/* ]]> */
Dec 042012
 
மாத பலன்

டிசம்பர் மாத ராசி பலன் – மாத பலன் – December matha rasi palan

மாத பலன்

மாத பலன்

 

 

 

 

 

 

 

FORECAST FOR DECEMBER 2012:

 மேஷம்:

அஸ்வினி, பரணி, மற்றும் கிருத்திகை(1) ஆகிய நடசத்திரங்களை உள்ளடக்கியது .

பெண்கள் புதிய ஆடை ,நகைகள் வாங்குவர். வருமானம் உங்களுக்குப் பல

வழிகளிலும் வரும். உங்களுடைய பேச்சுத் திறமை உங்களுக்கு அதிக

வருமானத்தை ஈட்டித் தரும்.கால்நடைகள் மூலமும் வருமானம்

 வரும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவார்கள்.

ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆனால், உஷ்ண

சம்பந்தமான வியாதிகள்தாக்கலாம். மாணவர்கள் படிப்பில்

 பிரகாசிப்பது மட்டுமின்றி, விளையாட்டிலும் தங்கள் திறமையைக் காட்டுவர்.

 தங்கள் கேரியரை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு அவரவர்விருப்பத்துக்கேற்ற

 மாற்றம் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும்.  ரியல் எஸ்டேட்

துறையில் உள்ளவர்களுக்கு கட்டுமான வேலைகள் தடையின்றி நடக்கும்

.விவசாயிகளுக்கு விவசாய வருமானம் பெருக்கெடுத்து செல்வவளம் உண்டாகும்.

 உங்களுடைய வேலையாட்களும் உங்கள் கீழே பணிபுரிபவர்களும், உங்களிடம் மிகவும்

விசுவாசமாகஇருப்பார்கள். குழந்தைகளால் சற்றே மனக்கிலேசம் ஏற்படலாம்.

நாள்பட்ட பிரச்சினை ஒன்று தீரும். சிலர் கோவில் சம்பந்தப்பட்ட சேவையில் ஈடுபடுவார்கள்.

பரிகாரம்:

சனி உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில்

 சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று, எள்ளுதீபம் ஏற்றி வழிபடவும்.

 தினமும் காக்கைக்கு அன்னமிடவும்.வயோதிகர்களுக்கும் உடல்  ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும்.

8-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்லதல்ல. வெள்ளிக்கிழமைகளில் துர்கையம்மனை வழிபடவும்.

 கருப்பு உளுந்தை தானம்செய்யவும். குலதெய்வத்தை அடிக்கொருமுறை வழிபடவும்.

உங்கள் முன்னோர்களுடைய நியமங்களை நிறவேற்றுங்கள்.  செவ்வாய்க்கிழமைகளில்

முருகன் கோவிலுக்குச் சென்று ,உங்கள்கைப்பட தொடுத்த  சென்னிற மலர்களால் ஆன

 மாலையை சாத்தி வழிபடவும். துவரம்பருப்பை தானம் செய்யவும

ரிஷபம்:

கிருத்திகை(2,3&4), ரோகிணி,மிருகசிரீஷம்(1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.:

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டுக்குத்தேவையான

நேரத்தை மிச்சப்படுத்தக்கூடிய ஒரு பொருளை வாங்குவீர்கள். புதிய ஆடை யும் நகைகளும்

 வாங்குவீர்கள்.உங்களுடைய சம்பளம் உயரும். சேவை மனப்பான்மையோடு

 பிறருக்கு உதவி செய்வீர்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை.

 வயிற்று உபாதைகள் தொல்லைகொடுக்கும்,. சாப்பிடும் உணவுப் பொருளில் கவனம் தேவை.

கட்டுமானத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம்.

 உத்தியோகத்தில் பெரிய பதவிகள் கிடைக்கும்.மற்றவர்கள் செய்யத் தயங்கும் ஒரு பெரிய

வேலையைச் செய்து அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து

விளங்குவார்கள் கணிதம், பௌதிகம் முதலியபாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

சிலர் சங்கீதம், கலைகள் முலியவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.  உறவினர்களுடன்

வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வீண்பிரயணங்களைத் தவிர்க்கவும். சில விஷயங்களில்

சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உங்களுடைய வேண்டுதல்கள் பலிக்கும். கடவுள்

 தன் அருளை வாரிக் கொடுத்துஉங்களைக் காப்பாற்றுவார்.

பரிகாரம்:

தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும். ராகு ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால், துர்கையம்மனை

வழிபட்டு வரவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். கேதுவின் சஞ்சாரமும்சரியில்லையாதலால்,

 வினாயகர் கோவிலுக்கு சென்று  கோவிலுக்கு சேவை செய்யவும். கொள்ளுதானம் செய்யவும்.

  உங்கள் பிறந்த நட்சத்திரத்தில், ‘ஆயுஷ் ஹோம’மும் ‘ மிருத்யஞ்ச்யஹோம’மும்  செய்யவும்.

மிதுனம்:

மிருகசிரீஷம்(3&4), திருவாதிரை,புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவேண்டும். அப்போதுதான், விபத்துக்களைத் தடுக்க

 முடியும். உஷ்ண சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். உங்கக்கு கீழ் பணியாற்றுபவர்கள்

 மூலம்உங்களுடைய வருமானம் உயரும். கால்நடைகள் மூலமும் நல்லபடியாக வருமானம்

 பெருகும்.  ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு கட்டுமானத் தொழில் தடங்கலின்றி

  தொடரும்.விவசாய நிலம் சம்பந்தப்பட்ட பேரங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

 உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரம் மிகுந்த உயர் பதவி கிடைக்கும்.

 கடினமான உழைப்பு உங்களுக்கு பெரியவெற்றியைக் கொடுக்கும். மாணவர்கள் நல்ல

 மதிப்பெண் பெறுவார்கள். அறிவுத் தெளிவு ஏற்பட்டு படித்தவைகளை நன்கு புரிந்து

, மனதில் நிறுத்திக்கொள்வீர்கள். தேர்வில் தேறுவோமா என்றசந்தேகத்தை

 நீங்கள் ஒருபோதும் ஏற்படுத்திக்கொள்ளலாகாது.  உங்களுக்கு ஒரு பெரிய மனிதரின்

நட்பு கிடைக்கும். உங்களுடைய உறவினர்கள் உங்கள் மீது சந்தோஷமாக இருப்பார்கள்.

இருப்பிடத்தை மாற்றுவத்ற்கான சாத்தியக்கூறுகள்  தெரிகின்றன. வார்த்தைகளை நீங்கள் அளவோடு

பேசினால் மட்டுமே தேவையற்ற பழி பாவங்களிலிருந்து தப்பிக்கலாம். நீங்கள்எத்தனைதான் முயன்றாலும்

, சண்டை சச்சரவுகளைத் தடுக்க முடியாமல்  போகும். குடும்பத்திலுள்ள பெண்களிடத்தில்

 கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். பெண்கள் நகைநட்டுகள்வாங்கி, மகிழும் மாதமிது.

பரிகாரம்:

சூரிய உதயத்தின்போது சூரிய வழிபாட்டை மேற்கொள்ளவும். தண்ணீரும் மலர்களும்

 கொண்டு  சூரியனை வழிபடவும். “ஓம் நமோ நாராயண’ என்ற மந்திரத்தை

தினமும் 108 முறைஜெபிக்கவும்.  கோதுமையை தானம் செய்யவும். மிருத்யஞ்ச்ய

 ஹோமமும், ஆயுஷ் ஹோமமும் உங்கள்  பிறந்த நட்சத்திரத்தில் செய்யவும்.

விஷ்ணுவை வழிபட்டு துளசியை சாத்தவும்.பச்சைப்பயறை தானம் செய்யவும்.

மகாலசக்ஷ்மியை வழிபட்டு தாமரை மலர்களை சாத்தவும். கோமாதாவை பூஜித்து

 பசுவுக்கு உணவளித்து வீட்டுக்குள் வலம் வரச் செய்ய வேண்டும்.

கடகம்:

புனர்பூசம்(4), பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

உங்கள் குடும்பத்தில்  நல்ல விழா ஒன்று நடக்கும். நீங்கள் ஆன்மீக வழிபாட்டில்

 லயிப்பீர்கள். இளைஞர்கள் காதல்வயப்படுவார்கள். ,மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

 ஒருவிதமான பயம்உங்களை ஆட்கொள்ளும். வீட்டிலுள்ள பெண்களிடம் வாக்குவாதம்

வைத்துக்கொள்ள வேண்டாம். பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

 சிலருக்கு குழந்தை பிறக்கும். உங்கள்சொத்தின்மூலம் நல்ல வருவாய் கிட்டும். சமூகத்தொண்டும்

 செய்வீர்கள். விஷக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று உபாதை ஏற்படலாம்.

எனவே உணவுக்கட்டுப்பாடு அவசியம். ரியல்எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு நல்லநேரம்.

 கட்டுமானத் தொழிலில் சிறப்பீர்கள். வீடு வாங்கவும் முடியும். உத்தியோகத்தில் பணி உயர்வு

 கிடைக்கும். அறிவுத் தெளிவோடு படிப்பில்ஜொலித்து, பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பீர்கள்.

பரிகாரம்:

சூரியன் உதிக்கும் நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து  பூக்களும் நீரும் வைத்து

 சூரியனை வழிபட்டு  வரவும். கோதுமையை தானம் செய்யவும். முருகப் பெருமானை வழிபட்டு,

நெந்நிறப்பூமாலையை நீங்களே தொடுத்துப்போட்டு வழிபடவும். துவரம்பருப்பை தானம் செய்யவும்.

 சனியின் சஞ்சாரம் 4-மிடத்தில் இருப்பது நல்லதல்ல. சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு

 எள்ளுதீபம் போடவும். வயோதிகர்களுக்கும்., உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும்.

குலதெய்வத்தை அடிக்கடி சென்று வழிபடவும். உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களைதவறாமல் செய்யவும்.

 சிம்மம்:

மகம்,பூரம், உத்திரம்(1):

திருமணமாகாத பெண்களுக்கு  திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது. வேலைக்குச் செல்லும்

 பெண்களுக்கு இது போதாத காலம்.

வரவும் செலவும் சரிக்குச் சரியாக இருக்கும். சில முக்கிய செலவுகளுக்குக்கூட கையில் பணம்

இல்லாத நிலை ஏற்படும்.

ரத்தம் அசுத்தமாவதின் மூலம் உண்டாகும் வியாதிகளாலும், பைல்ஸ் கம்ப்ளைன்ட்

முதலிய வியாதிகள் தொல்லைப்படுத்தும். சுத்தமான தண்ணீர், சுத்தமான உணவு உட்கொள்வது

மிகவும்அவசியமாகிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருந்தால், அப்போதுதான்,

 டாக்டரையும் வியாதிகளையும் தூர நிறுத்தலாம்.

ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு விவசாய நிலங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

கட்டுமான வேலைகளும் தடங்கலின்றி தொடரும்.

அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புண்டு.  மற்றவர்களால்

முடியாது என்று ஒதுக்கிய வேலையை நீங்கள் திறமையாக செய்து முடிப்பதால்,

 மேலதிகாரியிடம்நற்பெயர் வாங்குவீர்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் கவந்த்துடன் இருப்பார்கள்.  தங்கள் கல்வியைத் தொடரும்

 முயற்சியில், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:

தினமும் ‘ஓம் நமோ நாராயணா’ என்று தினமும் 108 முறை உச்சாடனம் பண்ணுங்கள்.

விஷ்ணு பகவானுக்கு துளசியை சமர்ப்பித்து வணங்குங்கள். பச்சைப்பயறை தானம் செய்யுங்கள்

.முருகப் பெருமானுக்கு நீங்களே தொடுத்த நெந்நிற மலர் மாலை யணிவித்து வணங்கவும்.

 தினமும், சூரிய நமஸ்காரம் செய்து , நீரும் மலரும் வைத்து வணங்கி, ‘ஆதித்ய  ஹிருத்யம்’

படிக்கவும். கோதுமை தானம் செய்யவும்.

கன்னி:

உத்திரம்(2,3&4), அஸ்தம், சித்திரை(1&2) :

கெட்ட நண்பர்களின் சகவாசத்தை விட்டொழிக்கவும். நெருங்கிய சொந்தங்களிடம் கருத்து

வேறுபாடுகளித் தவிர்க்கவும். பலர் கூடும் விழாக்களிலும், வைபவங்களிலும், கட்டாயமாக

 வாயைமூடிக்கொள்ளுங்கள். ஆனால், பொதுப்படையான சந்தோஷம் உங்களுக்கு நிலவும்.

 உங்களுக்கு விசுவாசமான பணியாற்றுபவர்கள் கிடைப்பார்கள். உங்களுடைய ஆசைகள் பூர்த்தியாகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

. உங்களுடைய பேங்க் பேலன்ஸ் உயரும்.

உங்களுடைய வருமானம் உயரும். உங்களுடைய்  வாதத் திறமையால் வருமானம் கூடும். ஆனால்,

 செலவுகள் மிகுந்து காணப்படும்.

உஷ்ண சம்பந்தமான வியாதிகள் வரும். கண் நோய் உண்டாகும். காலில் காயம் படலாம்

. ஆனால் அனைத்து வியாதிகளும் உடனே குணமாகி பூரண ஆரோக்கியத்தை அடைவீர்கள்.

ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்களை

வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். சொத்து பரிமாற்றத்தின்போது, டாக்குமென்ட்ஸை

 நன்குஆராய்ந்து பார்ப்பது அவசியம். அரசு வேலைக்கு ஆசைப்படுபவர்களுக்கு அது கிடைக்கும்.

 வேலையில் ஒரு உயர்ந்த பதவியும் எதிர்பார்த்தவண்ணம்  மதிப்பு மரியாதையுடன் கூடியதாகஅமையும்.

மாணவர்கள் படிப்பில் முழு கவனம் காட்டினால் மட்டுமே தேர்வுகளில் வெற்றியடைய முடியும்.

 ஊர் சுற்றுதல், டி.வி. பார்த்தல், சினிமாவுக்குச் செல்லுதல் என்று அனைத்தையும்விட்டால்தான்,

 வெல்ல முடியும்.

பரிகாரரம்:

சனியின் கோச்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளைல் சனீஸ்வரனுக்கு எள்ளுதீபம்

ஏற்றி வழிபடவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும். உடலூனமுற்றவர்களுக்கும்

வயோதிகர்களுக்கும் உதவி செய்யுங்கள். கருப்பு பொருள்களை தானம் செய்யவும். குரு எட்டாம்

இடத்தில் சஞ்சரிப்பதால், தட்சிணாமுர்த்த்தியை, மஞ்சள் மலர் கொண்டும்,. கொண்டக்கடலை

மாலையிட்டும் வழிபடவும்.  ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்யுங்கள்.

 தினமும் ‘ஓம் நமோ நாராயணா’ என்று 108 முறை ஜெபிக்கவும்.  தினமும்

‘ஆதித்ய ஹிருத்யம்’ படிக்கவும்.முருகப் பெருமான் ஆலயம் சென்று,

செந்நிற மாலைசாத்தி வழிபடவும். துவரம்பருப்புப்பை தானம் செய்யவும்.

துலாம்:

சித்திரை (3&4),ஸ்வாதி’ விசாகம் (1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

உங்கள் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். தேகம் ஜொலிக்கும். உங்களுடைய

சக்தி பெருகும். சின்னச் சின்ன ஆரோக்கிய சம்பந்தமான பிரச்சினைகள் தோன்றினாலும்

 அவை சீக்கிரமேகாணாமல் போகும்.  அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்பட்டு

மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உகந்தவராவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பதவி ஒன்று

 காத்திருக்கிறது. ரியல் எஸ்டேட்தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல ஏற்றம்  உண்டாகும்.

 கட்டுமானத் தொழில் தொய்வலின்றி தொடரும். நிலமும் சொத்தும் கூடிப்போகும்.  உங்கள் வருமானம்

 பெருகும். உங்கள் வாழ்க்கைத்தரமே மாறுமளவுக்கு கூடுதல் வரவு வரும். விலை உயர்ந்த

பொருள்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் மகிழ்சச்சியில் திளைப்பார்கள். மாணவர்கள்

படிப்பில் புதிய உத்வேகத்துடன் படிப்பில்ஈடுபடுவார்கள்.

முக்கிய முடிவுகள் எடுப்பதையும், முரண்பாடுகளையும் இந்த மாதம் தவிர்ப்பது நல்லது.

  உங்கள் தாய்வழி மாமன் உடல்நலம் பாதிக்கப்படும்.உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.

உங்களுக்குகுழந்தை பிறக்கும் யோகமும் தென்படுகிறது.பரிசுப்பொருள்கள் வீட்டில் நிறைந்திருக்கும்.

குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தையை தத்தெடுப்பதைப் பற்றி யோசிப்பார்கள்

.திருமணத்துக்கு காத்திருப்போருக்கு   திருமணம் நிச்சயமாகும். புதிய ஆடைகளும்

 நகைகளும் வாங்குவீர்கள். வீட்டு உபயோகத்துக்கான பொருள்களையும் வாங்குவீர்கள்.

பரிகாரம்:

சனியின் சஞ்சாரம் சரியில்லாத்தால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச்

 சென்று எள்தீபம் ஏற்றுங்கள் .தினமும் காக்கைக்கு அன்னமிடவும். முதியோர் இல்லம்

சென்று தானம்செய்யுங்கள் உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்.  ‘ஹனுமான்

சலீஸாவைப் பாராயணம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று தாமரை

 மலர்களால் அர்ச்சிக்கவும்.  தினமும்கிழக்கு நோக்கியமர்ந்து பூவும் நீரும் வைத்து சூரியனை

வணங்கவும். கோமாதாவுக்கு பூஜை செய்து, பசுவுக்கு உணவளித்து கிரகத்துக்குள் உலவச்

செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

விசாகம்(4), அனுஷம்,கேட்டை ஆகிய ந்ட்சத்திரங்களை உள்ளடக்கியது.:

உங்களுடைய விருப்பங்கள் பூர்த்தியாகும்.  சிற்சில காரியங்களில்  தடைகள் ஏற்படும்.

  அனைவராலும் வெறுக்கத்தக்க செயலைச் செய்யாதீர்கள். மற்றவர்களுடன் பழகும்போதும்

,பேசும்போதும், நளினமான போக்கைக் கடைப் பிடிப்பது அவசியம். வெளிநாட்டுப் பயணம் உங்களுக்கு

நன்மை பயப்பதாக அமையும். உங்கள் குழந்தைகளுடைய வளர்ச்சியில் நீங்கள்மகிழ்ச்சியடைவீர்கள்.

மாணவர்களுக்கு அறிவுத் தெளிவு ஏற்படும். மானவர்களின் சிந்தனா சக்தி வளரும்.

அவர்களுடைய வாதத் திறமை, பேச்சுப்போட்டிகளில் மிளிரும்.

அலுவலகத்தில் உங்கள் திறமை அதிகம் வெளிப்படும். தனிப்பட்ட முறையில்

உங்கள் மதிப்பை உங்களைச் சுற்றியுள்ளோர் முன் உயர்த்திக்கொள்வீர்கள். அலுவலகத்தில்

 உங்களுக்கு ஒருநல்ல பதவியைத் தந்து கௌரவிப்பார்கள்.  அதிகப்படியான திரறமையைக் காட்டி

முன்னேறுவீர்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் எந்த பேரத்தையும் முடிப்பதற்கு முன்னால்,

பத்திரங்களை நன்றாக ஆய்வு செய்துகொண்டால் பிஸினஸ் நன்றாகப் போகும் என்பதில்

ஐய்யமில்லை.கட்டுமான வேலைகளுக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும்

 முன்கூட்டியே செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அரிப்பு நோயைத் தடுத்துக்கொள்ள அடிக்கடி துணியை மாற்றுவது நல்லது. இது தவிர

பயப்படும்படியான ஆரோக்கிய பாதிப்பு எதுவும் கிடையாது. கடினமான உழைப்புக்குப் பிறகு,

தேவையான ஓய்வையும் பொழுதுபோக்குகளையும் கடைப்பிடித்தால்,உங்களுடைய புத்துணர்ச்சி மாறாது.

வியாபாரத்துக்கு உதவும்பொருட்டும் சொந்த உபயோகத்துக்காகவும் இருப்பது மாதிரி நீங்கள

வாகனம் வாங்குவீர்கள். உங்கள் குடும்ப வருமானம் பெருகும். வியாபாரம் நல்லலாபத்தைக்

கொடுக்கும்.

பரிகாரம்:

கேதுவின் 7-மிடத்து சஞ்சாரம் சரியில்லாததால்,  வினாயகரைத் துதிப்பதோடு,

வினாயகர் கோவிலையும்  சுத்தம் செய்வது போன்ற சேவையை செய்யவும். ராகுவின்

சன்சாரமும்சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபட்டு கருப்பு உளுந்தை தானம்

 செய்யவும். முருகப்பெருமான் ஆலயம் சென்று செந்நிற மாலை அணிவித்து

 வழிபடவும். ஆதித்ய ஹிருத்யமும்,வெங்கடேச சுப்ரபாதமும் படியுங்கள். ஏழரைச் சனி

 நடப்பதால், சனீஸ்வரன் கோவிலுக்கு சனிக்கிழமை சென்று, எள்தீபம் ஏற்றவும். காக்கைகு

 தினமும் அன்னமிடவும். முதியோர்இல்லத்துக்கு தானமளியுங்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு

உதவி செய்யவும்.

தனுசு :

மூலம், பூராடம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

இந்த மாதம் பிரயாணங்களையும் கோபமான வார்த்தைகளையும் தவிர்ப்பது நல்லது.

யாருக்கும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம். போட்டால் கட்டாயம்

சிக்கலில்மாட்டிக்கொள்வீர்கள். ஏமாற்றுக்காரர்களிடமிருது உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

 வீடு மாற்றக்கூடிய வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தினருடன் கூடி விருந்துகளிலும்கேளிக்கைளிலும்

மகிழ்ந்திருப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் மீது பிரியம் காட்டுவார்கள். மாணவர்கள் தங்கள்

 திறமையை தானே மகிழ்ந்து முகமெல்லாம் ஜொலிப்புடன் பிரகாசிப்பார்கள்.தேர்வுகள்

இவர்களுக்கு வெற்றியைக் குவிக்கும்  பந்தயக் களங்களாகும்.  தையத்துடனும் இருப்பார்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் தினசரி  வேலைகளை சரிவரநடத்திக்கொள்வார்கள்.

 கட்டுமானத் தொழிலும் அப்படித்தான். அன்றைய அலுவல்கள் சரிவர நடந்தேறிவிடும்., ஒரு சிலர்

வீடு வாங்கலாம்.

ஆரோக்கியம் பொதுவாக பெரிய தொந்தரவுகளைக் கொடுக்காது, என்றாலும், சிலருக்கு கண்,தலை

 சம்பந்தமான நோய் தோன்றும். சிலருக்கு வெகு லேசான விபத்துகள்  ஏற்பட்டு, நொண்டி

நடக்கக்கூடும். பெரிய பாதிப்பு இருக்காது.

குடும்பத்துக்கு தேவையான வருமானம் கிடைக்கும். ஆனாலும் வியாபாரிகள் ரிஸ்க் எடுப்பதைத்

 தவிர்க்க வேண்டும். இல்லையானால், பெருத்த  நஷ்டம் ஏற்படும்.

பெண்களுக்கு பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஆடைகளும்

நகைளும் வாங்குவார்கள்.  இந்த மாதம் இனிமையாகக் கழியும்.

பரிகாரம்:

முருகப் பெருமானை  செந்நிற மலர் கொண்டு வழிபடவும். . துவரம்பருப்பு தானம்

செய்யவும். தினமும் ஆதித்ய ஹிருத்யமும் , விஷ்னு சகஸ்ரநாமமும் பாராயணம் செய்யவும்.

 தினமும் விடியற்காலை நேரத்தில் சூரியனை வழிபடவும்.

மகரம்:

உத்ராடம்(2,3&4), திருவோணம்’ அவிட்டம்(1&2), ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

பிரயாணங்களைத் தவிர்க்கவும்.  குடும்ப விஷயமாகவும், பணம் சம்பந்தப்பட்டதுமான   முக்கிய

 முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.  குடும்பத்தில் அனைவருடனும் விருந்துகளில்கலந்து

 கோண்டு சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுடைய பழைய நண்பர்களை சந்தித்து

, பழைய கதைகளை அளவளாவுவீர்கள். நண்பர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

பயணங்களைத் தள்ளிப்போடவும்.

மாணவர்கள் விளையாட்டில் புத்தியயைச் செலுத்துவர். படிப்பை கவனிக்காத போக்கு

காணப்படும். தேர்வுகளில்   வெற்றிபெற கடின உழைப்பு வேண்டும்.

உத்தியோகத்தில் சிலர், தலைமைப்பதவியை அடைந்து, மதிப்பு அதிகாரத்துடன் கூடிய

பதவியை அடைவர். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ரியல்  எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடம் வேலைகள் நடந்தேறும்.

கட்டுமான வேலைகளைத் தொடங்குமுன் அதற்கான பொருள்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளவும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இரும்புச்சத்து குறைபாட்டால் சில தொல்லைக்ள் ஏற்படலாம்.

 இந்த மாதம் கீழே விழுந்து அடிப்பட்டு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனம்

ஓட்டும்போதும், வெளியே செல்லும்போதும், கவனம் தேவை.

வருமானம் குறையும் அதனால் வருத்தங்கள் பெருகும். வீட்டில் துன்பமான சூழ்ந்லை இருக்கும்

. ஆனால் உங்கள் வாக்கு சாதுர்யத்தினால், கொஞ்சம் வருமானம் வர வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு ஆடை நகைகள் சேரும். வேலையில் இருக்கும் பெண்கள் ,பதவி உயர்வு

கிடைக்காததால் வருத்தத்துடன் காணப்படுவர்.

பரிகாரம்:

ஆதித்ய ஹிருத்யமும் .,விஷ்ணு சகஸ்ரநாமமும் தினமும் பாராயணம் செய்யவும்.

சூரியனை காலை வேளையில் நீரும் மலர்களும் வைத்து வழிபடவும். கண்தானம் செய்ய

பதிவுசெய்துகொள்ளவும். குல தெய்வத்தை அடிக்கொருதரம் சென்று வழிபட்டு வரவும்

.உங்கள் முன்னோர்களின் நியமங்களை  தவறாது நிறைவேற்றவும்.

கும்பம்:

அவிட்டம்(3&4), சதயம், பூரட்டாதி(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

நீங்கள் வீடு மாற்றக்கூடிய வாய்ப்பு தெரிகிறது. வழ்க்கைத்துணை, நண்பர்கள் உறவினர்கள்

 என்று யாராக இருந்தாலும் கோபத்தைக் காட்ட வேண்டாம். நீங்கள்  நீண்ட பிரயாணம்

ஒன்றைமேற்கொண்டு களைப்படைய நேரும். உங்கள் குடும்பத்தில் புதிய வரவு ஏற்படும்.

ஒரு வி.ஐ.பி.யை சந்திப்பீர்கள். உங்களுக்கு ஒரு அரசாங்க விருது கிடைக்கும்.

மாணவர்கள் கற்பிப்பதைக் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இருப்பார்களே யொழிய,

தேர்வுகளுக்காக கடின உழைப்பை மேற்கொள்ள மாட்டார்கள். என்வே, கடின உழைப்புதான்

 நல்ல்மதிப்பெண்களைப் பெற்றுத்த தரும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். கடினமாக உழைத்து உங்கள் மேலதிகாரியின் நன்மதிப்பை

 பெறுவீர்கள்.

ரியல் எஸ்டேட் துறை லாபகரமாக இருக்காது. எனவே பெரிய திட்டங்களை தவிர்க்கவும்.

விவசாய நிலங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

சிலருக்கு  சின்னச் சின்ன வியாதிகளான ஜுரம், கண் நோய், வயிற்றுவலி முதலிய

பாதிப்புகள் இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். அதே சமயம் செலவுகளும்

எக்கச்சக்கமாக இருக்கும்.வியாபாரிகள் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வேலைக்குச் செல்லும்  பெண்களுக்கு பணியிடத்தில் நிம்மதி இருக்காது. உடன்

பணியாற்றுபவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய

வேலைப்பளுவே அவர்களுக்குசரியாக இருக்கும்.

பரிகாரம்:

தினமும் ‘ஆதித்ய  ஹொருத்யம்’ படிக்கவும். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யவும்,

 நீரும் மலர்களும் வைத்து சூரியனை வழிபடவும். கண்தானம் செய்ய பதிவு செய்து

கொள்ளவும்.தினமும் ‘ஓம் நமோ நாராயணா’ என்று 108 முறை பாராயணம் செய்யவும்.

மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபடவும். பச்சைப்பயறை தானம் செய்யவும்.

மீனம்:

பூரட்டாதி(4), உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

இந்த மாதம் பிரயாணங்களையும் சண்டை சச்சரவுக்ளையும் தவிர்க்கவும். நீங்கள் உங்கள்

 வாழ்க்கைத்துணையின்மேல் முழு நம்பிக்கையையும் வைத்து சார்ந்திருப்பீர்கள்.

வீட்டுக்குத்தேவையான கட்டில், மெத்தை, தலையணையுறை என்று பெட் ரூமை அலங்கரிப்பீர்கள்.

 உங்கள் வீட்டில் ஒரு முக்கியமான விழா நடக்கும். இந்த மாதம் அனைத்து விதமான

 மகிழ்ச்சியையும்அனுபவிப்பீர்கள். நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம் குடும்பத்தினருடன்

 கலகலப்பு என்று மகிழ்ச்சியான நேரமிது.

மாணவர்கள் த்ங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வ்ம் காட்டுவார்கள். மிகுந்த தைர்யசாலிகளாகவும்

இருப்பார்கள். உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்டை படிப்பதில் ஆர்வம் காட்டுபவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது மிக நல்ல மாதம். உங்கள் முயற்சியில் நீங்கள் விரும்பிய

உயர் பதவி உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ரியல் எஸ்டேட்துறையில்

உள்ளவர்களுக்கு நல்ல நேரம் இது. கட்டுமான வேலைகள் தடையின்றி நடக்கும். அனைத்து

பேரங்களும் நல்லபடியாக இருக்கும்.

அதிக உஷ்ணம் உங்களைத்தாக்கலாம் என்பதால் எச்சரிக்கை  நடவடிக்கைகள் தேவை.

மற்றபடி உங்கள் சக்தியும் அதிகமாகும். முன்பு இருந்துவந்த வியாதிகளும் இப்போது குணமாகிவிடும்.

உங்கள் வருமானம் பெருகும். உங்கள் வியாபாரத்தில் மட்டுமின்றி கால்நடைகள் மூலமும்

வருவாய் கிடைக்கும்.

பெண்களுக்கு இது மகிழ்ச்சியான நேரம். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். அழகு சாதனப்

பொருள்களை வாங்கி மகிழ்வார்கள்.

பரிகாரம்:

சனியின் 8-மிட  சஞ்சாரம் நல்லதல்ல என்பதால், என்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன்

கோவிலுக்குச் சென்று, எள்தீபம் ஏற்றவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும்.

 உடல்ஊனமுற்றோருக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்யுங்கள். கருப்புநிற பொருள்களை

தானம் செய்யவும். தினமும் ஹனுமான் சலீஸா பாராயணமும்  ,ஆதித்ய ஹிருத்யம் பாராயணமும்

செய்யவும். காலை நேரத்தில் மலர்களும் தண்ணீரும் வைத்து சூரிய நமஸ்காரம் செய்யவும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>