/* ]]> */
Feb 082012
 

சாருநிவேதிதா ரஜினி க்கு எஸ்ரா விழா பற்றி எழுதிய கேள்விகளும் பதிலடியும்

charu nivedita rajinikanth  சாரு நிவேதிதா ரஜினிகாந்த் எஸ்ரா விழா

charu nivedita rajinikanth சாரு நிவேதிதா ரஜினிகாந்த் எஸ்ரா விழா

பிரபல எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்கள் ரஜினி எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் ரஜினி பங்கேற்றதை விமர்சித்துள்ளார். அதற்காக ஒரு பகிரங்க கட்டுரையில்  ரஜினிகாந்துக்கு சில கேள்விகளை அனுப்பியுள்ளர்ர். திரு. ரஜினிகாந்த் அவர்கள் இதை படித்து பதிலளிப்பாரா என தெரியவில்லை. ஆகவே ரஜினி சார்பில் ரஜினி ரசிகர்கள் பதிலளிப்பது தார்மீக பொறுப்பாகிறது. இனி, சார்ய் நிவேதிதாவின் கேள்விகளும் நம் பதில்களும் ….

எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர்.  அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:

1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை.  அப்படிச் சொல்வதற்கு நான் யார்?  இது ஒரு ஜனநாயக நாடு.  எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?  துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார்.  எப்படி?  பார்வையாளர்களில் ஒருவராக.  ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி?  அது பற்றியே என்னுடைய கேள்விகள்.

எந்த விழாவில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நித்யானந்தா விழாக்களில் நீங்கள் கலந்து கொள்ளும்போதே அது தெரியும் எங்களுக்கு. துக்ளக் ஆண்டு விழாவின் அழைப்பிதழையும் எஸ்ரா பாராட்டு விழா அழைப்பிதழையும் ஒரு முறை பார்த்தாலே, எஸ்ரா விழாவில் ரஜினிதான் சிறப்பு விருந்தினர். எனவேதான் அவர் மேடையில் அமர்ந்தார் என்பது எங்கள் ஊர் அஞ்சாம் கிளாஸ் படிக்கும் மாணவனுக்கு கூட புரியுமே.. இருந்தாலும் சாருவின் கேள்விகளுக்கு பதிலளிப்போம்!

அழைப்பிதழிலேயே தகராறு.  ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள்.  இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி.  நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா? ரஜினிக்கா?

என்ன தகறாறு. இதே விழாவுக்கு அப்துல் கலாம் வருகிறார் என்றாலும் அவர் படம் பெரிதாகப் போட்டு எஸ்ரா படம் சின்னதாகத்தான் இருக்கும். அது விருந்தினரை போற்றும் தமிழர் பண்பு. இதில் நடிகன் என்ற அடையாளம் இல்லை. சிறப்பு விருந்தினருக்கு அளிக்கப்படும் மரியாதைதான் அது !

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி.  அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு.  என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர்.  மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர்.  மற்றும் இமயமலைப் பயணம்.  அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை.  பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி.  அவர் நடிப்பது திரையில் மட்டுமே.  ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.  அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.

உங்கள் ரசனைக்கு நன்றி சாரு ! ஒற்றுமைகள் இருக்கலாம் ஆனால் வேற்றுமைகள் நிறைய :

உதாரணம் :

ரஜினி பரபரப்பை வைத்து பிரபலம் அடைய நினையாதவர்.

பொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா?” என்று கேட்டிருக்க வேண்டாமா?  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா?  அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா?

மிக அருமையான கேள்வி. ரஜினிக்கு வீண் புகழ்ச்சி பிடிக்காது என்பது சினிமா துறையில் இருக்கும் அனைவரும் அறிந்தது தான். சினிமா பாராட்டு விழாக்களிலோ அல்லது இசைத்தட்டு  வெளியீட்டு விழாவிலோ , ரஜினி இதை நடைமுறைப் படுத்தி இருக்கிறார். ஆனால் இது எழுத்தாளர்கள் பேசிய விழா. அதில் நிறைய பேரை ரஜினி அப்போதுதான் சந்திக்கிறார். அவர்களிடம் அவர் எப்படி இதை சொல்ல முடியும். அவர்கள் பேசப் போவது என்ன என ரஜினிக்கு எப்படி முன்பே தெரியும்?

ரஜினி பேச்சிலேயே அவர் தெளிவுபடுத்தி விட்டார் ” எஸ்ராவும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பொறாமைப் பட்டுக் கொணடார்கள் என ” . அதுலும் ரஜினி பேச்சின் சாரம்சமே நாட்டில் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்கும் மதிப்பு கூட வேண்டும் என்பதுதானே !

எஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும்?  அதுதானே நடைமுறை?  அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன்?  சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன்.  இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா?  உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா?  இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள்.  அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள்.  ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும்.  அந்தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.

கூட்டம் யாருக்காக வந்தது என்பது முக்கியமில்லை . கூட்டம் என்ன கருத்தை வீட்டுக்கு கொண்டு போனது என்பது தான் முக்கியம். எம்.ஜி.ஆருக்காக வந்த கூட்டம் அன்று அண்ணாவின் கருத்துக்களை சுமந்து செல்லவில்லையா ? துணிச்சல் இருக்கிறதா என கேட்கிறீர்கள்…  எல்லாருக்கும் உங்கள் துணிச்சல் வருமா? உங்கள் துணிச்சல் தான் வலை உலகம் மொத்தமும் அறியுமே !

இதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும்.  கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்.   ஏன் அவர் இதைச் சொல்லவில்லை?  துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார்?  அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்.  அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா?  எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா?

திரும்ப திரும்ப துக்ளக் விழாவையும் எஸ்ரா விழாவையும் குழப்பாதீர்கள். நீங்கள் ஒரு வெளி கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கும்  தம்பி கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

தன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி.  அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன?  அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம்?  மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா?  ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?  அதுவும் இலக்கியமும் ஒன்றா? தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை?

அது சரி!எடிசன் பைபிள் படித்தார் என ஏன் பேச வேண்டும், எடிசன் எக்சல் படித்து மகிழ்ந்தார் என பேசியிருந்தால் ஒரு வேளை சாருவுக்கு பிடித்திருக்கலாம்.

பகவத் கீதையை ஏன் படிக்க வேண்டும்.. நீங்கள் அந்த நாட்களில் பரிந்துரை செய்த நித்தியானந்தா சிடி ( பகவத் கீதை சிடி) பார்த்தாலே எல்லாமும் விளங்கி விடாதா?  இலக்கிய வாசிப்பு இல்லையே என்பதை போக்க வேண்டிய கடமை ஒரு சினிமா நடிகரை விடவும் எழுத்தாளராகிய சாரு நிவேதிதாவுக்கு அதிகம் இருக்கிறதல்லவா!

புத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்‌ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே?  மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது?  சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.  கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது?  தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது?  இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்?

ஆன்மீகம் படிப்பது தான் படிப்பு என ரஜினி சொல்லவில்லை. ரஜினி இதுவரை எந்த போலி ஆன்மீக வாதியுடனும் தொடர்பும் வைத்ததில்லை. ரஜினிகாந்த் ஆன்மீகவாதியே தவிர என்ப்போதுமே தன்னுடைய ஆன்மீகத்தை மற்றவர்கள் மீது திணிக்க அவர் முற்பட்டதில்லை. ரஜினி பொன்னியின் செல்வனையும் ரசித்திருக்கிறார். ஓஷோவையும் புகழந்திருக்கிறார். அவர் கருத்தாக பரபரப்பு ஏற்படுத்தி பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக உங்கள் கருத்துக்களை ரஜினி சொன்னதாக திரிகாதீர்கள் சாரு !

மதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி:  இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா?  கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?  இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன்.  இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள்.  என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா?  சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார்.  உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா?

ஆஹா , என்னே உங்கள் ஞானம். பனியன் விழா என்பதிலிருந்தே உங்கள் தரம் புரிகிறது. இயல் இசை விருது கடந்த வருடங்களில் யார் யாருக்கு வழங்கபட்டிருக்கிறது என்று பாருங்கள். அந்தவரரிசையில் எஸ்.ராமகிருஷ்ணன் விருது பெற்றதற்கு பாராட்டு. விருதால் பெருமையை விட நம்மால் விருதுக்கு பெருமை என்பதுதான் ரஜினி மந்திரம். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் !

உங்கள் ஆண் நண்பர்கள் பனியன் அன்பளிப்பு அளிப்பதும் உங்கள் பெண் நண்பர்களிடம் நீங்கள் அன்பளிப்பு கேட்பதும் உங்களுடனேயே இருக்கட்டும். இதில் ரஜினி வேறு இழுத்து அசிங்கப்படுத்த வேண்டுமா????

நிறைய கதை எழுதிய உங்களுக்கு இந்திய நண்டு கதை தெரியுமா ? அதுதான் இங்கே நடக்கிறது. அதனால் தான் ஒருவேளை கனடாவுக்கு அத்தனை விருதுகளும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கம்மி விருதுகளும் கிடைத்தனவோ என்னவோ!

உங்கள் எழுத்தாளர் போட்டி பொறாமைகளில் ரஜினி என்ற சிறந்த மனிதனை களங்கப் படுத்தாதீர்கள்!

- அபி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>