/* ]]> */
Feb 122012
 

மைக்கேல் கிளார்க் vs  தோனி

கிளார்க் அவமானப்படுத்திய தோனி Michael Clarke insults indian cricket captain Mahendra Singh Dhoni

மைக்கேல் கிளார்க் vs தோனி

ஆஸ்திரேலிய காப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய காப்டன் தோனியை அடிலெய்டில் நடந்த மாட்சுக்கு பின் நடந்த பரிசளிக்கும் விழாவில் அவமானப்படுத்தி விட்டார்.  தோனியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஆஸ்திராலியா அணியை அசத்தலாக ஜெயித்த பிறகு நடந்த பரிசளிக்கும் விழாவில் கிளார்க்கிடம் விழா நடத்துனர் ” மிகச் சிறந்த பிளேயர் அல்லவா தோனி ?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கிளார்க் , ” ஆமாம், கடைசி வரை நின்று அணியை வெல்ல வைத்து விட்டார். அவர் ஒன் டே ஆவரேஜ் 50க்கும் மேல். அதுவும் ஸ்ட்ரைக் ரேட் 90க்கும் மேல்.  அவர் ஒரு சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆட்டக்காரர் ” என்றார். இதை சொல்லும்போது மைக்கேல் கிளார்க் “ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர்” என்பதை சற்று அழுத்தியே சொன்னார்.

அதாவது தோனி சிறந்த டெஸ்ட் பிளேயர் இல்லை என்னும் பொருள்பட கிளார்க் பேசினார். ஒரு பரிசளிக்கும் விழாவில் ஒரு கேபடன் இன்னொரு கேபடனைப் பற்றி இப்படி பேசியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை. அவர் டெஸ்ட் போட்டு கேப்டன் பதவியில் இருந்து விலக் வேண்டும். டெஸ்ட் அணியிலிருந்தே விலக வேண்டும் என்று பல குரல்கள் எழும்பின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஒரு பரிசளிக்கும் விழாவில் கிளார்க் இவ்வாறு தன் சக கேபடனை பற்றி குத்திக் காட்டி பேசியது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தோனி பின்னர் பேசுகையில் கிளார்க் நிகழ்த்திய அவமானத்தைப் பற்றி கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை.

பொதுவாகவே ஆஸ்திரேலிய அணி எதிரணியைப் பற்றி கேவலமாக பேசி அவர்களை மன பலம் இழக்க செய்வதில் வல்லவர்கள். ஆனால் ஒரு அணி கேபடன் இன்னொரு கேப்டனை பரிசளிக்கும் விழஃஅவில் வைத்து அவமானப் படுத்தியிருப்பது இதுவே முதல் முறை.

இதற்கிடையில் போட்டியின் நாயகனாக அறிவிக்கப்பட்ட கௌதம் கம்பீர் யுவராஜ் சிங்க் நலம் பெற உருக்கமாக வேண்டியது அனைவரையும் இளக வைத்தது.

கிளார்க தனக்கு நிகழ்த்திய அவமானத்தை பற்றி பேசாத போதிலும் , தோனி யுவராஜ் சிங்க் “பல சோதனைகளை சந்தித்தவர், இந்த சோதனையையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார் ” என தெரிவித்தார்.

செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Dhoni insulted by Clarke

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>