/* ]]> */
Aug 062011
 

1. தனக்கு சப்போர்ட்டா வீரபாண்டி இருக்கிறார்னு அழகிரி நினைக்கிறார். அதனால்தான் சேலத்துக்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார். வீரபாண்டியார் அரெஸ்ட்டாகியிருக்கிற சூழ்நிலையில், அழகிரி பற்றி போலீஸ் தோண்டித் துருவும் விஷயங்கள் அழகிரியின் கைது வரைக்கும் போகலாம் என்கிற பதட்டத்தை திமுக வட்டாரத்தில் ஏற்படுத்தியிருக்கு. அழகிரி சம்பந்தமாகவும் அவரோட குடும்பத்தினர் சம்பந்தமாகவும் தோண்டி எடுக்கிற ரெக்கார்ட்ஸையெல்லாம் பத்திரமாக வைத்துள்ளார்கள். அழகிரியை கைது செய்வதற்கு உரிய நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் என்பதால், மக்களவை சபாநாயகரின் ஒப்புதலும் வேண்டும் இல்லையா?. ஆனால், அதே நேரத்தில், அழகிரிக்கு வேண்டியவர்களை கைது செய்யும் வேலைகள் வேக வேகமா நடந்துக்கிட்டிருக்கு. 15 வருஷமா அவர்கிட்ட கார் டிரைவரா இருந்தவர் மேலே கேஸ் போட்டு கைது பண்ணீயிருந்தாங்க.
2. மதுரைஆண்டாள்புரம் அக்ரிணி வளாகத்தில், மத்திய அமைச்சர் அழகிரியின் குடும்பத்திற்கு சொந்தமான ராயல் கேபிள்விஷன் (ஆர். சி.வி.)என்ற கேபிள் ஒளிபரப்பு அலுவலகத்தில் சோதனை நடந்தது. இதுபோல நெல்லையில் சன் குழுமத்தின் உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்திலும், நாமக்கலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சராக உள்ள காந்தி செல்வனின் தம்பி சுரேஷ் நடத்தி வரும் ஆகாஷ் டிவியிலும் சோதனை நடந்தது.
3. ஒரு மன நோயாளி கேரள முதல்வரின் சீட்டில் அமர்ந்து அதிகாரம் செய்தார். இவர் முதல்வர் உம்மன் சாண்டியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து , முதல்வரது இருக்கையில் அமர்ந்து தொலைபேசியில் அமைச்சர்கள் உட்பட பலரையும் அழைத்து தான் பிரதமர் எனக்கூறி அதிகார தோரணையில் பேசினார். “யார் நீங்கள்? இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீகள்?” என்று அமைச்சர்கள்  கேட்டனர்.  அத்ற்கு அவர்,” நான்தான் பிரதம மந்திரி. உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள். தருகிறேன்.” என்று கூறியதைக் கேட்டு எரிச்சலடைந்த இரு அமைச்சர்கள்  அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
4. சமீபத்தில் அதிமுக செயற்குழு நடந்தது. செயற்குழு கூடுவதற்கு முன்பாக அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் மகளிரணி கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதுரை பாண்டியம்மாள், கட்சியிலுள்ள ஆண்களுக்கு டாஸ்மாக் கடைகள் ஒதுக்கீடு செய்வதைப் போல பெண்களுக்கும், டாஸ்மாக் பார் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்த மகளிரணியும் கைதட்டி வரவேற்ற்து. இந்திராவோ , சத்துணவு அங்காடிப் பணிகளுக்கு டாஸ்மாக் பாரெல்லாம் ந்மக்கு வேண்டாம், என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.
5. நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கமல் ராஜபக்சே தலைமையிலான சிங்கள எம்.பி.க்களும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா பேசும்போது,” 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் சிங்களர்களின் மக்கள் தொகை 65 லட்சம். தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சம். 60 வருடத்தில் சிங்கள மக்கள் தொகை ஒண்ணரைக் கோடியாக உயர்ந்து விட்டது. தமிழர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. அதற்குக் காரணம் தமிழர்களின்மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைதான். ஐ.நா. அமைத்த கமிட்டியில் போர்க் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் பிரதிநிதியான இலங்கை எம்.பி.க்களின் வருகைக்கு எனது எதிர்ப்பைத் தெர்விக்கும் வகையில், வெளிநடப்பு செய்கிறேன்.” என அவையில் பதிவு செய்துவிட்டு வெளியேறினார்.

Tags : Tamilnadu political developmenta about DMK leader M.karunanidhis son M.K.Azhagiri and close aide Veerapandi Arumugam to prevent imminent arrest of Azhagiri by the ADMK Jayalalitha government

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>