உங்கள் ப்ளாக்கர் ப்ளாக் ட்ராஃபிக்
அதிகரிக்க பத்து வழிகள்
1. பின்னூட்டங்கள் : மற்ற நண்பர்களின் ப்ளாக்குகளை படித்து பின்னூட்டமிடுங்கள். அதுவே உங்கள் ப்ளாக்கிற்கு அந்த நண்பர்களை வரவழைத்து படிக்கத் தூண்டும்
2. திரட்டிகளில் சப்மிட் செய்யுங்கள் : இண்ட்லி, தமிழ்மணம், தமிழ் 10, உலவு, தமிழ்வெளி, திரட்டி போன்ற திரட்டிகளில் உங்கள் பதிவுகளை சப்மிட் செய்யுங்கள். அது அந்த திரட்டிகளை பார்வையிடுவோரை உங்கள் ப்ளாக்கையும் பார்க்கத் தூண்டும்.
3. ஆன்லைன் தளங்களில் சென்று உங்கள் பின்னூட்டம் இடுங்கள். அதில் உங்கள் கட்டுரைகளை வெளியிடுங்கள். அது உங்களுக்கு நல்ல பரிச்சயத்தையும் நண்பர்களையும் தேடித் தரும்.
4. பவுன்ஸ் ரேட் குறைத்தல்: ஒரு நல்ல பளாக் தளத்திற்கு அழகு அதன் குறைவான பவுன்ஸ் ரேட் தான் . பவுன்ஸ் ரேட் என்பது எத்தனை வாசகர்கள் உங்கள் ளத்தில் முதல் பக்கத்தை படித்து விட்டு மட்டும் வெளியேறி விட்டார்கள் என்பது தான். ஆகவே உங்கல் தளத்திற்கு ஒருவரை வரவழைத்தால் அவரை எந்த அளவு உங்கள் தளத்திலேயே மற்ற கட்டுரைகளை பார்வையிட வைக்க முடியும் என முயற்சி செய்யுங்கள். அதற்கு நீங்கள் ப்ளாக்கரில் உள்ள recent articles with thumbnails , மற்றும் link within போன்ற விட்கெட்டுக்களை பயன்படுத்துங்கள் .
5. ஆர்வத்தை தூண்டும் தலைப்புகள் : உங்கள் கட்டுரைகளுக்கு நீங்கள் எப்படி பெயரிடுகிறீர்கள் என்பது முக்கியம். டைட்டிலை வைத்தே நாம் இதை படிக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யும் வாசகர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல்.
6. தொடர்ந்து எழுதுங்கள் : இரண்டு நாட்களில் நான்கு கட்டுரை எழுதிவிட்டு பின்பு ஒரு வாரத்திற்கு ப்ளாக் பக்கமே போகாமல் இருப்பது படிப்பவர்களிடையே ஆர்வத்தை குறைக்கும். ரெகுலராக எழுதுங்கள். உங்களுக்கு நேரமில்லாத சமயத்திலும் உங்கள் பதிவுகள் வர ஷெட்யூலிங்க் வசதியை உபயோகியுங்கள். அப்படி செய்தால், நீங்கள் எழுதிய பதிவு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தேதியில் வெளி வரும்.
7. சோசியல் மீடியா : ட்விட்டர் , ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், கூகுள் பஸ் வசதிகளை பயன்படுத்துங்கள் . அதைவைத்து உங்கள் நண்பர்களை உங்கள் பதிவுகளை படிக்கத் தூண்டுங்கள்.
8. லிங்க் கொடுங்கள் : மற்ற நல்ல கட்டுரைகளுக்கு லிங்க் கொடுங்கள். அவர்கள் பிங்க் பேக் வசதி வைத்திருந்தால் உங்கள் ப்ளாக் பற்றி அந்த ப்ளாக் நடத்துபவருக்கு தெரியப்படுத்தும்.
9.ஆர்.எஸ்.எஸ்.ஃபீட் : நல்ல ஃபீட் வசதியினை பயன்படுத்தி உங்கள் வாசகர்களுக்கு மெயில் மூலம் உங்கள் பதிவுகள் சென்றடைய ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் ட்ராஃபிக்கை பெருமளவு உயர்த்தும்.
10. பொறுமையாக இருங்கள் : ப்ளாக் என்பது ஒரு மரம் மாதிரி. அது ஒரே நாளில் காய்க்காது. மெல்ல மெல்ல உங்கள் முயற்சியால் அது வளரும். இன்னும் ஓரிரு வருடங்களில் அது பிரபலமாகும். அதனால் தொடர்ந்து எழுதுங்கள் ! வாழ்த்துக்கள் !
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
the best poets of his era and