Mar 262012
அவலினிது
தேவையானபொருட்கள்:–
அவல்(அரிசி)
பழவகைகள்.:—-மாதுளை,கொய்யா,ஆப்பிள்,விதையற்ற திராட்சை,அன்னாசி,பப்பாளி,கமலா ஆரஞ்சு– போன்ற பலவகை பழத்துண்டுகள்(மாதுளை முத்துக்கள் அளவிற்கு நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
முந்திரி, திராட்சை, பாதாம்,அக்ரூட்—போன்ற பருப்பு வகையறாக்களையும் பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.
தேன் 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி
வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை பொடி ரவை போல் (நைசாக இருக்கக்கூடாது)
சர்க்கரை தேவையான அளவு.
சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை:–அவல் ஒரு டம்ளருக்கு அரை டம்ளர் பால்,(அ) தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.தேங்காய்ப் பால் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். ஊறிய பிறகு அவல் பொல பொல வென்று இருக்கும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தயார்செய்த அவலைப்போட்டு அதில் பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள் மற்றும் பருப்பு வகையறாக்களை போட வேண்டும். துருவிய தேங்காய், கடலை பொடி போன்றவற்றைத் தூவ வேண்டும்.
தேவையான அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். தேன் ஊற்றி
முள் கரண்டியால் கலந்து அப்படியே சாப்பிடலாம். குளுகுளு கூழ்(ஐஸ் கிரீம்) சேர்த்தும் ஜில்ல்ல்ல்ல்லென்றும் சாப்பிடலாம்.
முள் கரண்டியால் கலந்து அப்படியே சாப்பிடலாம். குளுகுளு கூழ்(ஐஸ் கிரீம்) சேர்த்தும் ஜில்ல்ல்ல்ல்லென்றும் சாப்பிடலாம்.
..லக்ஷ்மி ..
சென்னை
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments