/* ]]> */
Oct 112011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: தென்றல் வந்து தீண்டும் போது

படம் :அவதாரம்

எந்த நேரமும் என் மனம் முணுமுணுத்தவண்ணம் இருக்கும் பாடல்..எனக்கு மிக மிக ஸ்பெஷலானது இது.

ஆன்மாவின் ஆழ நீளம் வருடும் தேன் தடவின மயிற்பீலியாய் இளையராஜாவின் லேசான கரகரத்த குரல்..எத்தனை இயல்பாகப் பொருந்துகிறது நாசருக்கு? வழக்கமான நாயகன் நாயகிக்கு உரிய லுக்ஸ் இல்லாமல் இவரும் ரேவதியும் இருப்பதே பெரிய காரணம்  தான் இந்தப்பாடலின் வெற்றிக்கு.

பிக்சரைசேஷனை சிலாகிப்பதா, பார்வையற்ற ரேவதிக்கு மற்ற புலன்கள்- தொடு உணர்வு, வாசம் இவற்றின் மூலம் ,காதலையும் உலகின் மீதான விருப்பத்தையும் தூண்டும் வண்ணமான கான்செப்டை சிலாகிப்பதா? இல்லை..வாழ்வின் துயரங்களை எல்லாம் கொஞ்சம் மறக்கச்செய்து..”எத்தனை கோடி இன்பம் இறைவா” என்று சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகளைப் பேசுவதா…மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ்களில் என் உள்ளம் உருக்கும் பாடல் “தென்றல் வந்து தீண்டும் போது”…ம்ம்ம்ம்..

 

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணே

தென்றல் வந்து..

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது..

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது

ஓட நீரோட இந்த உலகம் அது போல

ஓடம் அது ஓடும் இந்த காலம் அது போல

நெலயா நில்லாது நெனைவில் வரும் நெறங்களே

தென்றல் வந்து..

ஈரம் விழுந்தாலே  நிலத்துல எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அல போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த எசயா கூவுதம்மா

கிளியே கிளியினமே அதக் கதயா பேசுதம்மா

கதயாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்

தென்றல் வந்து……..

தொகுப்பு

கசியும் மனதோடு..

..ஷஹி..

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>