தொட்டாச்சிணுங்கி – கவிதை – பிரியன்
எத்தனைக் கோடைகள்? எத்தனைக் குளிர்கள்? கோடையை.. கோடையென்றும் குளிரை.. குளிரென்றும் அறியாமல் கடந்தவள்.. இன்று என்னுடனான உன்னிருத்தல் என் உருகு நிலையையும் உறை நிலையையும் தீர்மானிக்க.. நீ நீயாகவும் நான் நானாகவும் இருந்த நாட்களில் இருந்தது இல்லையடா இத்தனை அவஸ்தைகள். செல்லிழைகளில்.. நீ நெய்த மெல்லிழைகளில் கட்டி வைத்திருக்கிறேன்.. கவிதைக்குள் கனவுகள் வைத்து கனவுகளில் நீ சொல்லிப்போன கவிதைகளை திடமானவள்தான்.. ஆனால் உன்னொருத் தீண்டலில் நீர்த்துப் போகிறேன்.. இந்த தொட்டாச்சிணுங்கி.. இப்பொழுதெல்லாம் நீ தொடுவதற்காய்… Read more →



