/* ]]> */
Aug 052011
 

1. அழகிரி மிகுந்த மனக் கலக்கத்தில் இருக்கிறார். மதுரை கலெக்டர் சகாயம், தனக்கு எதிரான விஷயங்களைத் திரட்டி , அந்த சீக்ரெட் ஃபைலோடு மூன்று நாட்களாக சென்னையில் தங்கியிருந்தார் என்ற தகவல்தான் அவரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதாம். போதாக்குறைக்கு டெல்லித் தகவலும் கவலையளிப்பதாக இருக்கிறது. சென்னையிலிருந்து நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும்,  தன்மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோறுகிற கடிதம்தான் அது என்பதிலும் கலக்கமடைந்துள்ளார்.  ஏற்கெனவே இந்தக் கடிதம் பற்றி மூன்றாம் கோணத்தில்  கூறியிருந்தோம்  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி என்னதான்  இருக்கிறது, கலெக்டரின் சீக்ரெட் ஃபைலில் என்று மீடியாக்களில்  வெளிவந்துள்ள செய்திகளின்படி பார்த்தால்,  மதுரை மாட்டுத் தாவணிப் பகுதியில் அமைந்துள்ள நாகநாதஸ்வாமி கோவிலுக்குச் சொந்தமான இடத்தை  அழகிரியின் நண்பரும் ,பேராசிரியரின் அண்ணன் பாலகிருஷ்ணனின் மருமகனுமான சுகுமாறன் பெயரில் கிரயம் செய்யப்பட்டு பிறகு இதை அழகிரி தன் மனைவி காந்தி அழகிரியின் பெயரில் கிரயம் செய்துகொண்டிருக்கிறார். இந்த கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், ‘ தயா ஐ.டி. பார்க் என்ற பெயரில்  பிரம்மாண்டமான கணினி பூங்காவை அமைத்திருக்கிறார் என்பது அழகிரி மேலுள்ள குற்றச்சாட்டு. மேலும் இந்த இடத்துக்கு எதிர் பகுதியான அதே கோவிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தையும் அழகிரி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அபகரித்துக்கொண்டார் என்றும் புஹார் தரப்பட்டிருக்கிறது. ஆக கோவில் இடத்தை அழகிரியும் காந்தி அழகிரியும் அபகரித்து ஐ.டி. பார்க் கட்டிவிட்டார்கள் என்ற ரீதியில் ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டுதான் சகாயம் சைலண்டாக சென்னை சென்றார்.  அங்கே ஆகவேண்டிய சில காரியங்களைத் தொடங்கி வைத்துவிட்டு மதுரை திரும்பியிருக்கிறர். இந்தக் குற்றச்சாட்டின்மீது முதல் நடவடிக்கை காந்தி அழகிரிமீது பாயும் . நாடாளுமன்ற சபாநாயகர் அனுமதி கிடைத்தவுடன்,  அழகிரிமீதும் பாயலாம்.
2. பாளையங்கோட்டைச் சிறையில் இருக்கும் பொட்டுசுரேஷ் தன்னை வந்து சந்திக்காத தென்மண்டல முக்கியப் புள்ளிகளின்  பட்டியலை எடுத்து வைத்தீருக்கிறார். ‘ எப்படியும் கூடிய சீக்கிரம் வெளியில் வருவேன். என்னை வந்து பார்க்காமல், பொட்டு தொலஞ்சாண்டான்னு  சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கும் எவனையும் விடமாட்டேன். அழகிரியண்ணனிடம் சொல்லி அவுங்க பதவியையெல்லாம் பறிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.அதேபோல என்னைப் பற்றியும் என் சொத்துக்களைப் பற்றியும் கட்சியில் இருக்கும் சிலர்தான் போலீஸுக்குப் போட்டுக் கொடுத்துட்டு இருக்காங்க. அவுங்களையும் விடமாட்டேன்.’ என்று தன்னைப் பார்க்க வருபவர்களிடம் கருவிக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அழகிரி காதுக்கு கொண்டுபோயிருக்கும் உ.பிக்கள், ‘பொட்டு சுரேஷை நீங்கள் தூக்கி எறியாவிட்டால், ஆபத்துகள் அவர்மூலமே படையெடுத்துவரும். ‘ என வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
போலீஸ்காரர்கள் மத்தியிலும் பொட்டு பற்றிய வெறுப்பு நிறையவே இருக்கிறது. பெரிய போலீஸ் அதிகாரிகளை , ஐ.பி.எஸ்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எல்லாம்  பொட்டு பெயர் சொல்லிக் கூப்பிடுவாராம். தனக்குக் கீழ் இருக்கும் ஊழியர்கள் முன் பொட்டு இப்படிக் கூப்பிடும்போது  அதிகாரிகள் கூனிக் குறுகிப்போய் விடுவார்களாம். இது இப்ப அவர்களின் நேரம். பொட்டுவைப் பழிவாங்காமல் விடுவார்களா?  ‘ உங்க அழகிரி பெயரை வச்சி, பினாமிப் பெயர்களில் பொட்டு வாங்கிக் குவிச்சிருக்கும் சொத்துகள் பற்றி உங்க அழகிரிக்கே தெரியாது. ‘ என்று அழகிரிக்கு நெருக்கமானவர்களிடம் போலீஸ் வட்டாரம் கூறவே, இந்தத் தகவல் அழகிரி காதுக்கு அப்படியே பாஸானது. திகைத்துப்போன அழகிரி விசாரித்ததில் – மதுரையில் மட்டும் பொட்டுக்கு பினாமி பெயர்களில் மூன்று பெட்ரோல் பங்க்கும் எஸ்.எஸ் காலனியில் ஏழு வீடுகளும், அதோடு திருப்பாலை, ஐய்யர் பங்களா,பொறியாளர் நகர் பகுதிகளில் ஐந்து வீடுகளும் இருக்கு. இதுதவிர நவீன் லாட்ஜ்காரர் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி பொட்டுவிடம் வந்தபோது அவரை போலீஸ் அதிகாரிகள் மூலம் மிரட்டி, அவரது நவீன் லாட்ஜையே அடிமாட்டு விலைக்கு எழுதி வாங்கிக்கொண்டாராம். இது தவிரவும் பல இடங்களில் அவருக்கு சொத்துக்கள் இருக்கு- என தகவல்களைத் திரட்டிக் கொடுக்கவும்  ‘ இவ்வளவு வசதி பொட்டுவுக்கு எப்படி வந்தது’ என்று  என அழகிரியே திகிலடைந்து போனாராம். எனினும் திடீரென அவரைக் கைவிட்டால், அவரைக் கையில் வைத்துக்கொண்டு போலீஸ் தனக்கு நிறைய தொல்லைகள் கொடுக்கும் என்று பொட்டுவிடம் பட்டும் படாமலும் நடந்து வருகிறார்.,அழகிரி.

பாளை சிறையில் அவரை ஜூலை 28ம் தேதி காலை சந்தித்த மாஜி மந்திரிகளான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், மைதீன்கான், தங்கம் தென்னரசு, தமிழரசி ஆகியவர்களிடம் ” மத்திய மந்திரியாக இருக்கும் நிலையிலும் என்னை குண்டர் சட்டத்திலிருந்து அழகிரியண்ணனால், காப்பாற்ற முடியவில்லையா? போலீஸ் இப்படியெல்லாம் செய்யும் என்று அவருக்குத் தெரியாதா?தொண்டர்களைத் திரட்டி பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி ,  அரசைப் பயமுறுத்தச் சொல்லுங்க. அப்பதான் என்னை விடுவாங்க. கொசுக்கடி தாங்கமுடியவில்லை” எனப் புலம்புகிறாராம்.

3. தி.மு.க. மா.செ.வான தளபதியும் அதே பாளை சிறையில்தான் இருக்கிறார். பெயிலை எதிர்பார்த்தார். ‘ பசுமலைதியாகராஜர் காலனி வீடு விவகாரம் தொடர்பா போலீஸ் கழுவத்தேவர்கிட்ட இவருக்கு எதிரா எழுதி வாங்கியிருக்கும் புஹார் என்னையும் குண்டர் சட்டட்தில் போட வச்சுடும் போலிருக்கு.  என்னுடைய தம்பி கிட்னி ரெண்டும் ஃபெயிலியராகி உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கான். கடைசியா என்னைப்  பார்க்கணுமுன்னு துடிக்கிறான். அவனைப் பார்க்கக்கூட முடியாது போலிருக்கு. என கலங்கியிருக்கிறார். ( அவருடைய தம்பி கடந்த 28ம் தேதி வியாழனன்று இறந்துவிட்டார். ) இதையெல்லாம் கேட்ட மாஜி மந்திரிகளும் கலங்கிப் போய் ‘ கவலைப்படாதீங்க ‘ என்று தேற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில் மா.செ. தளபதியை சந்தித்த அவரது மனைவி, சாவித்ரி, மற்றும் குடும்ப உறுப்பினர்கள்’ நமக்கு அரசியலே வேண்டாம். பட்ட கஷ்டங்களும் கிடைத்த அவமானங்களும் போதும். அரசியலைக் கை கழுவிவிட்டு நீங்க பிஸினஸைப் பார்த்தாலே போதும் ‘ என்று கண்ணீருடன் சொல்ல, தளபதியும் மிகவும் கலக்கத்தில் இருக்கிறாராம்.
4. திருச்சி சிறையில் இருக்கும் ‘அட்டாக் ‘ பாண்டிமீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதைக்கண்டு ரொம்பவும் ஷாக்காகிவிட்ட பாண்டி, ‘ பொட்டு சுரேஷைப் பார்க்கும் அழகிரியண்ணனுக்கு என் நினைவு வரவில்லையா? நான் செய்த தியாகத்தைப் பொட்டு செய்திருப்பாரா? அண்ணன் பெயரைச் சொல்லி மெலுக்காகவும் அதிகாரத்தோடும் நான் வலம் வந்ததில்லை. ஆனால், உயிரைப் பணயம் வைத்து அவருக்காக நான் எவ்வளவோ செய்திருக்கிறேன்  என்று அழகிரி காதுக்குப் போகும்படி புலம்பிக்கொண்டிருந்தார். ‘ இப்படி ஆளாளுக்கு என் தலையை உருட்டி விளையாடுகிறார்களா ‘ என்று  எரிச்சல்பட்ட அழகிரி’ சரி ‘ ‘ ‘ அட்டாக் பாண்டியையும் சந்திக்க ஏற்படு பண்ணுங்க’ என்று தனது சகாக்களிடம் சொல்லியிருந்தார்.

5.வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில்  அ.தி.மு.க. வோடு கூட்டணிங்குறதில் விஜயகாந்த் உறுதியா இருக்காரு. ஆனா இப்ப வரைக்கும் ஜெ,வை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கலியாம். அதோடு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘திரும்பிப் பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சியில் பிண்ணனிப் பாடகர் தீபன் சக்கரவர்த்தியின் ‘மலரும் நினைவுகள் ‘  ஒளிபரப்பானது. அதில் விஜயகாந்த் நடித்த  ‘ வேலுண்டு  வினையில்லை ‘ங்குற படத்தில் அவர் பாடிய பாடலை ஒளிபரப்பினாங்க. அந்தப் பாடல் காட்சியில் நடிகை அம்பிகாவை மட்டும் காட்டிய ஜெயா டி.வி. அவரோடு நடிச்ச விஜயகாந்தைக் காட்டாம மறச்சிட்டு , அந்த இடத்தில் தீபன் சக்கரவர்த்தியின் ஸ்டில்லைப் போட்டுடுச்சு. இது கார்டன் உத்தரவாம். கார்டனோட இன்னொரு உத்தரவும் தெரியணுமா?  நாம் தமிழர் கட்சி சீமான், தன் கட்சியினரோடும், இயக்குனர் மணிவண்ணனோடும் கோட்டையில் ஜெ.வைச் சந்தித்திருக்கிறார்.  அதேபோல டாக்டர் சேதுராமன், டாக்டர் கிருஷ்ணசாமி இவங்களும் தனித்தனியே ஜெ.வை சந்திச்சாங்க. அவுங்க சந்திப்பு படமெல்லாம் பத்திரிக்கைகளில், வெளியானது.  ஆனா, ஜெ. – சீமான் சந்திப்பு படம்’ நமது எம்.ஜி.ஆரில்’ கூட வரலை.

Tags : tamilnadu political hot news about tamil minister Azhagiri and his associates and Azhagiri arrest

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>