/* ]]> */
Feb 062012
 

யுவராஜ் சிங் – கேன்சர் நோய் – அறிவிப்பு

yuvaraj singh cancer

yuvaraj singh cancer

 

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கேன்சர் நோயால் பாதிக்கப் பட்டுள்லார் என்பது நேற்று அதிகார பூர்வமாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது. இதுவரை , அது நுரையீரலில் உள்ள ஒரு ட்யூமர் ( பெனைன் ட்யூமர் என்றால் ஆபத்தில்லா கட்டி என பொருள் கொள்ளல்லம் ) என்றே சொல்லி வந்த யுவராஜ் குடும்பம் நேற்று அது கேன்சர் தான் என அறிவித்துள்ளது.

யுவராஜ் சிங்கின் பயிற்சியாளரும் இதை லங் கேன்சர் என அறிவித்திருக்கிறார். யுவராஜ் சிங்குக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

” யுவராஜுக்கு கேன்சர் இருந்தாலும் அவர் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றதால் உயிருக்கு ஆபத்தில்லை ! அடுத்த வருடத்துக்குள் யுவராஜுக்கு மூன்று கீமோதெரபி சிகிச்சைகள் முடிவடந்து அவர் குணம் பெறுவார்” என தெரிவித்தார்.

இன்னும் எவ்வளவு காலத்துக்குள் அவர் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு தேறுவார் என தெரியவில்லை.

சென்ற உலகக் கோப்பையின் போது யுவராஜ் செய்த ஆல்ரவுண்டு சாதனைகள் அவருக்கு தொடர் நாயகன் விருதையும் இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று தந்தது இன்னும் நம் கண்முன்னே விரிகிறது.

யுவராஜ் கூடிய விரியவில் குணம் பெற்று மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என பிரார்த்திப்போம்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>