/* ]]> */
Jul 172011
 

தெய்வத்திருமகள் விமர்சனம்

தெய்வத்திருமகள் சினிமா விமர்சனம் – தெய்வ திருமகள் திரைப்பட விமர்சனம்

தெய்வ திருமகள் விமர்சனம்

தெய்வ திருமகள் விமர்சனம்

இயக்கம் : விஜய்
தயாரிப்பு : எம்.சிந்தாமணி
இசை : ஜி.வி.பிரகாஷ்
நடிப்பு : விக்ரம், பேபி சாரா, அனுஷ்கா, அம்லா பால், சந்தானம், நாசர், டிவி பாஸ்கர்

முன்னோட்டம் :

தெய்வத்திருமகள் விக்ரம்

ஆங்கிலத்தில் வந்த ஐ எம் சாம் படத்தையும் இந்தியில் வந்த மை நேம் இஸ் கான் படத்தையும் இன்ஸ்பிரேஷனாக கொண்டு எடுக்கப்பட்ட படம்… விக்ரம் நடிப்பில் உச்சத்தை தொட்ட படம் என்று இயக்குநர் விஜய் சொன்னது… அனுஷ்கா அமலா பால் என இரு பரபரப்பு கதாநாயகிகள் இந்த படத்தில் இருந்தது … இது தான் தெய்வத்திருமகளின் எதிர்ப்பார்ப்புகள்

தெய்வத்திருமகள் விமர்சனம்

கதை :

 மனநிலை குன்றிய கிருஷ்ணா ( விக்ரம் ) போலீஸ் ஸ்டேஷன் போய் தான் நிலாவைத் தொலைத்து விட்டதாக புலம்புகிறான்.. அங்கே ஒரு காவலாளி சொல்லி கோர்ட் பக்கம் போய் ஒரு பெண் வக்கீலை ( அனுஷ்கா) தொடர்பு கொள்கிறான்… ஒரு விபத்திற்கு பிறகு அவனைப்பற்றி அந்த வக்கீலும் அவர் ஜூனியரும் ( சந்தானம்) தெரிந்து கொள்கிறார்கள்….
ஃப்ளேஷ்பேக்…………
கிருஷ்ணா தனக்கு பாப்பா பிறக்கப் போவதாக அனைவரிடமும் சொல்லிவிட்டு பொம்மைகள் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரி போனபோது மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டு இறந்து போனது தெரிகிறது.  அக்கம் பக்கம் உதவி வைத்து அந்த பெண் குழந்தையை வளக்கிறான். அவள் பள்ளி செல்லும் வரை சமாளித்து வளர்க்க முடிந்த அவனால்.. அவள் பள்ளி சென்றபின் திணறலோடு தான அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிகிறது…ஆனாலும் கிருஷ்ணாவும் அவன் குழந்தை நிலாவும் தங்கள் அழகான அன்பான கூட்டில் மகிழ்ச்சியோடுதான் வாழ்கிறார்கள்…..
பள்ளியில் நிலா கரஸ்பாண்டண்ட் ( அமலா பால் ) ஸ்வேதாவிடம் நெருக்கமாகிறாள். ஒரு விழாவில் நிலா தன் அக்கா பெண் தான் என ஸ்வேதாவுக்கு தெரிய வருகிறது. ஸ்வேதாவின் தந்தை தந்திரமாக நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார்…
ஃபிளேஷ்பேக் முடிவடைகிறது
கிருஷ்ணாவின் நிலா கதையை கேட்ட அனுஷ்கா வக்கீலாய் அவனுக்கு உதவு முன் வருகிறார். ஆனால் மன நலம் குன்றிய ஒருவருக்கு குழந்தையின் கஸ்டடி கிடைக்காது என்ற சட்டம் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில். கூடவே… நிலாவின் தாத்தாவின் பண பலமும் அவர் வைத்த வக்கீலின் ( நாசர்) குள்ள நரித்தனமும் …. அனுஷ்காவும் போட்டி போட்டு சில தில்லாலங்கடி வேலைகள் செய்து விக்ரம் மன நலம் குன்றியவரே அல்ல என வாதிட … அப்பாவும் மகளும் இணைந்தார்களா என்பதுதான் க்ளைமேக்ஸ்

நடிப்பு :

deivathirumakal vikram

விக்ரம் :

மனிதன் ஆரம்பத்தில் குழந்தைத்தனத்தில் சலிப்பை வரவழைத்தாலும் போகப் போக குழந்தைக்கு உருகும்போது நெஞ்சை நெகிழ்த்துகிறார்.. விக்ரமுக்கு தெய்வத்திருமகள் இன்னொரு பரிமாணம்… ஆடிஸம் கொண்ட ஆறு வயது மனநிலை உடையவராய் கிட்டத்தட்ட வாழ்ந்திருக்கிறார்…சபாஷ் விக்ரம்! கந்தசாமி மாதிரி பத்து படம் செய்வதை விட ஒரு தெய்வத் திருமகள் மேல்!

அனுஷ்கா :

anushka vikram  deivathirumagal

அனுஷ்காவுக்கு வானத்தை அடுத்து இன்னொரு ஹெவி ரோல். மிக சின்சியராய் செய்திருக்கிறார். கோர்ட் சீன்களிலும் விகரமுக்காய் நெகிழ்கிற சீன்களிலும் சூப்பர். சந்தானத்தோடு சேர்ந்து காமெடியும் ட்ரை பண்ணியிருக்கிறார். அனுஷ்காவின் நடிப்பில் நிச்சயம் முன்னேற்றம்… ஆனா ஒடம்பும் ஏறிட்டே போகுதே… உடனடி தேவை டயட் கன்ட்ரோல்!

அமலாபால் :

தெய்வத்திருமகள் சினிமா விமர்சனம்

அதிக ஸ்கோப் இல்லை… குழந்தைக்கு சித்தியாய் வந்து ஓரிரு காட்சிகளில் அழுதுவிட்டு போகிறார்.. ஆனால் முந்தைய படங்களை விட அழகாய் இருக்கிறார்.. அவர் நடிப்புத் திறனுக்கேற்ற ஸ்கோப் கேரகடரில் இல்லை.. தந்த ரோலை நிறைவாய் செய்திருக்கிறார்.

சந்தானம் :

சந்தானம் தூள் கிளப்புகிறார். கதையோடு ஒட்டிய காமெடியில் அவர் சிச்சுவேஷன் பார்த்து அடிக்கும் டைமிங்க் வெடி தெய்வத் திருமகளின் சோக மூடிற்கு நடு நடுவே தரும் எனர்ஜி டானிக். “ரெண்டு வாட்டி கேட்டதுக்கே அல்டிக்கிறியே நாங்க ரெண்டாயிரம்  வாட்டி கேட்டிருக்கோம்!” அதில் ஒரு சாம்பிள்!

நாசர் :

அற்புதமான நடிப்பு ! அதிலும் கிருஷ்ணா தன் குழந்தை மீது காட்டிய அன்பிற்குபின் தடுமாறி அவர் கோர்டில் வாதாடும் காட்சி நாசர் எவ்வளவு மெச்சூர்ட் நடிகர் என்பதற்கு எடுத்துக்காட்டு !

குழந்தை பேபி சாரா:

அற்புதாமான நடிப்பு ! அழகான எக்ஸிரஷன் மிக்க முகம்.. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது!

இசை :

ஜி.வி.பிரகாஷ் கலக்கியிருக்கிறார்… நல்ல மெச்சூர்டான இசை.. பாடல்கள் அத்தனையும் அருமை அதிலும் “வருதே எனக்கு பாப்பா” ” ஒரே ஒரு ஊருக்குள்ள” , ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு மூன்றுமே கூடுதல் ஸ்பெஷல்.. ரீரெக்கார்டிங்கிலும் அடுத்த படி தொட்டு விட்டார் ஜிவி!

கேமரா :

அமலா பால் தெய்வத்திருமகள்

அமலா பால் தெய்வத்திருமகள்

 

நீரவ் ஷா நிறைவாய் செய்திருக்கிறார் ! அழகான நேர்த்தியான கேமரா… உணர்ச்சிமயமான கதை என்பதால் அதிக க்ளோசப்புகள்.. அதிலும் வெற்றி கண்டிருக்கும் கேமராமேனை பாராட்டியே ஆக வேண்டும்

இயக்கம் :

விஜய்க்கு இது நிச்சயம் மைல்கல் தான்.. ஆனாலும் அங்கங்கே தெரியும் அமெச்சூர்தனத்தை அகற்றியிருந்தால் தெய்வத்திருமகள் இன்னும் பிரகாசித்திருக்கும்…
அப்பாவுக்கும் மகளுக்குமான பாண்டை வெகு இயல்பாய் காட்டியதில் சபாஷ் பெறுகிறார் விஜய். ஆனால் க்ளைமேக்ஸ் சொதப்பல்கள் மன்னிக்க முடியாதவை ! கோர்ட் உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பு கூறுவது எப்படி நம்ப முடியாதோ அதே மாதிரி விக்ரம் மெச்சூர்டாய் குழந்தையை திருப்பித் தருவதும் ஜீரணிக்க முடியாதது. அதற்கு…. கோர்ட் குழந்தை கஸ்டடி கொடுக்காதது போலவும் அமலா பால் வந்து குழந்தையை திருப்பிக் கொடுப்பது போலவும் வைத்திருந்தால் இன்னமும் ரியலிஸ்டிக்காக இருந்திருக்கும் !
அதைவிட அனுஷ்கா கிருஷ்ணாவை நினைத்து பாடும் மழைப்பாட்டு அமெச்சூர்தனத்தின் உச்சக்கட்டம்… ஏன் விஜய் சார்… அதை ஒரு அழகான வக்கீல் கிளைண்ட் ரிலேஷனாகவே விட்டுருக்கலாமே!
ஆனாலும் தன் கேரியரின் ஆரம்பத்திலேயே இவ்வளவு கனமான சப்ஜெக்டை தொட்டதற்கு விஜயை பாராட்டத்தான் வேண்டும்! அந்த ஒரே ஒரு ஊருக்குள்ள பாட்டு பிக்சரைசேஷனுக்காக ஸ்பெஷல் பாராட்டுக்கள் விஜய் !

ப்ளஸ் :

உணர்ச்சிமிக்க உறவுகள்
விகரம் நடிப்பு
ஜிவிபிரகாஷ் இசை
நெகிழ்வூட்டும் காட்சிகள்

மைனஸ்

அமெச்சூர்தனமான கிளைமேக்ஸ்
அனுஷ்கா டூயட் திணிப்பு

பார்க்கலாமா :

நிச்சயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்… நீங்கள் உறவுகளுக்கு அதன் பாசத்திற்கும் உருகுபவராய் இருந்தால்

ஃபைனல் வெர்டிக்ட் : தெய்வத் திருமகள் – உருக வைக்கிறாள் !

tags : Movie review of tamil latest movie deivathirumagal review starring Vikram, Anushka, Amala Paul , baby Sara, Santhanam

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>