/* ]]> */
Jan 162012
 

2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். இந்தியா 28 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பையை வென்றது. இறுதி போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய தோனி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேப்டன் இவர் தான் என்று அனைவரும் தோனியின் புகழ் பாடினர். தோனி ஒரு சிறந்த ஒரு நாள் வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் தலைமை தான் சந்தேகத்திற்குறியது. உலகக்கோப்பை வெற்றியில் அவரது தவறுகள் வெளியே தெரியவில்லை என்பது தான் உண்மை. சுழற்பந்து மைதானமான மும்பையில் அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கை வீரர்கள் ஸ்ரீசாந்தை வெளுத்து வாங்கியதை அனைவரும் மிக எளிதாக மறந்தனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்காக தான் ஸ்ரீசாந்த் பற்றி இங்கு கூறியுள்ளேன்.

அதையெல்லாம் விடுங்கள் ஒருநாள் போட்டியில் கில்லியாக இருக்கும் அவர் டெஸ்ட் போட்டிக்கு தகுதியற்றவர் என்பதே உண்மை.முதலில் டெஸ்ட் போட்டிக்கான எந்த நுணுக்கமும் அவரிடத்தில் இல்லை என்பது வருத்ததிற்குறியது.இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அவர் இந்திய கிரிக்கெட்டின் உயிர்மூச்சான ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடியதே இல்லை(குறிப்பு- சச்சின் கூட நேரடியாக இந்திய அணிக்கு வந்தவர் தான், அதுதான் சச்சின். .!!). டெஸ்டிற்கு தேவையான பொறுமை அவரிடத்தில் எள்ளளவும் இல்லை. மேலும் தற்காப்பு ஆட்டம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவிற்கு இவர் ஆட்டமிழக்கும் விதங்கள் இருக்கும்.

இதற்கெல்லாம் சாட்சி இவரது டெஸ்ட் பேட்டிங் புள்ளிவிவரம். ஒருநாள் போட்டியில் இவரது சராசரி வியக்கவைக்கும் 51.15, ஆனால் இவரது டெஸ்ட் சராசரியோ வெறும் 37.32. இன்னும் ஆராய்ந்தால் ஜாம்பவாங்களுடன்(இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை) இவரது சராசரி கேவலம் 34.பலம் குறைந்த அணிகளுடன் 42.93. இது கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் மற்ற இந்திய வீரர்களுடன் ஒப்பிட்டால் மிகவும் சாதரணமானது.[ சச்சின்(55), டிராவிட் (53), சேவாக்(51), லக்ஷ்மன்(47)]. நமது கேப்டன் உள்நாட்டில்(43) புலிக்குட்டி( அப்பொழுதும் புலியில்லை) வெளிநாட்டில் பூனை(33.48).கடைசி பதிமூன்று ஆட்டங்களில் இவரது ரன் விவரம்- 17,3,0,0,144(இது மொக்க டீமுங்கோ),8,13,6,23,57,2,12,2. சரி மொத்த அணியும் தானே தினறுகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஐயா மொத்த அணியும் சிறப்பாக ஆடிய பொழுதும் இவர் ஆட்டம் சுமார் தான் என்பதை நான் கூற தேவையில்லை, நான் மேலே கூறிய புள்ளிவிவரமே சான்று.

இவர் பேட்டிங் இறங்கும் ஆறாவது இடம் மிக முக்கியமானது. முதலில் விக்கெட்டுகள் சரிந்தால் அணியை கரை சேர்க்க வேண்டிய பொறுப்புடைய இடத்தில் இருப்பதால் தொடர் தோல்விகள் மன்னிக்க தகுந்தவையல்ல. இவர் தான் சிறந்த கேப்டன் ஆயிற்றே,பேட்டிங் தோல்விகளை பொறுத்துக்கொண்டால் என்ன? என நீங்கள் கேட்களாம். உங்கள் முதல் கேள்வியே தவறு நண்பா. .!!

ஏன் அவர் சிறந்த கேப்டன் இல்லை என பின்னர் பார்ப்போம். . .!!

-Arjun

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>