/* ]]> */
Jul 272011
 

கதையின் முதல் பகுதி படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

கால் கால்கேர்ல் காதல் – 2 – பட பூஜை

அனுஷ்கா

அனு அந்த அறையில் நுழைந்ததுமே குப்பென்ற சிகரெட் வாடை நாசியில் ஏறியது. ரூம் ஏசியையும் மீறி சிகரெட்  புகை அனைவர் நுரையீரலையும் கொஞ்சம் அலசி விட்டு வந்தது.. மொத்தம் ஐம்பது பேர் அந்த அறையில் இருந்தார்கள்.

“இன்கா  பெத்த பெத்த ப்ரொட்யூசரு ஒஸ்தாரு “

அவள் பார்வையை உணர்ந்தவனாய்  கோவர்ணன் சொன்னான்.

அனு கோவர்ணனை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு இன்னும் அறையில் யார் யார் இருக்கிறார்கள் என நோட்டம் விட்டாள். மூலையில் ஒருவன் பைஜாமா ஜிப்பாவில் யாரோடோ கதைத்துக் கொண்டிருந்தான். கோவர்ணன் மெல்ல அனு காதில் கிசுகிசுத்தான்…

“சாரே மா கஸ்டமரு… பெத்த ஃபைனான்ஸ் பார்ட்டி. நூவு ஐடியா சேசி…”

அவன் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்பே அனு முகத்தில் தெறித்த கோபம் அவனை வாய் மூடச் செய்தது.

ரூமின் மூலையில் ஒரு ஆளுயர கண்ணாடி இருந்தது. அனு தானாய் அதை நோக்கிப் போனாள். கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்தாள்..

கிட்டத்தட்ட ஐந்தேமுக்கால் அடி….

அந்த டைட் ஜீன்சும் டீசர்டும் அவளை இறுக்குகையில் மதர்த்த அழகு அவளையே அவளுக்கு யாரோ போல் காட்டியது. இப்போதெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு வரும்போதெல்லாம் ஜீன்ஸ்தான் . ஏதோ கண்ட கண்ட வாகியம் எழுதிய டீ சர்ட் தான் . ஆனால் இன்னமும் அவளுக்கு இந்த பிம்பம் பழகவில்லை. பழைய பாவாடை தாவணி அனுவே மனதில் நின்றாள்.

கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்த உடன் எல்லா அழகான பெண்களுக்கும் வரும் செருக்கோடு “என்ன செய்யணும்” என்பது போல் கோவர்ணனைப் பார்த்தாள்..

கோவர்ணன் அந்தக் கூட்டத்திலேயே தனியனாய் தெரிந்தான். சுற்றி பைஜாமாக்களும் ஜீன்ஸ்களும் டீசர்ட்களும் ஆக்கிரமிக்க இவன் மட்டும் ஏதோ இன்டர்வ்யூவுக்கு வந்தவன் போல் முழுக்கை ஷர்ட் போட்டு டக் இன் பண்ணி இருந்தான். அவன் காட்டும் நெளிவும் சுழிவும்….அக்மார்க்  பெண்மைத்தனமும்…

எப்போதோ ஹதராபாத்தில் லதா அக்கா சொன்னது நினைவுக்கு வந்தது.

“அதெப்படி இவனுங்க எல்லாரும் மாமா ஆனோன்னனவே பொட்டச்சி ஆயிடறானுங்களா இல்ல பொட்டச்சி ஆனோன்னதான் மாமா ஆவுறானுங்களா?”

லதா அக்கா விளையாட்டாய் அப்போது சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஏதோ உணமை இருப்பதாகவே அனுவுக்குப் பட்டது.

தன்னை அனு கவனிப்பதை உணர்ந்த கோவர்ணன் இது தான் சமயம் என அன்றைய ப்ளானை சொல்லத் தொடங்கினான்.

” அனு.. சாரு பேரு அமீர் சேட் … பெத்த ஃபைனான்சியரு… சாருக்கு இந்தப் பட ஹீரோயினு லேகா மேல ஒக்க கண்ணு… அந்துக்கே உன்ன இட்டாந்துருக்கேன்!”

அனு அப்போதுதான் அந்த ரூமில் அங்கங்கே டிஜிடல் போர்டுகளில் ஓடும் ஸ்லைட் ஷோவைப் பார்த்தாள். அதில் அந்த லேகா அழகாய் குழந்தைத்தனமாய் சிரித்துக் கொண்டே தன் மேனியழகை விருந்தாக்கிக் கொண்டிருந்தாள். இதுவரை அனு அவளை படங்களிலோ டிவியிலோ பார்த்ததில்லை.. புதுமுகம் போல…

” இந்தப் பட ஹீரோயின் லேகாவா … அவ எங்க போயிட்டா “

கோவர்ணன் தன் கண்களை ரூமின் இன்னொரு மூலைக்கு ஓட விட்டான்…

“அங்க ஒரு பொண்ணு கறுப்பு ஜீன்ஸ்ல நிக்குதே .. அதுதான் லேகா…”

அனு அந்தப்பக்கம் பார்த்தாள்… பட போஸ்டரில் பர்த்ததற்கு நேர்மாறாக ஒரு சின்னப்பெண் ஒரு வாலிபனுடன் சிரித்துக் கொண்டிருந்தாள்..

போஸ்டரில் முன்னும் பின்னும் துருத்திக் கொண்டிருந்தஅழகெல்லாம் காணோம்… பேடிங்காய் இருக்கலாம்…

“அதான் அவளே இருக்கால்ல… அவளையே உன் பெத்த சாருக்கு அனுப்ப வேண்டியதுதான”

வெடுக்கென்று சொன்னாள் அனு.

கோவர்ணன் அனு அருகில் வந்து ஏதோ சிதம்பர ரகசியம் சொல்வது போல் சொன்னான்…

“லேகா பொண்ணு இப்புடு சிரிச்சிப் பேசுதே அவரு ப்ரொட்யூசரு புள்ள… அவருக்கு புடிச்சுப் போச்சு அதனால அவரு ஸ்ட்ரிக்டா இதுக்கெல்லாம் நோ சொல்லிட்டாரு”

அனு ஒரு அர்த்த சிரிப்பு சிரித்தாள்.

“ஓ லவ்வா! பரவாயில்லையே ஃபீல்டுக்குள்ள வந்ததும் புளியங்கொம்பா புடிச்சிட்டா!”

“லவ்வு லேது ஏமி லேது… ஒன் மன்த் கான்ட்ராக்டு ஒன் மன்து  நான் மட்டும் தான் ஹேண்டில் செய்வேன்னு ப்ரொட்யூசர் சன்னு சொல்லிட்டாரு”

கோவர்தன் தன் காவிப் பற்கள் தெரிய சிரித்தான்.

அனுவிற்கு அங்கேயே வனை அறைய வேண்டும் போலிருந்தது.

“சரிய்யா .. இப்போ நான் என்ன பண்ணனும்?”

“உன்ன மா பெத்த ஃபைனான்சியர்ட புதுப் பொண்ணு சான்சு கேட்டு வந்திருக்குன்னு இன் ட்ரொட்யூஸ் சேசி அவர உன் பக்கம் டைவர்ட் பண்ண சொல்லி டப்பு இச்சினதே மா ப்ரொட்யூசர் சன் தான் !”

“சரிய்யா அப்ப அந்த ஃபைனான்சியர் குண்டன் எனக்கு லேகா தான் வேணும்னு சொல்லிட்டா?”

” அது நடக்காது… ஃபைனான்சியருக்கு புது சரக்குன்னா ஒக்க வீக்னேஸ்ஸூ… உடனே உயுந்துருவாரு !”

பொண்ணுங்கன்னா இவனுங்களுக்கெல்லாம் சரக்கு… மளிகைக்கடையில் காய்கறிக்கடையில் ஒவ்வொண்ணுக்கும் ஒரு ஷெல்ஃப் லைஃப் இருக்குற மாதிரி பொண்ணுங்கள்ளயும் புதுசுன்னா ஒரு ரேட்டு பழசுன்னா ஒரு ரேட்டு…

அனு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு காரியத்தில் கவனம் செலுத்தினாள்…

கோவர்ணன் பின்னாலேயே அந்தபெ த்த ஃபைனான்சியரை நோக்கிப் போனாள்…

ஒரு பத்து அடி தூரத்திலேயே பெத்த ஃபைனான்சியர் தன்னை நோக்கி வரும் இந்தப் புது அழகியை ஃபோகஸ் செய்தார். கிட்டே போய் கோவர்தன் அறிமுகம் செய்ததுமே ஏதோ பல நாள் பழகியது போல் அனுவின் கைகளைப் பற்றிக் கொண்டார்…

அனு சுற்றிலும் நோட்டமிட்டாள்…

எல்லாருமே அந்த பூஜை எப்போது முடியும் த்ங்கள் பூஜையை எப்போது தொடங்கலாம் என காத்திருப்பதாய் அவளுக்குப் பட்டது………

திக் திக் தொடரும்…….

 

Tags : tamil story about tamil scandals, tamil mms and tamil clippings, tamil film debut actress and tamil film pooja, tamil call girl

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>