குரு பகவானின் சிறப்புகள்
கேள்வி 1:- . குரு தலமான ஆலங்குடியின் புராதனப் பெயர் என்ன ?
பதில்:- ‘ திருஇரும்பூளை ‘ என்பதாகும்.
கேள்வி 2.:- உலக உயிர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் யார் ?
பதில்:- தட்சிணாமுர்த்தி. ( சிவபெருமான் ).
கேள்வி 3:- . ராசிச் சக்கரத்தில் பெயர்ச்சி பெறும் குரு யார்?
பதில்:- நவகிரக குருவான பிருகஸ்பதி.
கேள்வி 4 :- குருவிற்குரிய நட்சத்திரம் என்ன?
பதில்:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
கேள்வி 5:- . ஜாதகத்தில் குருதசை எத்தனை ஆண்டுகள் நடக்கும்?
பதில்:- 16 ஆண்டுகள்.
கேள்வி 6:- குரு பார்க்கும் பார்வை எத்தனை?
பதில்:- ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் பார்வைகள்.
கேள்வி 7:- மேஷ குருவின் பார்வை பெறும் ராசிகள் எவை?
பதில்:- சிம்மம், துலாம், விருச்சிகம்.
கேள்வி 8:- குருவிற்கு உகந்த மலர் எது?
பதில்:- முல்லை.
கேள்வி 9:- பிருஹஸ்பதி என்பதன் பொருள் என்ன?
கல்வியில் சிறந்தவர் .
கேள்வி10:- குருவை வழிபடுவதால் ஏற்படும் பலன் யாது?
செல்வ வளம்; திருமண யோகம்: புத்திரப்பேறு: ஞானம் ஆகியவையாகும்.
Tags : Important aanmeegam tips about tamil astrology God Planet Guru and Guru Bhagawans features
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments