/* ]]> */
Aug 012011
 

1. தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் பற்றிய பிரச்சினைகள் தலை தூக்கியிருக்கும் இந்த நேரத்தில்,  அரசுப் பள்ளிகளின் பெருமையைப் பாராட்டும் வகையில், தனது மகளை ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார், அந்த கலெக்டர். 40 நாட்கள் பணிசெய்தபின் அங்கிருந்து  மாற்றப்பட்டிருக்கிறார். ஆனந்த் குமார் என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்ட கலெக்டர்,  மகள் கோபிகாவை பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் சேர்த்தது மட்டுமல்லாமல், காலை வாக்கிங்கின்போதே மக்களைச்  சந்திப்பது, கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் குறைகளைக் கேட்பது என்று ஓடிக் கொண்டிருந்தார். ஆவின் நிறுவனத்துக்குச் சென்று அங்கு  புதராக வளர்ந்திருந்த  முள் செடிகளை இவரே வெட்டி சுத்தப்படுத்தியிருக்கிறார். ரத்ததான முகாம்களில் தானே  ரத்தம் கொடுத்து முன் மாதிரியானவர். இப்படிப்பட்டவரை திடீரென அரசு மாற்றிய காரணம் என்னவென்று பார்க்கும்போது தெரிய வந்தது: ஈரோடு பகுதியில்சுமார் 43 தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் விஷக் கழிவு நீர் காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவேரி ஆற்றில் கலக்கிறது. இது சம்பந்தமாக 2007-ம் ஆண்டு ஆறு மற்றும் வாய்க்காலில் கழிவுநீர் கலக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியும் அது எடுபடவில்லை.  இந்த தீராத பிரச்சினை பற்றி கலெக்டரிடம் குறையிட்ட விவசாயிகளின் வேண்டுகோளை செவிமடுத்து, கே.கே.எஸ்.கே. நிறுவனத்துக்கு  கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தார். அதேபோல அனைத்து தோல் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பணியைத் தடை செய்தார்.  தோல் ஆலை அதிபர்கள் எல்லா மட்டத்திலும் செல்வாக்கு நிறைந்தவர்கள். மனித குலம் நாசமாகட்டும்; நீர் மாசுபட்டால் என்ன? ஆலை அதிபர்கள் வாழ்ந்தால் சரி என்று நேர்மையான கலெக்டரை மாற்றிவிட்டார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள்.  மாறுதலை எதிர்த்து பள்ளிமாணவர்கள்  ஒரு  லட்சம் அஞ்சல் அட்டைகளை ஜெ.வுக்கு அனுப்பியிருக்கிறார்கள். விவசாய சங்கங்களும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்களாம்.
2. காங்கிரஸை விமர்சிக்கும் சீமான் காமராஜருக்கு விழா எடுக்க என்ன அருகதை இருக்கிறது என்று அதைத் தடுக்கும் விதமாக குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரசார் பலவித இடைஞ்சல்களைத் தந்தனர். பிரபாகரன் படத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யவேண்டுமென்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். அதையும் மீறி நடந்த விழாவில், “காமராஜர் யாருக்குச் சொந்தம்? காங்கிரஸ்காரனுக்கா? அதை வாய் கூசாம சொல்றானுங்களே, காமராஜர் உண்மையான உணர்வுள்ள தமிழனுக்குத்தான் சொந்தம். காமராஜர் இருக்கும்போதுதான் காங்கிரஸ் இருந்தது. அவர் மறைந்ததும் காங்கிரசும் செத்துப்போயிடுச்சு. இன்றைக்கு மானமுள்ள ஒரு காங்கிரஸ்காரன் இருக்கானா? சொல்லட்டும். கூட்டணிக் கட்சிக்கு ஓட்டுப் போடாம இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்ட மானங்கெட்ட காங்கிரஸ்காரன்தான் இருக்கான். ….அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தவர், காமராஜர். ஆனால், இன்றைக்கு அவரைச் சொந்தம் கொண்டாடுகிற சோனியா காங்கிரஸார், பணத்தை அடிக்க சிந்திக்கின்றனர். அடுத்த தேர்தல் வரட்டும்; தொகுதிக்கு 500 ஓட்டோடு காங்கிரஸ் துரத்தப்படும்” என்றார் சீமான், ஆவேசமாக. காமராஜர் புகழைப்பாடும் காங்கிரஸை காமராஜரின் விழா மேடையிலேயே சீமான் துவம்சம் செய்தது காங்கிரஸ் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

3. ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தது பெரிய விஷயமாகி விட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இ- மெயில் மூலம் சென்னையில்  உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட, அதை சென்னைத் தூதரகம்  டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட்டர் புர்லிக்கு ஃபார்வேர்டு பண்ணியது. . இப்படியாக அமெரிக்கத் தூதரகத்தோடு நல்ல அறிமுகத்தை தமிழக அரசு ஏற்படுத்திக்கொண்டதால், ஹிலாரியின் இந்திய விசிட் பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஆண்ட்ரூ மூலமா தமிழக அரசுக்கு தெரிந்திருக்கு. சர்வதேச அளவில் தன்னைப் பற்றிய அறிமுகம் இருக்கணும்னு நினைக்கிற ஜெ. ஹிலாரியைச் சந்திக்கணும்கிற தன்னுடைய விருப்பத்தை தலைமைச் செயலாளர்மூலம் சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு பாஸ் பண்ண , அதை ஆண்ட்ரூ சிம்கின் , பீட்டர் புர்லிக்கு தெரிவித்திருக்கிறார். அதோடு தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானங்கள், ஜெ.வின் தனிப்பட்ட அரசியல் மூவ்கள், ஜெ.வின் தனிப்பட்ட விருப்பங்கள் பற்றியும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒரு ரிப்போர்ட் தயாரித்து ஹிலாரிக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அமெரிக்க முதலீட்டை தமிழக அரசு எதிர்பார்ப்பது சம்பந்தப்பட்ட விவரங்களும் அந்த ரிப்போர்ட்டில் இருந்திருக்கு. எல்லாவற்றையும் பார்த்த ஹிலாரி, சென்னைக்கு வர சம்மதம் தெரிவிச்சார்னு துதரகம் மூலமா செய்திகள் தெரிய வருது.

 

Tags : Tamilnadu political developments day to day happenings and visit of US secretary of State Hillary Clinton meeting tamilnadu chief minister on srilankan tamil issues and eelam.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>