/* ]]> */
Aug 042011
 

தொடர்கதை – பகுதி 3

 

முந்தைய பகுதிகள்

கால் கால்கேர்ல் காதல் – 1 – எம்.எம்.எஸ்

கால் கால்கேர்ல் காதல் – 2 – பட பூஜை

கால் கால்கேர்ல் காதல் – பகுதி 3 – மார்கழிக் கோலம்

பாவனா….

ஒரு வருடம் முன்பு கூட இரட்டை ஜடை போட்டு பாவாடை சட்டையில் சில்லு விளையாடிக் கொண்டிருந்தவள்… ஆனால் இந்த ஒரே வருஷத்தில் எவ்வளவு மாற்றம்… சட்டை போய் தாவணி வந்தது. சில்லு விளையாட்டு மறுக்கப்பட்டது.. நண்பிகள் வீட்டுக்குப் போக அனுமதி மறுதலிக்கப்பட்டது. அட இதெல்லாம் கூட பாவனா சகித்துக் கொண்டாள்… ஆனால் சத்தம் போட்டு சிரித்தால் குற்றம்… காலை விரித்து உட்கார்ந்தால் குற்றம் என பாட்டி போடும் சட்டங்களும் அம்மாவின் அதட்டல்களும் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே போனதே ஒழிய குறைவதாய் தெரியவில்லை… ஒரு பனிரெண்டு மாதத்தில் தான் போற்றிக் கொண்டாடிய அத்தனை சுதந்திரமும் பொசுக்கப் பட்டதை உணர்ந்தாள் பாவனா…

இந்த மாறுபட்ட வாழ்க்கையில் ஒரே விடுதலை பள்ளிக்கூடம் தான். ஆனால் அதில் கூட கொண்டு போய் விடவும் கொண்டு வந்து சேர்க்கவும் அண்ணனும் சித்தப்பாவும் டர்ன் போட்டுக் கொண்டார்கள்.. பள்ளியில் இருக்கும் அந்த எட்டு மணீ நேரம் மட்டும் அவள் அவளாய் இருந்தாள்… வீட்டுக்கு வந்தால் பிடித்த பாட்டைக் கூட டிவியில் பார்க்க முடியாது…
“கண்கள் இரண்டால்” பாட்டில் ஜெய் தலையாட்டினால்.. அம்மா அவளைப் பார்ப்பாள்… அப்பாவைப் பார்ப்பாள்… அப்பா சேனலை மாற்றுவார்.
எஃப் எம் ரேடியோவில்
“நீங்க யாரை லவ் பண்றீங்க?” என அறிவிப்பாளர் யாரையோ கேட்டால் உடனே ரேடியோ ஆஃப் செய்யப்படும்.. இப்படி நாளாக நாளாக அவளைச் சுற்றி வட்டங்கள் அதிகரித்துக் கொண்டே தான் வந்தது.

பாவ்னாவுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் தருவதற்கென்றே வந்தது மார்கழி பூஜை. அவர்கள் ஊரில் கல்யாணம் முடிக்காத கன்னிப்பெண்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி தினம் கோலம் போட்டு காலையும் மாலையும் அம்மன் கோயிலுக்கு போய் விளக்கேற்றி வரவேண்டும்.இது அவர்கள் ஊர் ஐதீகம். பாவனா மனதார அம்மனை வேண்டினாளோ இல்லையோ, இப்படி ஒரு ஐதீகத்தைப் படைத்த அம்மனுக்கு மனதார நன்றி சொன்னாள். அவள் பக்கத்து வீட்டு கீதாவும் எதிர்த்த வீட்டு ரேணுகாவும் காலை கோலம் போடுவது முதல் அம்மன் கோயில் பயணம் வரை பாவ்னாவுக்கு கம்பெனி…

அம்மன் கோயிலுக்குப் போய் விளக்கேற்றி மாலை சாத்திவிட்டு பரிகாரத்து சுற்றுகையில் மூன்றாம் சுற்றின் முடிவில்தான் பாவ்னா முதன்முதலில் அவனைப் பார்த்தாள்…

மெல்லிய தாடி… ஜீன்ஸ் பேண்ட்…. பாக்கெட்டில் தொங்கும் கூலர்ஸ்… ஏதோ ஒரு மொழி ( சைனீஸ்??) இல எழுதிய டீஷர்ட்… அந்த கிராமத்திலேயே அவன் தனியனாய் தெரிந்தான்… அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது பாவனுக்கு அவனை நேருக்கு நேர் பார்க்காமலேயே புரிந்தது…

தியாகு தினமும் கோயில் வாசலில் நிற்பதும் அவள் காலையும் மாலையும் கோலம் போடுகையில் பைக்கில் அவள் தெரு வழியாகப் போவதும் தற்செயலாய் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல என்பது பாவனாவுன் ட்யூப்லைட் மூளைக்கு கொஞ்சம் கால தாமதமாகத்தான் புரிந்தது… அதுவும் ரேணு சொன்னதால்!

கோலத்தின் மூணாவது புள்ளியை வைக்கையில் தெருவோரம் பைக் சத்தம் கேட்டது…

“வந்துட்டாருடி உங்காளு” என்றாள் ரேணு..

கீதாவின் களுக்கென்ற சிரிப்பு வேறு.

ஏதோ ஒரு இனம்புரியா பெருமை பாவ்னாவிற்குள் புகுந்தது. ஒருவன் தன்னைப் பார்ப்பதெற்கென்றே காலை ஐந்து மணீக்கு பைக்கில் சுற்றுகிறான் என்றால்….

பாவ்னா தியாகுவை நேருக்கு நேர் பார்த்ததும் அப்படி கோலம் போடும் ஒரு நாளில் தான்…

தியாகுவின் பைக் அன்றைக்கு கொஞ்சம் ரோட்டோரமாய்ப் போக..

“பாத்து வண்டிய உடுங்க.. கோலம் அழிஞ்சுடப் போகுது…”
வெடுக்கென்று சொன்னாள் ரேணு!

தியாகு வேண்டுமென்றே இன்னும் கொஞ்சம் ஓரம் ஓட்டினான். பைக் வீலுக்கும் கோலத்திற்கும் ஒரு அரை அடிதான் இடைவெளி.

பாவ்னா தியாகுவை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தாள்…

“ப்ளீஸ்… கோலம் அழிஞ்சுடப் போகுது”

பாவ்னா மெல்லிய குரலில் சொல்ல

“ஓகே ஓகே” என்றபடி அவன் தள்ளி ஓட்டினான்…

கோலம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் தோழிகள் சிரித்தனர்…

பாவ்னாவும் சிரித்தாள்..

அவளுக்குத் தெரியாது இன்னும் ஓரிரு மாதத்திற்குள் அவள் முழுக்கோலமும் ஒரு சென்னை சேட்டிடம் அடகு வைக்கப்படப் போவதை !

திக் திக் தொடரும்…

- அபி

Tags : Tamil story on young tamil girl blackmailed for tamil mms and callgirl intervening

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>