/* ]]> */
Sep 102011
 

சினிமாஞ்சலி – காந்திமதி – விரசம் சரசம் தாண்டிய

வட்டார நடிகை

காந்திமதி தமிழ் நடிகை

காந்திமதி தமிழ் நடிகை

ஆத்தா ஆடு வளத்தா மாடு வளத்தா டயலாக் எல்லார் மனதிலும் பதினாறு வயதினிலே சப்பாணியை நினைவு படுத்தும். அந்த ஆத்தாவாக பதினாறு வயதினிலேயில் பரிமளித்தவர் தான் காந்திமதி. “ஆத்தா நான் பாஸாயிட்டேன் ! ” என ஸ்ரீதேவி யாரைக் கூப்பிட்டாரோ அந்த ஆத்தா இன்று இல்லை….

மேடை நாடகத்திலிருந்து திரையுலகிற்கு வந்து  உடல்நிலை காரணமாய் மீண்டும் நாடகத்துக்கே ( டிவி) போனவர். நாடக ம் முடிந்து விட்டது.

காந்திமதி  என்றதும் அவர் வி.கே.ஆர், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி போன்றவர்களுடன் இணைந்து நடித்த விரச வசன காட்சிகள் பலருக்கும் ஞாபகம் வரலாம். அந்த இமேஜ் இருந்ததனாலோ என்னவோ காந்திமதி எவ்வளவு அற்புதமான குணசித்ர நடிகை என்பது தமிழ் ரசிகர்களுக்கு முழுதாய் புரியாமலேயே போய்விட்டது…

பதினாறு வயதினிலே எடுத்துக் கொள்ளுங்கள்… ஒரு கிராமத்து தாய் தன் மகளை படிக்க வைத்து அவள் மகிழ்வில் மகிழ்கிறாள்… படிக்காத அவளுக்கு மகளின் ஆசா பாசங்கள் புரியவில்லை. ஆனாலும் தன் மகள் பாஸாகிவிட்டாள் என அந்த கிராமத்து தாய் காட்டும் பெருமிதம்… மகள் தூக்கத்தில் உளறுகையிலும் மகளைப் பற்றி சிலர் தவறாய் பேசுகையிலும் அந்த தாய் காட்டும் பரிதவிப்பு என நவரசங்களையும் கொட்டியிருப்பார் காந்திமதி.

காந்திமதி

மண்வாசனை அவர் நடிப்பிற்கு பத்திரம் சொல்லும் இன்னுமொரு படம். அது என்னவோ தெரியவில்லை…பாரதிராஜா மட்டும் தான் காந்திமதியினுள் ஒரு நடிகையை பார்த்தார். வெளிக்கொணர்ந்தார். “வட்டார வழக்கு” நடிகை என அன்போடு அழைத்தார். கரகாட்டக்காரன் காந்திமதிக்கு இன்னொரு மைல்கல். மானாமதுரையில் இருந்து வந்த காந்திமதி பத்னோரு வயதில் நடிக்க வந்து விட்டார். அவர் எந்த இன்ஸ்டிடூட்டும் போய் டயலாக் டெலிவரி படித்ததில்ல. ஆனாலும் டயலாக் டெலிவரியில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் காந்திமதி. ஆனாலும் கூட தமிழ் சினிமா அவரை ” ஏழை தயாரிப்பாளரின் மனோரமாவாகவே ” பார்த்து பழகிவிட்டது !

கமலை கவர்ந்த நடிகை காந்திமதி. உலக நாயகன் தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என சொன்ன அபூர்வ சகோதரர்களில் முதலில் அவருக்கு தாயாக நடித்தது காந்திமதிதான். பின்னர் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு கமல் திரைக்கதையை மாற்றியதால் அவருக்கு பதில் மனோரமா கமல் அம்மாவாக வந்தார். கமல் இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்பட்டதில்லை. எல்லா சினிமா பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு.சமீபத்தில் ராதாரவிக்கு ஒரு பணப்பிரச்சினை வர தன் வீட்டு பத்திரத்துடன் அவர் வீட்டுக்கு விரைந்தவர்  காந்திமதி. திரையுலகில் யாரை வேண்டுமானால் கேளுங்கள்… காந்திமதியின் கருணைக்கு சாட்சி சொல்வார்கள் .

காந்திமதி ரஜினியுடன்

ரஜினியின் முத்துவில் காந்திமதி மீனா வடிவேலுவுடன் இணைந்து செய்யும் நாடக ட்ரூப் காமெடி அத்துணை பிரசித்தம். அதிலும் ரஜினியைப் பார்த்து ஒரு சிலுப்பு சிலுப்பி ஹாங்க் என சொல்வாரே அதை காந்திமதி தவிர யாராலும் செய்ய முடியாது. அது ட்ரேட்மார்க் காந்திமதி !

“மதுர அழகரோ” என “ஆச ஆச” பாட்டில் ரம்பாவுக்கு சரசம் சொல்லித்தரும் பாட்டி வேடம் கூட காந்திமதி நடித்ததால் விரசம் இல்லாமல் இருந்தது. அப்படி விரசத்தையும் சரசத்தையும் கூட தன் இயல்பான நடிப்பால் ஒரு வட்டார வழக்கிற்குள் அடக்கிய அற்புத நடிகை காந்திமதி தன்னுடை 65ம் வயதில் 08.09.11  ( வெள்ளிகிழமை) காலமாகிவிட்டார்…

ஆத்தாவைப் பிரிந்து தவித்த சப்பாணியும் மயிலும்போல திரையுலகம் ஒரு முதிர்ந்த நடிகையை இழந்து தவிக்கிறது.

 

Tags : tamil actress gandhimathi | gandhimathi | kanthimathi | gandimathi | தமிழ் நடிகை காந்திமதி மரணம் | காந்திமதி மரணம் | பதினாறு வயதினிலே | முத்து | பாரதிராஜா | ராதாரவி | pathinaaru vayathiniley | aboorva sagotharargal |

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>