கொள்ளையடித்த பணத்தைப் பறிமுதல் செய்து எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கட்டும்”. என்கிறார் சி. கோபு.  ” இதற்குப் பிறகும் எனக்குப் பணம் கொடுக்கத் தவறும் பட்சத்தில் , நான் வழக்குத் தொடரவும் தயங்கமாட்டேன்.” என்கிறார், கோபு.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>